கன்னாபின்னானு மைலேஜ் குடுக்க போகும் 7 சீட்டர் கார்! மாருதி அஸ்திவாரம் சீக்கிரமே ஆட்டம் காண போகுது!

இந்திய மக்கள் மத்தியில் கியா நிறுவனத்தை பிரபலமாக்கிய கார்களில் ஒன்று கியா கேரன்ஸ் (Kia Carens). இது இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) ஆகிய கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. கியா கேரன்ஸ், எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். எனவே 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைத்து கொண்டுள்ளது. இதன் காரணமாக அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக கியா கேரன்ஸ் மாறியுள்ளது.

இது தற்போது வெளியாகியுள்ள கியா கேரன்ஸ் காரின், நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கியா நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6,384 கேரன்ஸ் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

Kia Carens

ஆனால் நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6,217 கியா கேரன்ஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது 2.62 சதவீத வளர்ச்சி ஆகும். கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் பண்டிகை காலமாக இருந்தது. கியா கேரன்ஸ் காரின் விற்பனை அதிகரித்துள்ளதற்கு ஒரு வகையில் இதுவும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

வரும் காலங்களில் கியா கேரன்ஸ் காரின் விற்பனை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2025ம் ஆண்டில் கியா நிறுவனம் கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அத்துடன் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Kia Carens Instrument Cluster

2025ம் ஆண்டிலேயே கியா கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் விற்பனைக்கு வரவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவேதான் இந்திய சந்தையில் வரும் காலங்களில் கியா கேரன்ஸ் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் கியா கேரன்ஸ் காரில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அத்துடன் மற்ற கியா கார்களை போலவே, அதிநவீன வசதிகளுக்கும் (Features) குறைவில்லை.

இதில், தலா 10.25 இன்ச் அளவில் வழங்கப்பட்டுள்ள ட்யூயல் ஸ்க்ரீன்கள் மிகவும் முக்கியமானது ஆகும். இது தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் வேகமாக பிரபலமடைந்து வரும் ஒரு வசதியாகும். இந்த 2 ஸ்க்ரீன்களில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும்.

இதுதவிர 10.1 இன்ச் அளவில் பின் இருக்கைக்கான பொழுதுபோக்கு சிஸ்டத்தையும், கியா கேரன்ஸ் கார் கொண்டுள்ளது. மேலும் ஏர் ப்யூரிஃபையர், சன்ரூஃப், 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், 6 ஏர்பேக்குகள், 4 சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் ஆகிய வசதிகளும் கூட இருக்கின்றன.

அத்துடன் முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், ட்யூயல் கேமரா டேஷ்கேம் ஆகிய வசதிகளையும் கியா கேரன்ஸ் கார் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தத்தில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் சௌகரியம் என 2 முக்கியமான அம்சங்களையும் பூர்த்தி செய்ய கூடிய வகையிலான வசதிகள் அனைத்தையும் கியா கேரன்ஸ் கிட்டத்தட்ட கொண்டுள்ளது எனலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா கேரன்ஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.52 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 19.94 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கியா கேரன்ஸ் காரை வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.

இதன் காரணமாகவே கியா கேரன்ஸ் காரின் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக உள்ளது. இது இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள கியா நிறுவனத்தின் கார்களில் ஒன்றாகும். கியா நிறுவனம் கேரன்ஸ் காரில் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனையும் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய சந்தையில் நீண்ட காலமாகவே கியா கேரன்ஸ் சிஎன்ஜி வெர்ஷன் சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. இது பெட்ரோல், டீசல் இன்ஜின்களை விட, அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே விற்பனைக்கு வந்தால், நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Saturday, November 23, 2024, 16:08 [IST]
English summary
Kia carens sales report october 2024 3 per cent growth
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+