இந்தியால வளர்ச்சி காண டாடா உடன் கூட்டு சேர்ந்த சீன நிறுவனம்! மாருதிக்கு ஆப்பு வைக்க அவங்கள மாதிரியே நடவடிக்கை!
இந்திய நிறுவனம் மாருதி (Maruti)-யும், ஜப்பான் நிறுவனம் சுஸுகி (Suzuki)-யும் இணைந்து மாருதி சுஸுகி (Maruti Suzuki)-ஆக இந்தியாவை ஒரு கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. வாகன விற்பனையில் இதுவே முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு அடுத்தபடியாகவே டாடா மோட்டார்ஸ் (Tata Motors), ஹூண்டாய் (Hyundai) உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த மாதிரியான சூழலிலேயே மாருதி சுஸுகி-யின் யுக்தியைக் கையாளும் விதமாக, சீன நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல கார் உற்பத்தி நிறுவனம் எம்ஜி மோட்டார் (MG Motor), இந்திய நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ (JSW) உடன் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது.
இப்போது இந்த நிறுவனம் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) எனும் பெயரில் நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்தே இன்னும் சில சூப்பரான நடவடிக்கைகளை அது இந்தியாவில் வேறூன்றும் விதமாக மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், தற்போது ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் மற்றுமொரு சூப்பரான நடவடிக்கையை நாட்டில் மேற்கொண்டு இருக்கின்றது.

டாடா குழுமத்தின் ஓர் அங்கமான டாடா கேபிடல் (Tata Capital) உடன் அது கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது. டாடா கேபிடல் ஓர் நிதி நிறுவனம் ஆகும். தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சுலபமாக வாகனங்களுக்கான லோன் கிடைக்கும் பொருட்டே இந்த கூட்டணி அது தொடங்கி இருக்கின்றது.
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் ஏற்கனவே தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எளிதில் கடன் உதவி கிடைக்கும் பொருட்டு பல்வேறு நிதி நிறுவனங்களுடன் கூட்டணியை வைத்து உள்ளது. இந்த நிலையிலேய புதிதாக டாடா கேபிடல் உடனும் அது கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது. டெர்ம் லோன், டெமோ கார் கடன்கள், குத்தகை விருப்பங்கள் போன்ற வாடிக்கையாளர்களின் பலதரப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யப்பட இருக்கின்றன.
இதுதவிர, டீலர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இந்த கூட்டணி உதவும் என கூறப்படுகின்றது. டாடா கேபிடல் உடனான இணைவு குறித்து ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி சதீந்தர் சிங் பஜ்வா கூறியதாவது, "வாடிக்கையாளர்களுக்கு எளிதில் நிதியுதவி கிடைக்கும் பொருட்டு டாடா கேபிட்டல் உடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த மூலோபாய கூட்டாண்மையானது, எங்கள் டீலர் பார்ட்னர்களுக்கு தேவையான நிதி தேவையிலும் ஆதரவளிக்கும்" என்றார். டாடா கேபிட்டல் உடனான இணைவின் காரணமாக எம்ஜி கார்களின் விற்பனைக் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனத்தின்கீழ் இப்போதைய நிலவரப்படி ஐந்து விதமான கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
இதில் இரண்டு எலெக்ட்ரிக் கார் மடால்கள் ஆகும். கோமெட் இவி மற்றும் இசட்எஸ் இவி இவையே அந்த இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்கள் ஆகும். இத்துடன், எம்ஜி நிறுவனம் ஆஸ்டர், ஹெக்டர் மற்றும் குளோஸ்டர் என்கிற மூன்று அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்கள் நிறைந்த எஸ்யூவி ரக காரையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இதுதவிர, இந்த அனைத்து கார் மாடல்களிலும் 100 இயர் எடிசன் (100 Year Edition) எனும் சிறப்பு பதிப்பையும் அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. தன்னுடைய நிறுவனத்தின் நூறாண்டு கால ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட சிறப்பு பதிப்பே இதுவாகும்.
வழக்கமான கார் மாடல்களைக் காட்டிலும் சற்று கவர்ச்சியான லுக்கைக் கொண்டதாக இந்த கார் மாடல் காட்சியளிக்கின்றது. நிறம், அலங்கரிப்பு என பலவற்றில் இது தனித்துவமானதாகக் காட்சியளிக்கின்றது. இதுதவிர, காரின் உள் மற்றும் வெளிப் பக்கங்களில் 100 இயர் எடிசன் எழுத்து மற்றும் பேட்ஜ்கள் இடம் பெற்றிருக்கும். மேலும், காரின் மேற்பரப்பில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் வண்ணங்கள் அதன் உட்பக்கத்திலும் இடம் பெற செய்யப்பட்டு இருக்கின்றன. இத்தகைய சிறப்பு வேலைப்பாடுகளுடனேயே 100 இயர் எடிசன் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எம்ஜி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்தின் குளோஸ்டர் எஸ்யூவிக்கு பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே டாடா கேபிடல் உடன் எம்ஜி தன்னை இணைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








