தமிழ்நாடோ, மஹாராஷ்டிராவோகூட இல்ல.. அந்த விஷயத்துல கேரளாதான் முதல் இடம்.. கடவுளின் தேசம்'றத நிரூபிச்சுட்டாங்க!
இந்தியாவின் மிக சிறிய மாநிலங்களில் ஒன்றாக கேரளா மாநிலம் உள்ளது. இந்த மாநிலமே இந்தியாவின் பிற முன்னணி மாநிலங்களை குறிப்பிட்ட ஓர் விஷயத்தில் பின்னுக்கு தள்ளியிருக்கின்றது. அது வேறு எதுவும் இல்லைங்க மின்சார வாகனங்களை வேகமாக தத்தெடுக்கும் விஷயத்திலேயே அம்மாநிலம் மிக சிறந்த இந்திய மாநிலமாக முன்னேறியிருக்கின்றது.
இந்தியாவில் முன்பைக் காட்டிலும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக நடந்து முடிந்த மார்ச் மாதம் இருக்கின்றது. இதுவரை இல்லாத அளவில் மின்சார வாகனங்கள் அந்த மாதத்தில் விற்பனையாகி இருக்கின்றன.

குறிப்பாக, மின்சார இரண்டு சக்கர வாகன விற்பனை விண்ணை தொடும் அளவிற்கு மிகப் பெரிய வளர்ச்சியை சென்ற மாதத்தில் பெற்றிருக்கின்றது. 1.30 லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் டூ-வீலர்களே 2024 மார்ச் மாதத்தில் விற்பனையாகி இருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மற்றுமொரு ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளா மின்சார வாகனங்களை தத்தெடுப்பதில் இந்தியாவின் மற்ற முன்னணி மாநிலங்களை பின்னுக்கு தள்ளி இருப்பதே அந்த தகவல் ஆகும். அது, மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களை பின்னுக்கு தள்ளி இருப்பதே மிகப் பெரிய ஆச்சரியமாக அமைந்திருக்கின்றது.

முன்னதாக எலெகட்ரிக் கார்கள் விற்பனையிலேயே கேரளா மாநிலம் முன்னணியில் இருந்தது. இப்போது எலெக்ட்ரிக் டூ-வீலர்களைப் பதிவுச் செய்வதிலும் இந்த மாநிலம் முன்னணி இடத்திற்கு முன்னேறியிருக்கின்றது. 2022-23 நிதியாண்டைக் காட்டிலும் 2023-24 ஆம் நிதியாண்டில் 13.5 சதவீதம் விற்பனை வளர்ச்சி எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் பிரிவில் பதிவாகி இருக்கின்றது.
அதேவேளையில், கர்நாடகா மாநிலம் 11.5 சதவீதத்தையும், மஹாராஷ்டிரா 10.1 சதவீதத்தையும் மற்றும் டெல்லி 9.4 சதவீதத்தையும் விற்பனை வளர்ச்சியாக பதிவுச் செய்திருக்கின்றன. அதேநேரத்தில், சதவீதத்தின் அடிப்படையில் மட்டுமே கேரளா மற்ற மாநிலங்களைப் பின்னுக்கு தள்ளி இருக்கின்றது என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.
விற்பனையான யூனிட்டுகளின் அடிப்படையில் ஒப்பிட்டால் மஹாராஷ்டிராவும், கர்நாடகவுமே முன்னணியில் இருக்கின்றன. 1.84 லட்சம் மற்றும் 1.5 லட்சம் யூனிட்டுகள் அந்த மாநிலங்களில் விற்பனையாகி இருக்கின்றன. அதேவேளையில், விற்பனை வளர்ச்சி சதவீதத்தில் வைத்து பார்த்தால் இந்த முன்னணி மாநிலங்கள் மின்சார வாகனங்களை தத்தெடுப்பதில் லேசாக பின் தங்கி இருப்பதை நம்மால் அறிய முடிகின்றது.
கேரளா அரசாங்கம் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு திட்டங்களை கடந்த 2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. அதில் மிக முக்கியமானதாக மின்சார வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் ரத்து, சாலை வரி கட்டணம் தள்ளுபடி, டோல் கட்டணம் இலவசம் மற்றும் கட்டணமில்லா பார்க்கிங் உள்ளிட்டவை இருக்கின்றன.
இதன் விளைவாகவே கேரளாவில் மின்சார வாகன பயன்பாடு மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துக் காணப்படுகின்றது. வரும் நாட்களில் இந்த மாநிலம் விற்பனையிலும் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்று மற்ற மாநிலங்களை பின்னுக்கு தள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இப்போது மிகப் பெரிய உச்சத்தில் உள்ளது.
மேலும், பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டில் சுற்றுச் சூழலும் மிகப் பெரிய பாதிப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே இந்த காரணங்களைக் கருத்தில் கொண்டே மக்கள் பலர் மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். இதை முன்வைத்தே இன்னும் பலர் விரைவில் மின்சார பயன்பாட்டிற்கு மாறுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார், பைக் மற்றும் ஸ்கூட்டர் என அனைத்து விதமான வாகனங்களுக்கும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே கடவுளின் தேசமான கேரளா அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









