7 பேர் போக கூடிய இந்த கார் இனி மைலேஜை வாரி வழங்க போகுது... ஒரு முடிவோடதான் இருக்காங்க... மாருதிக்கு செக்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா கேரன்ஸ் (Kia Carens). எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கியா கேரன்ஸ் கார், 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வரும் கியா கேரன்ஸ் காரின், நடப்பு 2024ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி கியா நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 5,679 கேரன்ஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 6,002 ஆக இருந்தது. இது 5 சதவீத வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Kia Carens

5 சதவீத வீழ்ச்சி என்றாலும் கூட, இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு ஜூலை மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 7 சீட்டர் கார்களின் (Top 10 7-Seater Cars) பட்டியலில், கியா கேரன்ஸ் 6வது இடத்தை பிடித்துள்ளது. கியா கேரன்ஸ் காரின் ஆரம்ப விலை 10.52 லட்ச ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் கியா கேரன்ஸ் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.94 லட்ச ரூபாயாக இருந்து வருகிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். செயல்திறனை பொறுத்தவரையில் கியா கேரன்ஸ் காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன.

Kia Carens Side Design

அவை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (115 பிஎஸ்/144 என்எம்), 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் (160 பிஎஸ்/253 என்எம்) மற்றும் 1.5 லிட்டர் டீசல் (116 பிஎஸ்/250 என்எம்) ஆகியவை ஆகும். கூடிய விரைவில் கியா கேரன்ஸ் காரில், சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில் தற்போதைய நிலையில் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஐஎம்டி, 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

வசதிகளை பொறுத்தவரையில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10.1 இன்ச் பின் இருக்கை என்டர்டெயின்மெண்ட் சிஸ்டம், சன்ரூஃப், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா கேரன்ஸ் காருக்கு ஏற்பட்டிருப்பது சிறிய அளவிலான சரிவுதான். எனவே வரும் மாதங்களில் இந்த சரிவில் இருந்து கியா கேரன்ஸ் மீண்டு விடும் என உறுதியாக நம்பலாம். கியா நிறுவனம் இன்னும் சில மாதங்களில், கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

அத்துடன் கியா கேரன்ஸ் காரின் சிஎன்ஜி மாடலும் விற்பனைக்கு வரவுள்ளது. இவை எல்லாம் கியா கேரன்ஸ் காரின் விற்பனை எண்ணிக்கையை உயர்த்த உதவி செய்யும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காருக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கியா கேரன்ஸ் திகழ்கிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, August 11, 2024, 23:17 [IST]
English summary
Kia carens sales report july 2024 5 per cent degrowth
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+