ஒரே நாளில் 100க்கும் அதிகமான கார்களை டெலிவரி செய்த நிறுவனம்.. மாருதியோ, டாடாவோ கிடையாதுங்க..

விழாக்காலத்தில்தான் இதுமாதிரியான விநோத சம்பவங்கள் எல்லாம் இந்தியாவில் அரங்கேறும். அந்தவகையிலேயே, 2024 தீபாவளியை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் ஆயிரக் கணக்கான மக்கள் புதிய வாகனங்களை வாங்கியிருக்கின்றனர். அதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே பிராண்டின் எலெக்ட்ரிக் காரை வாங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்திய-சீன கூட்டணி கார் உற்பத்தி நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களையே டெல்லி - என்சிஆர்-ஐச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் வாங்கி இருக்கின்றனர்.

இந்தியாவில் இந்த நிறுவனம் இப்போதைய நிலவரப்படி விண்ட்ஸர் (Windsor EV), இசட்எஸ் இவி (ZS EV) மற்றும் கோமெட் இவி (Comet EV) ஆகிய மூன்று எலெக்ட்ரிக் கார் மாடல்களையே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றிற்கே இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதற்கு சான்றாகவே டெல்லி - என்சிஆர்-இல் ஒரே நாளில் 100க்கும் அதிகமான யூனிட்டுகள் எம்ஜியின் தயாரிப்புகள் டெலிவரி கொடுக்கப்பட்டு உள்ளன.

100 ev s delivered in single in india

எம்ஜி விண்ட்ஸர் இவி: இந்தியாவின் முதல் சியூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த காரை எம்ஜி நிறுவனம் பேட்டரி அஸ் எ சர்வீஸ் எனும் திட்டத்தின்கீழும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த திட்டத்தின் வாயிலாக காரை வாங்கும்போது பேட்டரிக்கான பணத்தை பயன்பாட்டின் அடிப்படையில் வழங்க வேண்டும்.

கிமீ பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு கிமீ பயன்பாட்டிற்கு 3 ரூபாய் மற்றும் 50 காசுகள் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. மேலும், விண்ட்ஸர் இவி-யை பேட்டரி அஸ் எ சர்வீஸ் எனும் பிளானின்கீழ் ரூ. 9.99 லட்சத்திற்கே வாங்கிக் கொள்ள முடியும். இந்த பிளான் வேண்டாம், பேட்டரிக்கான தொகையையும் செலுத்த நான் தயார் என்பவர்கள் ரூ. 3.5 லட்சம் கூடுதலாக செலுத்தி அக்காரை சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த கார் ஓர் முழு சார்ஜில் 332 கிமீ வரை ரேஞ்ச் தரும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்பு வழங்கிக் கொண்டிருக்கின்றது. புக்கிங் தொடங்கிய முதல் 24 மணி நேரத்தில் இந்த காருக்கு 15,176 யூனிட்டுகளுக்கான புக்கிங் கிடைத்தது என்பது கவனிக்கத்தகுந்தது.

இசட்எஸ் இவி: இது நிறுவனத்தின் பிரீமியம் தர எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த காரில் ஓர் முழு சார்ஜில் 461கிமீ வரையில் ரேஞ்ச் தரும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த மின்சார காரையும் பேட்டரி அஸ் எ சர்வீஸ் எனும் திட்டத்தின்கீழ் வாங்கிக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. ரூ.13.99லட்சத்திற்கே இந்த காரை வாங்கிக் கொள்ள முடியும். இந்த பிளானின்கீழ் வாங்கும்போது ஒரு கிமீ பயணத்திற்கு ரூ.4.5லட்சம் வரை கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தகுந்தது.

எம்ஜி கோமெட் இவி: இந்தியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் மாடல் இதுவாகும். இந்த காரை ரூ. 4.99 லட்சத்திற்கே வாங்கிக்க முடியும். இது பேட்டரி அஸ் எ சர்வீஸின்கீழ் இந்த கார் கிடைக்கும் விலை ஆகும். மேலும், பேட்டரிக்கான கட்டணமாக ரூ. 2.5 ஒவ்வொரு கிமீ பயன்பாட்டிற்கும் வழங்க வேண்டும் என்பது கவனிக்கத்தகுந்தது.

கோமெட் இவி ஓர் குட்டியான தோற்றம் கொண்ட அதேவேளையில், அதிக பிரீமியம் அம்சங்கள் தாங்கிய எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். குறிப்பாக, இந்தியாவின் மிகவும் நெருக்கமான சாலைகளைக் கொண்ட நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்ற மின்சார காராக கோமெட் இவி காட்சியளிக்கின்றது. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கியிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காருக்கு தரமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் அமைந்திருக்கின்றன. ஒரே நாளில் 100 கணக்கான எலெக்ட்ரிக் கார்கள், அதுவும், ஒற்றை பிராண்டின் எலெக்ட்ரிக் கார் டெலிவரி கொடுக்கப்பட்டு இருப்பது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. விழாக் காலத்தை முன்னிட்டே இத்தனை கார்களும் ஒரே நாளில் டெலிவரிக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 30, 2024, 5:00 [IST]
English summary
Jsw mg motor india delivers over 100 plus evs in delhi ncr this festive season
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+