1இல்ல, 2இல்ல.. 3 குடும்பம் ஒன்னா போகலாம்! இந்த கார்கள் இந்தியா வருவது உறுதியாகிருச்சு.. டீசர் வீடியோ அசத்துது!

தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia), இந்தியாவில் இரண்டு புதிய கார் மாடல்களை விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக சமீப சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே அந்த கார் உற்பத்தி நிறுவனம் டீசர் வீடியோக்களை வெளியிட்டு இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கின்றது. இரண்டு டீசர் வீடியோக்களை அது வெளியிட்டு இருக்கின்றது. ஒன்று இவி 9 (EV9) கார் மாடலுக்கானது ஆகும். மற்றொன்று புதிய தலைமுறை கார்னிவல் (New Gen Carnival) கார் மாடலுக்கானது ஆகும்.

இதில் இவி9 என்பது எஸ்யூவி ரக மின்சார கார் மாடல் ஆகும். உலக அளவில் ஏற்கனவே இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. கார்னிவல், இந்தியாவிற்கு ஏற்கனவே பழக்கப்பட்ட கார் மாடலாகும். இது ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எம்பிவி ரக வாகனம் ஆகும். இந்த கார்கள் என்ன மாதிரியான திறன், சிறப்புகளைக் கொண்டவை என்பதுபற்றிய முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். பதிவிற்குள் போகலாம் வாங்க.

Kia carnival teased

கியா கார்னிவல்: இந்திய பணக்காரர்கள் பலரின் மனதைக் கொள்ளைக் கொண்ட கார் மாடலாக கார்னிவல் இருக்கின்றது. குறிப்பாக, திரைநட்சத்திரங்கள் பலரின் மனம் கவர்ந்த வாகனமாகவே இது மாறியிருந்தது. இந்த மாதிரியான சூழலிலேயே குறிப்பிட்ட காரணங்களுக்காக இந்த காரை விற்பனையில் இருந்து அகற்றியது, கியா.

இந்த நிலையிலேயே இதன் புதிய தலைமுறை வாயிலாக இதன் காலியிடத்தை நிரப்பும் முயற்சியில் அந்த நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. முன்பைவிட அதிக கவர்ச்சியான தோற்றம், அதிக தொழில்நுட்பம், குறிப்பாக அதிக லக்சூரி அம்சங்கள் ஆகியவற்றுடன் இந்த கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

மிக முக்கியமாக 12.3 அங்குல திரைகள் இரண்டு இந்த காரில் வழங்கப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இத்துடன், முன் மற்றும் பின் பக்கத்தில் கேமிரா, ஹெட்-அப் திரை, டிஜிட்டல் ரியர் வியூ கேமிரா, டிஜிட்டல் சாவி, ஆம்பியன்ட் லைட் செட்-அப் போன்ற சிறப்பம்சங்கள் புதிய கார்னிவல் காரில் இடம் பெற இருக்கின்றன.

தொடர்ந்து, இந்த காரை மிக அதிக இருக்கைகளைத் தாங்கிய காராகவும் கியா விற்பனைக்குக் கொண்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. அந்தவகையில் 7 மற்றும் 11 இருக்கைகள் ஆப்ஷனே இந்த காரில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. எஞ்சின் பொருத்தவரை 2.2 லிட்டர் டீசல் எஞ்சினே எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த காரை கியா நிறுவனம் சிபியூ வாயிலாகவே விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகக் கூறப்படுகின்றது.

பின்னாளில் இதற்கு கிடைக்கும் டிமாண்டைப் பொருத்து அதன் உற்பத்தியை உள்ளூர் மயமாக்க அது திட்டமிட்டு இருக்கின்றது. கியா கார்னிவல் விற்பனைக்கு வரும்பட்சத்தில் டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Velfire), லெக்சஸ் எல்எம் 350எச் (Lexus LM 350h) ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும். இந்த காரின் 11 சீட்டர் வெர்ஷன் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களும் பயணிக்க ஏதுவான காராக இருக்கும் என தெரிகின்றது.

கியா இவி9 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்: இது ஓர் உலக புகழ்பெற்ற கார் மாடல் மட்டுமில்லைங்க, உலகின் பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்ற கார் மாடலும் ஆகும். நெடுஞ்சாலை பாதுகாப்புக்கான காப்பீட்டு நிறுவனம் (Insurance Institute for Highway Safety) வழங்கும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான 'டாப் சேஃப்டி பிக்' (Top Safety Pick) அவார்டைகூட இந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது.

அந்த அளவிற்கே, அதிக பாதுகாப்பு, அதிக கவர்ச்சி மற்றும் அதிக ஆடம்பர அம்சங்களைத் தாங்கிய காராக அது காட்சியளிக்கின்றது. இந்த காரை கியா நிறுவனம் தன்னுடைய ஜி-ஜிஎம்பி பிளாட்பாரத்தை பயன்படுத்தியே தயார் செய்திருக்கின்றது. மேலும், இது ஓர் 3 வரிசை இருக்கை அமைப்பைக் கொண்ட கார் மாடலும் ஆகும்.

ஆகையால், இந்த எலெக்ட்ரிக் காரும் குடும்பத்துடன் பயணிக்க ஏதுவான வாகனமாக இருக்கும் என தெரிகின்றது. டிவி போன்ற பெரிய திரைகள், பன்முக ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், லெவல் 2 அடாஸ் அம்சம், பவர் வசதிக் கொண்ட 2வது வரிசை இருக்கைகள் மற்றும் பவர் டெயில்கேட் போன்ற அம்சங்களே உலக சந்தையில் விற்பனையில் உள்ள கியா இவி9 எலெக்ட்ரிக் காரில் இடம் பெற்றிருக்கின்றன.

இதுதவிர, அதிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கக் கூடிய இருக்கைகள், ஆர்ம் ரெஸ்ட், கப் ஹோல்டர்கள், வான்வெளியை முழுமையாக காண்பிக்கும் வகையில் பெரிய சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜர் போன்ற அம்சங்களும் இந்த எலெக்ட்ரிக் காரில் இடம் பெற்றிருக்கின்றன.

உலக சந்தையில் பல்வேறு இயக்க ஆப்ஷன்களில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்தியாவிலும் இதேபோல் அதிக இயக்க ஆப்ஷன்களுடன் இந்த கார் விற்பனைக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த காரை வருகின்ற தீபாவளி பண்டிகைக்குள் டெலிவரி செய்யத் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கியா நிறுவனம் வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் வளைத்துப் போடும் ஓர் முயற்சியாக சமீபத்தில் செல்டோஸ், சொனெட் மற்றும் கேரன்ஸ் ஆகிய கார் மாடல்களில் சிறப்பு பதிப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையிலேயே தற்போது அது புதுமுக கார் மாடல்களையும் இந்தியர்களைக் கவரும் விதமாக விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது உறுதியாகி இருக்கின்றது. அக்டோபர் 3 ஆம் தேதி அன்றே இந்த கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, September 7, 2024, 11:00 [IST]
English summary
Kia carnival and ev9 teased ahead 3rd october debut here is more details
மேலும்... #kia motors #Kia EV9 #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+