யாருமே எதிர்பாக்கல! திடீர் அறிவிப்பை வெளியிட்ட அரசு! இனி எலெக்ட்ரிக் வண்டி வாங்க மக்கள் வரிசையில நிக்க போறாங்க
இந்தியாவில் மக்கள் மத்தியில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) வாகனங்களுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. எனவே மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதை அரசாங்கங்களும் ஊக்குவித்து வருகின்றன.
இந்த வரிசையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் மக்களுக்கு கர்நாடகா (Karnataka) மாநில அரசு தற்போது அதிரடியான சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி கர்நாடக மாநிலத்தில் பழைய வாகனங்களை 'ஸ்கிராப்' (Scrap) செய்து விட்டு, எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு, வரி சலுகைகள் (Tax Concessions) வழங்கப்படவுள்ளன.

1 லட்ச ரூபாய் வரையிலான விலை கொண்ட எலெக்ட்ரிக் டூவீலர்கள் என்றால் 1,000 ரூபாய் வரி சலுகை கிடைக்கும். அதே நேரத்தில் 2 லட்ச ரூபாய் வரையிலான விலை கொண்ட எலெக்ட்ரிக் டூவீலர்கள் என்றால் 2,000 ரூபாய் வரி சலுகை வழங்கப்படும். மறுபக்கம் 4-5 லட்ச ரூபாய் வரையிலான விலை கொண்ட எலெக்ட்ரிக் டூவீலர் என்றால் 5,000 ரூபாய் வரி சலுகை கொடுக்கப்படவுள்ளது.
அதே நேரத்தில் 5 லட்ச ரூபாய் வரையிலான விலை கொண்ட எலெக்ட்ரிக் கார் என்றால் 10,000 ரூபாய் வரி சலுகையை பெறலாம். மறுபக்கம் 5-10 லட்ச ரூபாய் வரையிலான விலை கொண்ட எலெக்ட்ரிக் கார் என்றால் 20,000 ரூபாயும், 10-15 லட்ச ரூபாய் வரையிலான விலை கொண்ட எலெக்ட்ரிக் கார் என்றால் 30,000 ரூபாயும் வரி சலுகையாக கிடைக்கும்.

அதே நேரத்தில் 15-20 லட்ச ரூபாய் வரையிலான விலை கொண்ட எலெக்ட்ரிக் கார் என்றால், 40,000 ரூபாயும், 20 லட்ச ரூபாய்க்கும் மேலான விலை கொண்ட எலெக்ட்ரிக் கார் என்றால் 50,000 ரூபாயும் வரி சலுகையாக பெற முடியும். எலெக்ட்ரிக் சரக்கு வாகனங்களுக்கும் கூட வரி சலுகைகள் கிடைக்கும் என கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் இயங்கி கொண்டுள்ள மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்றாகும். குறிப்பாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் (Bangalore) நகரில், எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. அங்கு அரசே நிறைய எலெக்ட்ரிக் பஸ்களை கூட இயக்கி கொண்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் வெளிவந்துள்ள இந்த அறிவிப்பு, கர்நாடக மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் உதவி செய்யலாம் என நாங்கள் கருதுகிறோம். தற்போதைய நிலையில் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற தயக்கம் காட்டுவதற்கு விலை ஒரு மிக முக்கியமான காரணமாக உள்ளது.
அதாவது பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலையுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகமாக இருந்து வருகிறது. எனவே இதே போன்று இன்னும் பல்வேறு சலுகைகளை வழங்குவதன் மூலமாக, மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதை வேகமாக்க முடியும் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








