விலை சொன்னதும் ஊரே கரிச்சு கொட்டுச்சு! ஆனாலும் யாரும் புக்கிங்கை கேன்சல் பண்ணல ஏன் தெரியுமா?
கியா நிறுவனம் சமீபத்தில் தனது கார்னிவெல் காரை அப்டேட் செய்து வெளியிட்டது. இத்துடன் சேர்த்து கியா இவி9 என்ற எலெக்ட்ரிக் காரையும் இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த கார்கள் அதிக விலையில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமானதால் இந்த காரை புக் செய்த மக்கள் பலர் தங்களது புக்கிங் கேன்சல் செய்வார்கள் என பேசப்பட்டது. ஆனால் அதற்கு நேர் மாறாக நடந்துள்ளதாக கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார்கள் இதற்காக அதிக விலையில் அறிமுகமாகிய புக்கிங் ஏன் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு குறைவாக நடக்கவில்லை என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
கியா நிறுவனம் தனது பிளாக்ஷிப் காரான இவி9 என்ற எலெக்ட்ரிக் காரையும் புதிதாக அப்டேட் செய்யப்பட்ட கார்னிவெல் எம்பிவி காரையும் இந்திய மார்க்கெட்டில் இந்த மாத துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது. இதில் கார் ரூபாய் 1.29 கோடி என்ற விலையிலும் கியா கார்னிவெல் கார் ரூ 63.9 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு அறிமுகமாகின.

கியா நிறுவனம் இந்த இரண்டு கார்களையும் ப்ரீமியம் மற்றும் சொகுசு கார்களாக இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. கியா நிறுவனம் தனது கார்னிவெல் காரை இதற்கு முந்தைய தலைமுறை காரை விட இருமடங்கு அதிகமான விலையில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளதாக பல பேசினார்கள். இதனால் இந்த காரை புக் செய்த பலர் தங்கள் புக்கிங் கேன்சல் செய்வார்கள் என பேசப்பட்டது.
ஆனால் கியா நிறுவனமோ கியா கார்னிவெல் கார் அப்டேட் செய்யப்பட்டு வரும்போது அதில் பல்வேறு விதமான புதிய அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மக்கள் விரும்பும் பல்வேறு அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மார்க்கெட்டில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் மற்றும் டொயோட்டா வில் ஃபயர் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த களமிறங்கி விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் இந்த காரின் விலை அறிவிக்கப்பட்டவுடன் பலர் இந்த காரை புக் செய்தவர்கள் தங்கள் புக்கிங்கை கேன்சல் செய்வார்கள் என பேசப்பட்டது. தற்போது கியா நிறுவனம் இதற்கு நேர் மாறாகவே நடந்துள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது. இந்த காரின் விலை அறிவிக்கப்படுவதற்கு முன்னால் 2800 புக்கிங் செய்யப்பட்டுள்ளதாகவும் காரின் விலை அறிவிக்கப்பட்டதற்கு பிறகு வெறும் 50 பேர் மட்டுமே இந்த காரின் புக்கிங் கேன்சல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பொதுவாக காரை புக் செய்தவர்கள் கேன்சல் செய்வது என்பது சாதாரண விஷயம் தான் வழக்கமாக மற்ற கார்களுக்கு எவ்வளவு கேன்சலேஷன் நடக்குமோ அதைவிட குறைவாகவே தற்போது இந்த காருக்கு நடந்துள்ளதாகவும் பேசப்படுகிறது. இதனால் விலை அறிவிப்பு காரணமாக இந்த காரை வாங்காமல் புக்கிங் கேன்சல் செய்யும் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முக்கியமான காரணம் கியா நிறுவனம் இந்த கார்னிவெல் காரை எந்த செக்மெண்டில் விற்பனை செய்கிறதோ அந்த செக்மெண்டில் இதற்கு போட்டியாக விற்பனையாகும் டொயோட்டா நிறுவனம் வில் ஃபயர் என்ற காரை விற்பனை செய்து வருகிறது. இந்த காரின் விலை ரூபாய் 1.22 கோடி முதல் ரூபாய் 1.32 கோடி வரை விற்பனையாகி வருகிறது. அதை ஒப்பிடும்போது கியா கார்னிவெல் காரின் விலை மிகக் குறைவு தான்.
கியா நிறுவனம் இந்த கார்னிவெல் காரை நகரங்களில் வசிக்கும் அதிக வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களை டார்கெட் செய்து விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. கார்ப்ரேட்டுகள், பெரும் நிறுவனங்களில் உள்ள சிஇஓக்கள், விஐபிகள், அரசியல்வாதிகள், பெரிய தொழிலதிபர்கள், பணக்கார குடும்பத்தில் இருப்பவர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பட நடிகைகள், நடிகர்கள் ஆகியோர் இந்த காரை வாங்குவார்கள் என அனுமானித்து இந்த காரை வெளியிட்டுள்ளது.
இப்படியாக இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் 40 முதல் 50 வயதானவர்களாக இருக்கிறார்கள். இந்த காரை தேர்வு செய்யும் மக்கள் இந்த காரின் விலையை விட இது தரும் வசதிகள் சொகுசு அம்சங்கள் சமூக அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தான் கணக்கிடுவார்கள். காரின் விலையை பெரிய அளவில் அவர்கள் கணக்கிடுவதில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் பலர் விரும்பும் லெவல் 2 அடாஸ் சிஸ்டம் மற்றும் 11இன்ச் கொண்ட ஹெட்ஸ்அப் டிஸ்ப்ளே உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளதால் இந்த அம்சங்களை பார்த்து மட்டுமே வாடிக்கையாளர்கள் கார்களை புக்கிங் செய்தார்கள் எனவும் விலை அவர்களுக்கு பெரிய பொருட்டு இல்லை என்பதால் புக்கிங் பெரிய அளவில் கேன்சல் செய்யப்படவில்லை எனவும் தற்போது தெரிய வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கியா நிறுவனத்தின் கார்னிவெல் காரை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிக குறைவாக தான் இருக்கிறது. அதனால் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து சர்வதேச அளவில் உள்ள 4ம் தலைமுறை காரை நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் களம் இறக்கி உள்ளதால் அதிக விலை என்பது இங்கு பெரிய பொருட்டாக இல்லை.


Click it and Unblock the Notifications









