செய்த தவற உணர்ந்துட்டாங்க.. டீசல் மேனுவலை மீண்டும் களமிறக்கும் கியா.. மிஸ் பண்ணவங்க எல்லாரும் செம ஹேப்பி!!
தென்கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia), சமீபத்தில் அதன் முன்னணி கார் மாடலில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருந்த டீசல் மேனுவல் ஆப்ஷனை விற்பனையில் இருந்து வெளியேற்றியது. இந்த நிலையால், அந்த கார் மாடலின் டீசல் மேனுவல் வெர்ஷனை இந்தியர்கள் பலர் மிஸ் பண்ணும் சூழல் உருவாகியது. அதேவேளையில், பெட்ரோலில் மேனுவல் ஆப்ஷன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிலையிலேயே, கியா நிறுவனம் விற்பனையில் இருந்து வெளியேற்றிய அந்த டீசல் மேனுவல் ஆப்ஷனை மீண்டும் விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எப்போது விற்பனைக்கு வரும் என்பதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க, விரிவான பதிவிற்குள் போகலாம்.

கியா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் கேரன்ஸ் (Carens)-ம் ஒன்றாகும். இது ஓர் எம்பிவி (MPV) ரக கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான ஆப்ஷன்களும் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால், சில காரணங்களுக்காக இதன் டீசல் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டும் விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டது. ஐஎம்டி (iMT) ஆப்ஷன் வருகையின் காரணமாகவே அது வெளியேற்றப்பட்டது. சென்ற ஆண்டு இதே கால கட்டத்திலேயே டீசல் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டது என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த நிலையிலேயே வெளியேற்றப்பட்ட டீசல் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மீண்டும் விற்பனைக்கு களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த மாத இறுதிக்குள் இது விற்பனைக்கு வரும் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி கியா கேரன்ஸ் ரூ. 10.45 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.
அதேவேளையில், இதன் அதிகபட்ச விலை ரூ. 12.65 லட்சம் ஆகும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. குடும்பத்துடன் பயணிக்க ஏதுவான கார் மாடல்களில் கியா கேரன்ஸ் எம்பிவியும் ஒன்றாகும். இந்த காரில் ஒரே நேரத்தில் 7 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.
பிரீமியம், பிரெஸ்டீஜ், பிரெஸ்டீஜ் பிளஸ், லக்சூரி, லக்சூரி (ஓ), லக்சூரி பிளஸ் மற்றும் எக்ஸ் லைன் ஆகிய வேரியண்டுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. 7 சீட்டர் தேர்வு மட்டுமின்றி இதில் 6 சீட்டர் தேர்வும் வழங்கப்படுகின்றது. அதிக இட வசதியுடன் பயணிக்க விரும்புவோரைக் கவரும் பொருட்டு இந்த ஆப்ஷன் கேரன்ஸ்-இல் வழங்க்பபடுகின்றது.
இதேபோல், அதிக தொழில்நுட்ப வசதிகளை விரும்புவோரைக் கவரும் பொருட்டும் ஏகப்பட்ட நவீன கால அம்சங்களையும் இந்த காரில் கியா வழங்குகின்றது. அந்தவகையில், டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட் மற்றும் ரியர் வியூ கேமிரா உள்ளிட்டவை கேரன்ஸில் வழங்கப்படுகின்றன.
இதுதவிர, பிரீமியமான ரைடு அனுபவத்தைப் பெறும் பொருட்டு லெதர் போர்த்தப்பட்ட இருக்கை, மேனுவல் ஏசி சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆர்ம் ரெஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, அதிக பாதுகாப்பிற்காக ஆறு ஏர் பேக்குகள், மிக சிறந்த பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.
எஞ்சினைப் பொருத்தவரை 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன், இப்போதைய நிலவரப்படி 6 ஸ்பீடு ஐஎம்டி, 7 ஸ்பீடு டிசிடி மற்றும் ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் ஆகியவை வழங்கப்படுகின்றன. இத்துடனேயே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இணைக்கப்பட இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நல்ல விற்பனையைப் பெற்றுக் கொண்டிருக்கும் எம்பிவி கார் மாடல்களில் கேரன்ஸும் ஒன்றாகும். இந்த கார் மாடலின் டீசல் வெர்ஷனின் மேனுவல் ஆப்ஷனையே விற்பனையில் இருந்து வெளியேற்றியது. தற்போது வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு மீண்டும் அந்த ஆப்ஷனை விற்பனைக்கு வழங்க இருக்கின்றது, கியா.


Click it and Unblock the Notifications








