7 பேர் போகலாம்.. ஹெக்டர் பிளஸ் கார் மாடலில் புதிய 7 சீட்டர் அறிமுகம்!.. சிவிடி கியர்பாக்ஸ் உடன் வாங்கிக்கலாம்!

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனம், இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் ஹெக்டர் பிளஸ் (Hector Plus)-ம் ஒன்றாகும். இந்த கார் மாடலிலேயே அந்நிறுவனம் 7 பேர் அமர்ந்து பயணிக்கின்ற மாதிரியான புதிய 7 சீட்டர் வேரியண்டு (7 Seater Variant)-களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்தியாவில் அதிக இருக்கைகளைக் கொண்ட கார் மாடல்களுக்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே எம்ஜி நிறுவனம் தற்போது அதன் ஹெக்டர் பிளஸ் கார் மாடலில் புதிதாக இரண்டு 7 சீட்டர் வேரியண்டுகளை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

செலக்ட் ப்ரோ பெட்ரோல் சிவிடி (Select Pro Petrol CVT) மற்றும் ஸ்மார்ட் ப்ரோ டீசல் (Smart Pro Diesel MT) ஆகிய இரண்டு 7 சீட்டர் தேர்வுகளையே எம்ஜி விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. முதல் ஒன்றிற்கு அறிமுக விலையாக ரூ. 19.71 லட்சமும், இரண்டாவது ஒன்றிற்கு அறிமுக விலையாக ரூ. 20.64 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

MG hector plus 7 seater variants launched in india

இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்தியாவில் ஹெக்டர் பிளஸ் கார் மாடலை இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் வாங்கிக் கொள்ள முடியும். 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் 2.0 லிட்டர் ஆகியவையே அவை ஆகும். இதில் பெட்ரோல் மோட்டாரில் மட்டுமே மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

டீசலில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகின்றது. அதேவேளையில், முன்னதாக ஹெக்டர் பிளஸ் கார் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட தேர்வை வாங்க வேண்டும் எனில் ரூ. 22.26 லட்சம் செலுத்தினால் மட்டுமே வாங்க முடியும் என்கிற சூழல் நிலவி வந்தது.

MG hector plus 7 seater

ஆனால், புதிய தேர்வின் அறிமுகத்தால் ரூ. 2.55 லட்சம் குறைவான விலையிலேயே சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட ஹெக்டர் காரை வாங்கிக் கொள்ள முடியும் என்கிற சூழல் உருவாகி இருக்கின்றது. தொடர்ந்து புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் இரண்டு வேரியண்டுகளும் சிறப்பம்சங்களை அதிகளவில் தாங்கியவையாகக் காட்சியளிக்கின்றன.

அந்தவகையில், 14 அங்குல தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கார் இணைப்பு, வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகளுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், வயர் இணைப்பு தேவைப்படாத சார்ஜிங் கருவியும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுபோன்று இன்னும் பல்வேறு பிரீமியம் தர அம்சங்களை இந்த ஹெக்டர் பிளஸ் கார் மாடல் தன்னுள் தாங்கி இருக்கின்றது. அந்தவகையில், இரண்டு விதமான நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட உட்பக்கம், மரத்தால் ஆன பேனல்கள், லெதர் போர்த்தப்பட்ட இருக்கை, ஸ்டியரிங் வீல் ஆகியவற்றையும் ஹெக்டர் பிளஸ் பெற்றிருக்கின்றது.

தொடர்ந்து, 18 அங்குல அலாய் வீல்கள், எல்இடி புரஜெக்டர் வகை ஹெட்லேம்ப், எல்இடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் புஷ் ஸ்டார்ட் பட்டன் மற்றும் சாவியே இல்லாமல் காரை இயக்கும் வசதி உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல்வேறு பிரீமியம் அம்சங்களைத் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்த கார் மாடலின் விலை சற்றே அதிகமானதாகக் காட்சியளிக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக இருக்கைகளைக் கொண்ட எஸ்யூவி ரக கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டே எம்ஜி நிறுவனம் தற்போது புதிதாக இரண்டு வேரியண்டுகளை ஹெக்டர் பிளஸ் மாடலில் அறிமுகம் செய்திருக்கின்றது. எனவே இந்த காருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு வரும் நாட்களில் சற்றே அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 6, 2024, 20:16 [IST]
English summary
Jsw mg motor introduces new variants in hector plus suv with 7 seat and enhanced features
மேலும்... #mg motor #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+