எவ்ளோ பெரிய குடும்பமா இருந்தாலும் ஒரே கார்ல போயிரலாம்! விலை இவ்ளோதானா! இதுக்கு மேல பெரிசா வேற என்ன வேணும்!

இந்திய சந்தையில் எம்பிவி (MPV) ரக கார்களுக்கு என மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் கூட்டம் உள்ளது. எம்பிவி ரக கார்கள் எல்லாம், அதிகமான நபர்களை உள்ளடக்கிய பெரிய குடும்பங்களுக்கு ஏற்றவையாக உள்ளன. இதன் காரணமாகவே எம்பிவி ரக கார்களுக்கு என தனியாக ஒரு வாடிக்கையாளர்கள் கூட்டமே இங்கு காணப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், மிகவும் பிரபலமாக உள்ள எம்பிவி ரக கார்களில், கியா கேரன்ஸ் (Kia Carens) மிகவும் முக்கியமானதாகும். 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கியா கேரன்ஸ் கார் விற்பனை செய்யப்பட்டு கொண்டுள்ளது.

எனவே அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக கியா கேரன்ஸ் உள்ளது. தற்போது வெளியாகியுள்ள நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான கியா கேரன்ஸ் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), இது உண்மை என்பதை நிரூபிக்கிறது.

Kia Carens

கியா நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 4,359 கேரன்ஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை, நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5,881 ஆக உயர்ந்துள்ளது. இது 35 சதவீத வளர்ச்சி ஆகும்.

கியா கேரன்ஸ் தற்போதே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகதான் உள்ளது. இருப்பினும் இந்திய சந்தையில் இதன் விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில், வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய கியா நிறுவனம் தயாராகி வருகிறது.

Kia Carens Side Design

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல், வரும் 2025ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா கேரன்ஸ் காரின் ஆரம்ப விலை 10.52 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 19.94 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை, இதைக்காட்டிலும் சற்று அதிகமாக இருக்கலாம்.

கியா கேரன்ஸ் காரில் தற்போதைய நிலையிலேயே, 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பின் இருக்கையில் 10.1 இன்ச் என்டர்டெயின்மெண்ட் சிஸ்டம், முன் பகுதியில் வென்டிலேஷன் உடன் கூடிய இருக்கைகள், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் சன்ரூஃப் உள்பட ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்படுகின்றன.

ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இன்னும் பல்வேறு புதிய வசதிகளை நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம். அதேபோல் டிசைனிலும் (Design) நிறைய மாற்றங்கள் செய்யப்படலாம். ஆனால் செயல்திறனை பொறுத்தவரையில், தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 3 இன்ஜின் ஆப்ஷன்கள்தான் (Engine Options) தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் ஆகும். அதேபோல் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களிலும், மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். கியா நிறுவனம் கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் தவிர, எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் எம்பிவி ரக காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகியவை எல்லாம் அறிமுகம் செய்யப்பட்டால், அதன் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 18, 2024, 21:01 [IST]
English summary
Kia carens mpv sales report august 2024 35 per cent growth
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+