இவி சேல்ஸில் பட்டைய கிளப்பும் இந்திய மாநிலம்.. தமிழ்நாடோ, கர்நாடகாவோ இல்ல! மோடிஜிக்கு தெரிஞ்சா சந்தோஷப்படுவாரு

மின்சார வாகன விற்பனையில் இந்திய மாநிலம் ஒன்று மிக சிறப்பான வளர்ச்சியைக் கண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது எந்த மாநிலம்? அங்கு எத்தனை யூனிட்டுகள் மின்சார வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன? கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டின் விற்பனை வளர்ச்சி சதவிகிதம் எவ்வளவு என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஜார்கண்ட் மாநிலத்திலேயே மிக அதிக எண்ணிக்கையில் மின்சார வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. இங்கு கடந்த 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 2023 ஆம் ஆண்டில் முயல் வேகத்தில் மின்சார வாகனங்கள் விற்பனையாகி இருப்பதை தற்போது வெளியாகி இருக்கும் புள்ளி விபரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதன் விளைவாக இந்தியாவை பெருமிதம் சேர்க்கும் மாநிலமாக ஜார்கண்ட் மாறியிருக்கின்றது.

Jharkhand is the leader in e-vehicle sales

2023 ஆம் ஆண்டில் அம்மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 44 ஆயிரத்து 45 யூனிட்டுகள் வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது மிக மிக அதிகம் ஆகும். 2022 ஆம் ஆண்டில் 4 லட்சத்து 90 ஆயிரத்து 452 யூனிட்டுகள் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகிய நிலையிலேயே இந்த மாபெரும் வளர்ச்சியை ஜார்கண்ட் வாகன பிரிவுச் சந்தித்து இருக்கின்றது.

சதவிகிதத்தில் பார்த்தோமேயமானால் இது 10.93 சதவீதம் வளர்ச்சியாகும். அதேவேளையில், அதே மாநிலத்தில் மின்சார வாகன விற்பனை எப்படி இருக்கின்றது என பார்த்தால், அது மிக மிக அமோகமாக இருப்பது தெரிய வந்திருக்கின்றது. 21,122 யூனிட் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஜார்கண்ட்டில் விற்பனையாகி இருக்கின்றன.

Electric vehicle

மின்சார இரண்டு சக்கர வாகனம், மின்சார மூன்று சக்கர வாகனம் மற்றும் மின்சார வர்த்தக பயன்பாட்டு வாகனம் அனைத்தும் இதில் அடங்கும். அதேவேளையில், 2022ஆம் ஆண்டில் இதே மாநிலத்தில் மின்சார வாகன விற்பனை 13,682 ஆக மட்டுமே இருந்தது. இதைக் காட்டிலும் சென்ற 2023 ஆம் ஆண்டில் விற்பனையாகி இருப்பது 54.38 சதவீதம் அதிகம் ஆகும்.

அதாவது, ஜார்கண்ட் மாநிலத்தில் ஃப்யூவலில் இயங்கும் வாகனங்கள் வெறும் 10 சதவீதம் மட்டுமே விற்பனை வளர்ச்சியைக் கண்டிருக்கின்ற சூழலில் மின்சார வாகனங்களின் விற்பனையோ 50 சதவீதத்திற்கும் அதிகமாக விற்பனை வளர்ச்சியை அடைந்திருக்கின்றது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தில் இந்த அளவிற்கு அதிகமாக மின்சார வாகனங்கள் விற்பனையாகவில்லை என்று கூறப்படுகின்றது.

Electric vehicle sale

இந்தியாவின் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (Federation of Automobile Dealers' Association) வெளியிட்ட தகவலின் அடிப்படையிலேய இந்த விபரம் தெரிய வந்திருக்கின்றது. ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டுமில்லைங்க ஒட்டுமொத்த இந்தியாவிலும் மின்சார வாகன விற்பனை கிடுகிடுவென உயர்ந்திருப்பதாகவும் ஃபடா தெரிவித்து இருக்கின்றது.

2022 ஆம் ஆண்டில் 10,25,063 யூனிட்டுகள் மட்டுமே மின்சார வாகனங்கள் விற்பனையாகிய நிலையில், 2023 ஆம் ஆண்டிலோ 15,29,947 யூனிட்டுகள் வரை விற்பனையாக இருக்கின்றன. இது 49.25 சதவீத அதிக விற்பனை வளர்ச்சியாகும். இந்த நிலையிலேயே இந்தியாவின் மாநில அளவில் பார்க்கையில் ஜார்கண்ட் மாநிலம் மாபெரும் விற்பனை வளர்ச்சியை நாட்டின் முதன்மையான மாநிலமாக மாறியிருப்பதும் தெரிய வந்திருக்கின்றது.

மேலும், இந்த பட்டியலில் நாட்டின் வளர்ந்த மாநிலங்களாக கருதப்படும் மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் டெல்லி போன்றவரை ஜார்கண்ட் அடுத்த இடங்களை பிடித்திருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்திய அரசாங்கம் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

குறிப்பாக, நாட்டில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரே மிக தீவிரமடைந்துக் காணப்படுகின்றது. ஆகையால், பிரதமர் மோடி, ஜார்கண்ட் மாநிலத்தில் மின்சார வாகனங்களின் விற்பனை மிக மிக வளர்ந்துக் கொண்டிருப்பதைக் கண்டு கட்டாயம் பெருமைக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை ஊக்குவிப்பதற்கு என்றே ஃபேம் எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த திட்டம் முதன் முதலில் 2015 ஆம் ஆண்டிலேயே பிரதமர் மோடி அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த திட்டத்தின் இரண்டாம் (ஃபேம் 2) கட்டமே செயல்பாட்டில் உள்ளது. இது 2019இல் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தின்கீழே மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய பட்ஜெட்டில் 2ஆயிரத்து 671கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுபோன்று முன்னோடி திட்டங்களினாலேயே இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மின்சார வாகனங்கள் விற்பனை சூடுபிடித்துக் காணப்படுகின்பறது. சொல்லப்போனால் ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டுமல்ல இந்தியாவின் பிற மாநிலங்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்திருக்கின்றது. மானியம் மற்றும் சிறப்பு சலுகைகள் உள்ளிட்டவையே இதற்கு காரணம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 6, 2024, 5:00 [IST]
English summary
Jharkhand is the leader in electric vehicle sales here are more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X