டாடாவை ஓவர்டேக் செய்யும் கத்துகுட்டி.. பெங்களூரு வாசிகள் மொத்த பேரும் கை விட்டுட்டாங்களா!

மின்சார கார் (Electric Car) பிரிவில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-ஐ அடிச்சுக்க ஆளே இல்லை என்றே பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால், இந்த நிலை அப்படியே மாறிவிட்டது. சீனாவிற்கு சொந்தமான இங்கிலாந்து நாட்டு நிறுவனமான எம்ஜி மோட்டார் (MG Motor), டாடாவின் சாம்ராஜ்யத்தை ஆட்டி பார்க்க தொடங்கிவிட்டது. ஆமாங்க, மின்சார கார் பிரிவில் இதன் ஆதிக்கம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றது. இதற்கு சான்றாகவே ஓர் சம்பவம் தற்போது அரங்கேறி இருக்கின்றது. ஒரே நேரத்தில் எம்ஜி நிறுவனத்தின் 201 மின்சார வாகனங்கள் டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த நிகழ்வு கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலேயே அரங்கேறி இருக்கின்றது. இந்த நிகழ்வு, கர்நாடகா வாசிகள் முழுமையாக எம்ஜி நிறுவனத்தின் மின்சார வாகன பிரியர்களாக மாறிவிட்டார்களோ என சந்தேகிக்கும் வகையில் இருக்கின்றது. எம்ஜி மோட்டார், இந்திய நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ (JSW) உடன் கை கோர்த்த பின்னர் பல்வேறு முக்கிய நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது.

Mg delivers 201 ev s in one day in bengaluru

மிக முக்கியமாக இந்த பிராண்டுடன் இணைந்த பின்னரே எம்ஜி மோட்டார் இந்தியாவின் முதல் சியூவி (CUV) ரக எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்தது. விண்ட்ஸர் இவி (Windsor EV), இதுவே அந்த சியூவி ரக கார் மாடல் ஆகும்.

பல்வேறு சிறப்பம்சங்ளைத் தாங்கிய இந்த காரை யாரும் நம்ப முடியாத மிகவும் குறைவான விலையிலேயே ஜேஎஸ்டபிள்யூ - எம்ஜி கூட்டணி விற்பனைக்குக் கொண்டு வந்தது. ரூ. 9.99 லட்சம் என்கிற விலையே இதற்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலையில் வாங்கும் போது விண்ட்ஸர் இவி-யில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரிக்கு நம்மால் சொந்தம் கொண்டாட முடியாது.

மேலும், இந்த பேட்டரிக்கு ஒரு கிமீ பயன்பாட்டிற்கு ரூ. 3.50 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த திட்டத்திற்கு 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' (Battery-as-a-Service) என்கிற பெயரை எம்ஜி சூட்டியது. இந்த திட்டமே தற்போது தற்போது எம்ஜி நிறுவனத்தின் மின்சார வாகன விற்பனை வளர்ச்சியை மிகப் பெரிய அளவில் தூக்கி விட்டிருக்கின்றது.

பேட்டரி அஸ் எ சர்வீஸ், திட்டம் வாயிலாக காரை வாங்கும்போது அந்த காரில் இடம் பெற்றிருக்கும் பேட்டரிக்கான தொகை கழிக்கப்படுகின்றது. இதனாலேயே பேட்டருக்கு நம்மால் உரிமைக் கொண்டாட முடியாது. மேலும், ஒவ்வொரு கிமீ பயன்பாட்டிற்கும் அதற்கான கட்டணத்தை நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியிருக்கின்றது.

இந்த திட்டம் விண்ட்ஸர் இவி-க்கு மட்டும் வழங்கப்படவில்லை. பிராண்டின் மற்ற மின்சார கார் மாடல்களான கோமெட் இவி (Comet EV), இசட்எஸ் இவி (ZS EV) ஆகியவற்றிற்கும் கிடைக்கும். இதன் விளைவாகவே எம்ஜியின் மின்சார கார்கள் சமீப சில நாட்களாக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த மாதிரியான சூழலிலேயே பெங்களூருவில் ஒரே நாளில் 201 யூனிட்டுகள் எம்ஜி இ-வாகனங்கள் டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பேட்டரி அஸ் எ சர்வீஸ் திட்டத்தினால் நிறுவனத்தின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் மாடலான கோமெட் இவியின் விலை இன்னும் பலமடங்கு குறைவானதாக மாறியிருக்கின்றது.

ரூ. 4.99 லட்சமே அதன் விலை ஆகும். இந்த திட்டத்தின்கீழ் வாங்குபவர்கள் ஒரு கிமீட்டருக்கு ரூ. 2.5 கட்டணமாக செலுத்த வேண்டும். இதேபோல், நிறுவனத்தின் விலை உயர்ந்த பிரீமியம் தர எலெக்ட்ரிக் கார் மாடலான இசட்எஸ் இவியையும் குறைவான விலையில் பேட்டரி அஸ் எ சர்வீஸின்கீழ் வாங்கிக்க முடியும். ரூ. 13.99 லட்சத்திற்கே வாங்கிக்க முடியும். தொடர்ந்து, ஒரு கிமீட்டருக்கு 4.5 ரூபாய் கட்டணமாக நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் என்கிற பெருமையை டாடா நெக்ஸான்.இவி-யே சூடி இருந்தது. இதன் மகுடத்தையே தற்போது எம்ஜி விண்ட்ஸர் இவி தட்டி பறித்திருக்கின்றது. ஆமாங்க, இந்தியாவின் இப்போதைய பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடல் இதுவே ஆகும். ஆகையால், இதன் வருகை டாடாவிற்கு மிகப் பெரிய அளவில் தலைவலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, November 29, 2024, 15:35 [IST]
English summary
Jsw mg motor india achieves milestone delivery of 201 electric vehicles in bengaluru
மேலும்... #mg motor #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+