இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
ஜீப் நிறுவனம் இந்தியாவில் தனது விராங்களர் காரின் பேஸ்லிஃப்ட் வெர்ஷனை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு ஆப் ரோடு ரக எஸ்யூவி காராகும்0 இந்த கார் சர்வதேச அளவில் கடந்த ஆண்டு அறிமுகமான நிலையில், சில மாற்றங்களுடன் இந்த கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் குறித்து நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
டிசைன்: ஜீப் நிறுவனம் இந்த விராங்களர் பேஸ்லிஃப்ட் காரின் டிசைனை பொருத்தவரை இதற்கு முந்திய மாடலை விட சற்று முரட்டுத்தனமாகவும் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முன் பக்கம் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் முன் பக்கம் ஏழு ஸ்லாட் கொண்ட கிரில் வழங்கப்பட்டுள்ளது.

இது இந்த காருக்கு மார்டனான லுக்கை தருகிறது. மேலும் முன்பக்கம் உள்ள வட்ட வடிவிலான ஹெட்லைட் இந்த காருக்கு ஒரு ரெட்ரோ மாடன் லுக்கை கொடுக்கிறது . ஒட்டுமொத்தமாக இந்த கார் ஒரு ரெட்ரோ டிசைன் லுக்கை பிடித்தமான நபர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வாடிக்கையாளர்கள் பலர் இப்படியான டிசைன் விரும்பிகளாக தான் இருக்கிறார்கள்.
உட்புறம்: பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஜீப் பிராங்க்ளர் காரின் உட்புறத்தை பொருத்தவரை டேஷ்போர்ட்டில் சிறிய அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முக்கியமாக 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடைமென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக காபினில் எச்விஏசி கண்ட்ரோல்கள் மற்றும் சுவிட்ச் கியர்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக இந்த காரின் உட்புறம் முழுவதும் கருப்பு நிற தீம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்குமோ அந்த அம்சங்கள் எல்லாம் எந்த மாற்றமும் இல்லாமல் இடம் பெற்றுள்ளது. ஆஃப் ரோடு அம்சங்கள் கொண்ட காராக இருந்தாலும் இந்த காரின் உட்புறம் நல்ல வசதி கொண்ட காராக தான் இருக்கிறது.
அம்சங்கள்: ஜீப் விராங்களர் பேஸ்லிஃப்ட் காரை பொருத்தவரை பல்வேறு புதிய அம்சங்கள் உட்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமாக வாய்ஸ் ரெககனேஷன் உட்பகுத்தப்பட்டுள்ளது. இதுபோக வயர்லெஸ் போன் சார்ஜர் 12 வழிகளில் முன்பக்க சீட்டுகளை அட்ஜஸ்ட் செய்யும் ஆப்ஷன், டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, அடாஸ் தொழில்நுட்பம் ஆகிய உட்பகுத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் முன்பக்க கொலிஷன் அவாய்டன்ஸ், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ள அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதுபோக இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களுக்காக ஆறு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, பார்க் அசிஸ்டன்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.
இன்ஜின்: புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள ஜீப் விராங்களர் காரின் இன்ஜினை பொறுத்தவரை அதே இரண்டு லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 270 பிஎஸ் பவரையும், 400என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இஞ்சின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 4வீல் டிரைவ் சிஸ்டம் இருக்கிறது. கூடுதலாக பல்வேறு விதமான டிரைவ் மோடுகளும் இதில் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த காரில் லோ ரேஞ்ச் ட்ரான்ஸ்ஃபர் மற்றும் லாகின் டிஃப்ரன்ஷியல் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இதனால் ஆஃப் ரோட்டில் இந்த காரில் பயணிக்கும் போது இதை பயன்படுத்தி சிறப்பான ஆஃபர் அனுபவத்தை பெற முடியும். சர்வதேச மார்க்கெட்டில் ஹைபிரிட் மற்றும் இவி வேரியண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவிற்கு இந்த இரண்டு வேரியன்ட்களும் விற்பனைக்கு வரவில்லை.
விலை: இந்த ஜீப் விராங்களர் காரை பொருத்தவரை ரூபாய் 67.65 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் ஆகியுள்ளது. மொத்தம் இரண்டு வேரியண்ட்களில் இது விற்பனைக்கு வருகின்றன. அன்லிமிடெட் மற்றும் ரூபிகான் ஆகிய வேரியன்ட்கள் விற்பனைக்கு வருகிறது. இதில் அன்லிமிடெட் வேரியன்ட் ரூபாய் 67.65 லட்சம் என்ற விலையிலும், ரூபிக்கான் வேரியன்ட் ரூபாய் 71.65 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது.
டிரைவ்ஸ்பர்க் கருத்து: ஜீப் இந்தியா நிறுவனம் விராங்களர் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கார் விலை அதிகமாக இருப்பதால் இந்த காரை விரும்பும் ஒரு சிலர் மட்டுமே இதை வாங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆஃப் ரோடு விரும்பிகள் பலர் இந்த காரை வாங்க ஏராளமான விரும்புவார்கள்.


Click it and Unblock the Notifications









