இந்த டெக்னாலஜி இல்லாத காரையே இனி பார்க்க முடியாது போல!! அமெரிக்க கார் நிறுவனத்தின் புதிய கார் - சோதனை ஓட்டம்!

ஜீப் காம்பஸ் மற்றும் மெரிடியன் (Jeep Compass & Meridian) கார்களில் விரைவில் அடாஸ் வசதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கிடையில், ஜீப் மெரிடியன் கார் ஒன்று மறைப்புகளுடன் சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஜீப் ஆகும். இந்தியாவில் பிரீமியம் தரத்திலான எஸ்யூவி கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக ஜீப் தன்னை முன்னிலைப் படுத்தி வருகிறது. அதாவது, ஜீப் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் கார்கள் அனைத்தும் சற்று விலைமிக்கவையாக உள்ளன.

jeep meridian suv tested

இருப்பினும், ஜீப் காம்பஸ் எஸ்யூவி காருக்கு ஓரளவிற்கு நல்ல வரவேற்பு இந்தியாவில் உள்ளது. இதன் காரணமாகவே, காம்பஸின் லாங் வீல்பேஸ் வெர்சனாக மெரிடியன் காரை சில வருடங்களுக்கு முன் ஜீப் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், ஜீப் காம்பஸ் மற்றும் மெரிடியன் என இரு கார்களும் இந்திய மார்க்கெட்டில் விரைவில் அப்டேட் செய்யப்பட உள்ளன.

விற்பனையை அதிகரிக்க, புதிய காம்பஸ் மற்றும் மெரிடியன் கார்களில் புதிய தொழிற்நுட்ப வசதிகளை ஜீப் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், புதிய ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் ஒன்று முழுவதும் மறைப்புகளுடன் பொது சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

jeep meridian suv tested

இந்த படங்களில், சோதனை மெரிடியன் காரில் சில வித்தியாசமான தொழிற்நுட்பங்கள் பொருத்தப்பட்டு உள்ளதை காண முடிகிறது. இதை வைத்து பார்க்கும்போது, புதிய மெரிடியன் எஸ்யூவி காரில் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடாஸ் மட்டுமின்றி, வேறு சில டெக்னிக்கல் அப்டேட்களும் புதிய மெரிடியன் காரில் கொண்டுவரப்படலாம்.

மேலும், இந்த சோதனை மெரிடியன் காரில் போஸ்ச் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பதை படங்களில் காணலாம். ஆகையால், இந்த குறிப்பிட்ட சோதனை ஓட்டம் போஸ்ச் நிறுவனத்தின் ஆராய்ச்சி & சோதனை அமைப்பின் கீழ் நடத்தப்பட்டு இருக்கலாம். மெரிடியன் கார் அடாஸை பெற்றால், புதிய காம்பஸ் எஸ்யூவி காரும் அடாஸை பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

jeep meridian suv tested

இருப்பினும், இந்த இரு ஜீப் எஸ்யூவி கார்களின் நீளம் வேறு வேறு என்பதால், அடாஸ் தொழிற்நுட்பங்களும் அதற்கேற்ப சிறிய மாற்றங்களுடன் வழங்கப்படும். இதில் குறிப்பாக, புதிய ஜீப் மெரிடியன் இந்திய சாலைகளுக்கு ஏற்ற அடாஸ் தொழிற்நுட்பத்தை பெற்று அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனையில் ஜீப் மெரிடியனுக்கு போட்டியாக உள்ள டாடா ஹெரியர்/ சஃபாரி, கியா செல்டோஸ், ஹோண்டா எலெவேட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்கள் அனைத்தும் அடாஸை கொண்டுள்ளன.

ஆனால், தற்சமயம் மெரிடியனில் அடாஸ் இல்லை. ஏபிஎஸ், 6 ஏர்பேக்குகள் என வழக்கமான பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. ஜீப் நிறுவனத்தில் கிராண்ட் செரோக்கி காரில் மட்டுமே தற்போதைக்கு அடாஸ் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக, அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் மானிடரிங், லேன் கீப் அசிஸ்ட், ஹை பீம் அசிஸ்ட், தானியங்கி எமர்ஜென்சி பிரேக்கிங் உள்ளிட்ட வசதிகளை கிராண்ட் செரோக்கி காரில் பெற முடிகிறது.

jeep meridian suv tested

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், ஜீப் கார்களின் ஒரே குறை என்னவென்றால், அவற்றின் சற்று அதிகப்படியான விலை ஆகும். அடாஸ் உள்ளிட்ட அப்டேட்களினால், ஜீப் காம்பஸ் மற்றும் மெரிடியன் கார்களின் விலைகள் நிச்சயமாக இன்னும் கூடுதலாக அதிகரிக்கப்படும். இருப்பினும், காரில் அடாஸை எதிர்பார்ப்பவர்கள் அதிகரித்து வருவதால், வரும் காலத்தில் ஜீப் மெரிடியன் மற்றும் காம்பஸ் கார்களின் விற்பனை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 4, 2024, 23:42 [IST]
English summary
Jeep meridian suv tested with adas spy images out
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X