வெறும் 30 லட்ச ரூபாய் தான்... பிராண்ட்-நியூ அமெரிக்கன் ஸ்டைல் காரில் ஏரியாவில் கெத்து காட்டலாம்!!

அமெரிக்கன் ஸ்டைல் கார்களுக்கு இந்தியாவில் எப்போதுமே நல்ல வரவேற்பு உள்ளது. ஜீப் இந்தியா (Jeep India) நிறுவனத்தின் 7-சீட்டர் காராக மெரிடியன் (Meridian) விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், மெரிடியனில் புதியதாக 'எக்ஸ்' (X) என்கிற பெயரில் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஜீப் மெரிடியன் காரை நகர்புற சாலைகளுக்கு கொண்டு செல்வது மட்டுமின்றி, கரடு, முரடான ஆஃப்-ரோடுகளுக்கும் கொண்டு செல்லலாம். புதிய மெரிடியன் எக்ஸ் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

புதிய ஜீப் மெரிடியன் எக்ஸ் ஸ்பெஷல் எடிசன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.29.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு விலையா... என அதிர்ச்சியாக வேண்டாம். ஏனெனில், ஜீப் மெரிடியன் கார்களிலேயே விலை குறைவானதாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, மெரிடியன் காரின் மற்ற வேரியண்ட்களின் விலைகள் இன்னும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

jeep meridian x special edition

விலை குறைவானதாக இருப்பினும், ஜீப் மெரிடியன் காருக்கே உண்டான ஸ்டைலிலும் தொழிற்நுட்ப அம்சங்களில் எந்த குறையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் மற்ற மெரிடியன் கார்களை காட்டிலும் பிரீமியம் தரத்திலான தோற்றத்தை புதிய மெரிடியன் எக்ஸ் ஸ்பெஷல் எடிசன் கொண்டுள்ளது.

புதிய மெரிடியன் எக்ஸ் ஸ்பெஷல் எடிசனின் தோற்றத்தை பொறுத்தவரையில், காரை சுற்றிலும் கீழ்பகுதியில் காரின் உடல் நிறத்தில் கோடு போன்ற பேனல்களை பெறலாம். காரின் மேற்கூரை கிரே நிறத்தில் கிடைக்கும். அதேபோன்று, அலாய் சக்கரங்களில் கிரே நிறத்திலான குழிகள் கொடுக்கப்பட்டு உள்ளன.

காருக்கு உள்ளே புதிய சைடு மோல்டிங், பெடில் விளக்குகள், கேபினை சுற்றிலும் விளக்குகள், சன் ஷேட்கள், காற்று சுத்திகரிப்பான் மற்றும் டேஸ்போர்டு கேமரா உள்ளிட்டவற்றை மெரிடியன் எக்ஸ் காரில் பெறலாம். மேலும், பிரீமியம் தரத்திலான கார்பேட் பாய்களும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், விருப்பப்படுவோர் பின் இருக்கை பயணிகளுக்கான பொழுதுப்போக்கு பேக்கேஜையும் பெறலாம்.

jeep meridian x special edition

ஆனால், இந்த பேக்கேஜிற்கு கூடுதலாக பணம் செலுத்த வேண்டியிருக்கும். மற்றப்படி, என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் செட்-அப்களில் எந்த மாற்றமும் இல்லை. புதிய மெரிடியன் எக்ஸ் காரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் கிடைக்கும். இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 10.8 வினாடிகளில் எட்டிவிடலாம். இந்த காரின் டாப்-ஸ்பீடு 198kmph ஆகும்.

புதிய மெரிடியன் எக்ஸ் காரை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்ய ஜீப் திட்டமிட்டுள்ளது. அதாவது, நீண்ட காலத்திற்கு இந்த ஸ்பெஷல் எடிசன் கார் விற்பனையில் இருக்காது. இந்த கார் குறித்து கருத்து தெரிவித்த ஜீப் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குமார் பிரியேஷ், ஜீப் பிராண்டின் கண்டுபிடிப்பு மற்றும் ஓட்டுனர் அனுபவத்தை பிரதிபலிக்கக் கூடியதாக புதிய மெரிடியன் எக்ஸ் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான ஸ்பெஷல் எடிசன் கார்களை அறிமுகம் செய்வதன் முக்கிய நோக்கமே கார்கள் விற்பனையை அதிகரிப்பது ஆகும். தற்போது, எக்ஸ் ஸ்பெஷல் எடிசனை ஜீப் நிறுவனம் அறிமுகம் செய்திருப்பதும், மெரிடியன் காரின் விற்பனையை அதிகரிக்க வேண்டியே ஆகும். ஆதலால், புதிய எக்ஸ் ஸ்பெஷல் எடிசனின் அறிமுகத்தால் ஜீப் மெரிடியன் காரின் விற்பனை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 5, 2024, 19:25 [IST]
English summary
Jeep meridian x special edition introduced price features engine all details here
மேலும்... #jeep #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+