ரூ2.80 லட்சத்தை மிச்சம் பண்ணனுமா உடனே இந்த காரை வாங்குங்க! ஏகப்பட்ட பணம் மிச்சமாகும்!
ஜீப் நிறுவனம் தனது கார்களுக்கான தள்ளுபடிகளை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி இந்நிறுவனத்தின் கார்களை வாங்குபவர்களுக்கு ரூபாய் 2.80 லட்சம் பணத்தை மிச்சப்படுத்த வாய்ப்புகள் உள்ளன. இந்நிறுவனத்தின் கார்கள் எல்லாம் மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில், இந்த தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஜீப் நிறுவனம் இந்தியாவில் தற்போது நான்கு கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நான்கு கார்களும் பிரிமியம் ரக கார்களாக உள்ளன. இதன் விலை அதிகமாக இருப்பதால் குறிப்பிட்ட செக்மெண்டில் உள்ள மக்கள் மட்டுமே இந்த காரை விரும்பி வாங்குவார்கள். இந்த காரின் தரங்கள் மற்றும் இதில் உள்ள அம்சங்கள் எல்லாம் சிறப்பாக இருப்பதால் இந்த செக்மெண்டில் உள்ள மக்களுக்கு இந்த கார்கள் மீது தனி மவுசு இருக்கிறது.

தற்போது ஜீப் நிறுவனம் இந்தியாவில் காம்பஸ், மெரிடியன், கிராண்ட் செரோக்கி மற்றும் விராங்க்ளர் ஆகிய கார்களை விற்பனை செய்து வருகின்றன. இந்த கார்கள் ரூபாய் 20 லட்சம் என்ற விலையில் இருந்து தற்போது விற்பனையாகி வருகிறது. இந்த கார்களுக்கான தள்ளுபடிகளை தற்போது நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ரூ1.15 லட்சம் முதல் ரூ1.85 லட்சம் வரையிலான தள்ளுபடி மற்றும் இதர பலன்கள் கிடைக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதன்படி ஜீப் நிறுவனம் தனது மெரிடியன் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 2.80 லட்சம் வரை தள்ளுபடி மற்றும் பலன்களை அறிவித்துள்ளது. இதே போல ஜீப் காம்பஸ் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 1.15 லட்சம் வரை தள்ளுபடி மற்றும் பலன்களை அறிவித்துள்ளது. இது மிகப்பெரிய அளவிலான தள்ளுபடி ஆகும். இதன் மூலம் அந்த இரு கார்களின் விற்பனையும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தள்ளுபடி பலன்களோடு மூன்று ஆண்டுகள் வரை இலவச பராமரிப்பு மற்றும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் செலக்டட் ஃபார் யூ புரோகிராம் மூலம் சுலபமான எக்ஸ்சேஞ்ச் வசதி ஆகியவை இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இது போக கார்ப்பரேட் தள்ளுபடியாக ஜீப் காம்பஸ் காருக்கு ரூபாய் 15 ஆயிரம் வரையிலும், ஜீப் மெரிடியன் காருக்கு ரூபாய் 20000 வரையிலும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக கிராண்ட் செரோகி காருக்கு ரூபாய் 11.85 லட்சம் வரை தள்ளுபடி மற்றும் பலன்களை அறிவித்துள்ளது. இது மிகப்பெரிய அளவிலான தள்ளுபடி ஆகும். கிராண்ட் செரோக்கி காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த தள்ளுபடி மூலம் மிகப்பெரிய அளவில் பலன் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த காரின் விற்பனையை அதிகப்படுத்துவதற்காக இந்த தள்ளுபடி அந்நிறுவனம் வழங்கி உள்ளது.

இதுபோக ஜீப் நிறுவனம் என்ற காரை தற்போது விற்பனை செய்து வருகிறது. இந்த கார் ரூ62.65 லட்சம் விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காருக்கு தற்போது எந்த விதமான தள்ளுபடிகளும் அறிவிக்கப்படவில்லை. ஜீப் நிறுவனம் தனது காம்பஸ் காரை ரூபாய் 20.69 லட்சம் என்ற விலையிலும் மெரிடியன் காரை ரூ33.60 லட்சம் என்ற விலையிலும், கிராண்ட் செரோக்கி காரை ரூ80.50 லட்சம் என்ற விலையிலும் விற்பனை செய்து வருகிறது.
இந்த விலைகள் எல்லாம் எக்ஸ்ஷோரூம் விலைகள் தான் டீலர்ஷிப்பிற்கு சென்றால் தான், ஆன் ரோடு விலை குறித்தும் இந்த பணத்திற்கு கிடைக்கும் பலன்கள் குறித்தும் பல்வேறு தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். ஜீப் நிறுவனம் அடுத்து தனது மெரிடியன் மற்றும் காம்பஸ் காரை அப்டேட் செய்து அடாஸ் தொழில்நுட்பத்துடன் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜீப் மெரிடியன் காரில் போஷ் நிறுவனத்தின் சென்சார்கள் பொருத்தப்பட்டு அது இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஸ்பை புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதில் அடாஸ் தொழில்நுட்பம் குறித்த சென்சார்கள் தெளிவாகத் தெரிந்தது. மற்றபடி வேறு எந்த மாற்றமும் இல்லாமல் அடாஸ் தொழில்நுட்பம் மற்றும் சேர்க்கப்பட்டு இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிரீமியம் ரக கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த செக்மெண்டில் ஜீப் நிறுவனம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளது என்றே சொல்லலாம். ஜீப் நிறுவனங்களின் தயாரிப்புகள் எல்லாம் தரமான தயாரிப்புகளாக இருப்பதால் மக்கள் பலர் அதை விரும்புகிறார்கள். தொடர்ந்து இந்நிறுவனம் இந்த செக்மெண்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications









