இருக்கறதுலயே இதுதான் குறைவான விலை! 7 பேர் போக கூடிய எலெக்ட்ரிக் கார் களத்துல எறங்க போகுது! நடுக்கத்தில் மாருதி

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்களின் (Electric Cars) பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டிருப்பதால், அனைத்து முன்னணி நிறுவனங்களும் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி கொண்டுள்ளன. இதில், கியா (Kia) நிறுவனமும் ஒன்றாகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா நிறுவனம் மொத்தம் 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. அவை கியா இவி6 (Kia EV6) மற்றும் கியா இவி9 (Kia EV9) ஆகியவை ஆகும்.

ஆனால் இவை இரண்டுமே மிகவும் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார்கள் ஆகும். கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையே 60.97 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 65.97 லட்ச ரூபாயாக இருக்கிறது.

Kia Carens

மறுபக்கம் கியா இவி9 எலெக்ட்ரிக் கார், 1.30 கோடி ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்தனைக்கும் இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டுமே. ஆன்-ரோடு விலை (On-Road Price) இன்னும் கூடுதலாக வரும். எனவே நடுத்தர வர்க்க மக்களால், இந்த எலெக்ட்ரிக் கார்களை வாங்க முடியாது.

எனவே நடுத்தர வர்க்க மக்களும் வாங்குவதற்கு ஏற்ற வகையில், விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் கியா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இது, கியா கேரன்ஸ் இவி (Kia Carens EV) எலெக்ட்ரிக் காராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kia Carens Side Design

இந்திய சந்தையில் கியா கேரன்ஸ், மிகவும் பிரபலமாக உள்ள எம்பிவி (MPV) ரக கார்களில் ஒன்றாகும். இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான், கியா கேரன்ஸ் இவி என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அனேகமாக இதுதான் இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் முதல், மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் காராக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கியா கேரன்ஸ் இவி எலெக்ட்ரிக் காரில், ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 500 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக பயணம் செய்ய கூடிய வகையிலான பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பல்வேறு அதிநவீன வசதிகளையும் கியா கேரன்ஸ் இவி எலெக்ட்ரிக் கார் கொண்டிருக்கும்.

இதன்படி லெவல் 2 அடாஸ், 6 ஏர்பேக்குகள், பனரோமிக் சன்ரூஃப், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படலாம்.

இவை எல்லாம் தவிர, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற வசதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள கியா கேரன்ஸ் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன், 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைத்து கொண்டுள்ளது.

இதேபோல் இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும், அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில், 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கலாம். இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 16-20 லட்ச ரூபாய்க்குள் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா கேரன்ஸ் இவி, 2025ம் ஆண்டின் 2வது பாதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். அதாவது 2025ம் ஆண்டின் ஜூன் மாதத்திற்கு பின்னர் விற்பனைக்கு களமிறக்கப்படலாம். அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில் ஒரு எலெக்ட்ரிக் எம்பிவி காரை வாங்க வேண்டும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்கள், கியா கேரன்ஸ் இவி எலெக்ட்ரிக் காரின் வருகைக்காக காத்திருக்கலாம்.

இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனை செய்வதிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை கேரன்ஸ் இவி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX) போன்ற எலெக்ட்ரிக் கார்களுடன், கியா கேரன்ஸ் இவி போட்டியிடும்.

More from DriveSpark

Article Published On: Sunday, October 6, 2024, 18:38 [IST]
English summary
Kia carens ev india launch soon expected price features driving range
மேலும்... #kia motors #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+