7 பேர் ஒன்னா போகலாம்... மாருதி சாம்ராஜ்யத்தை அடியோடு சரிக்க வரும் புதிய கார்... போட்டி அனல் பறக்க போகுது...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா கேரன்ஸ் (Kia Carens). எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய கியா நிறுவனம் தயாராகி வருகிறது. கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், வரும் 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. அதற்கு முன்னதாக கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

கியா கேரன்ஸ் கார் தற்போதே சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில்தான் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதை மேலும் மெருகேற்றும் வகையில், ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிசைனில் நிறைய அப்டேட்கள் செய்யப்படவுள்ளன. முன் பகுதி மற்றும் பின் பகுதியில் நிறைய மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

Kia Carens Side Design

இதன்படி ஒருங்கிணைந்த எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் 'C' வடிவில் புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய எல்இடி டெயில்லைட்கள் மற்றும் புத்தம் புதிய அலாய் வீல்கள் உள்ளிட்ட அம்சங்களை எல்லாம் கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் நாம் எதிர்பார்க்க முடியும்.

வசதிகளை பொறுத்தவரையில் கியா கேரன்ஸ் காரின் தற்போதைய மாடலில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஏர் ப்யூரிஃபையர், சன்ரூஃப், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் வழங்கப்படுகின்றன.

Kia Carens

இவற்றுடன் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) உள்ளிட்ட வசதிகளை கியா கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் நாம் எதிர்பார்க்கலாம். செயல்திறனை பொறுத்தவரையில், கியா கேரன்ஸ் காரின் தற்போதைய மாடலில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அவை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகியவை ஆகும். விரைவில் விற்பனைக்கு வரவிருப்பது ஃபேஸ்லிஃப்ட் மாடல் மட்டுமே என்பதால், இன்ஜின் ஆப்ஷன்களில் எந்தவிதமான மாற்றங்களும் இருக்காது என கூறப்படுகிறது.

எனவே தற்போது வழங்கப்பட்டு வரும் 3 இன்ஜின் ஆப்ஷன்களும் தொடர்ந்து வழங்கப்படும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை 10.52 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 19.94 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் பல்வேறு அப்டேட்கள் செய்யப்படுவதால், கியா கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விலை சற்று அதிகமாக இருக்கலாம். கியா கேரன்ஸ் கார் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது. எனவே அதிக உறுப்பினர்களை கொண்ட குடும்பங்களுக்கு இந்த கார் மிகவும் ஏற்றது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா கேரன்ஸ் காருடைய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) உள்ளிட்ட எம்பிவி ரக கார்களுக்கு எல்லாம் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, July 26, 2024, 13:21 [IST]
English summary
Kia carens facelift launch in 2025 all you need to know
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+