ரூ63 லட்சம் காரை வெறும் ரூ1.49 லட்சத்தில் ஈஸியா வாங்கலாம்! யார் வாங்க முடியும் தெரியுமா?

கியா நிறுவனம் சமீபத்தில் அதிகம் அறிமுகப்படுத்திய புதிய தலைமுறை கியா கார்னிவெல் மற்றும் இவி 9 ஆகிய கார்களுக்கு தற்போது லீஸ் திட்டத்தையும் அறிவித்துள்ளது. அதன்படி மாத லிஸ்ட் தொகை செலுத்தி இந்த காரை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக விலையுள்ள இந்த காரை வாங்க சிரமப்படுபவர்கள். இந்த லீஸ் முறையில் கம்மியான விலையில் இந்த காரை வாங்க முடியும். இது எப்படி என விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கியா நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சர்வதேச அளவில் விற்பனையாகி வந்த நான்காம் தலைமுறை கியா கார்னிவெல் என்ற பிரிமியம் எம்பிவி ரக காரை இந்திய மார்க்கெட்டில் ரூபாய் 63.90 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தியது. இத்துடன் சேர்த்து என்ற காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் கியா கார்னிவெல் காரின் டெலிவரி தற்போது துவங்கியுள்ளது.

KIA Carnival Lease

இந்தியாவில் முதல் கியா கார்னிவெல் காரை பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாங்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் எல்லாம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்நிலையில் இந்த புதிய தலைமுறை கியா கார்னிவெல் மற்றும் இவி 9 ஆகிய இரண்டு கார்களுக்கும் லீஸ் திட்டத்தை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி கியா கார்னிவெல் காரை லீஸ் முறையில் ஒருவர் வாங்க வேண்டும் என்றால் அதில் இரண்டு வேரியன்ட் இருக்கிறது. இரண்டு வேரியன்ட்களையும் ரூபாய் 1.49 லட்சம் என்ற மாத லீஸ் முறையில் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவி9 கார் என்றால் மாதம் ரூபாய் 3 லட்சம் என்ற லீஸ் தொகையில் இந்த காரை வாங்கி பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

KIA Carnival Lease

கியா நிறுவனம் தனது இவி9 என்ற 6 சீட்டர் கொண்ட எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது. இதுபோக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள லீஸ் திட்டத்தை பொறுத்த வரைக்கு கார்னிவெல் காருக்கு இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்து ஆண்டுகளில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது மட்டுமல்லாமல் கூடுதலாக ஆண்டுக்கு 10,000, 15,000, 20,000 கிலோ மீட்டர் தேர்வு செய்து பயன்படுத்தும் வகையில் அனுபவிக்க இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கியா நிறுவனம் இப்படியாக தான் தங்கள் திட்டங்களை அறிவிக்கும். அதில் நீங்கள் தேர்வு செய்யும் தொகைக்கு ஏற்ப உங்களுக்கான வசதிகள் மற்றும் லீஸ் திட்டங்கள் மாறுபடும்.

KIA Carnival Lease

கியா கார்னிவெல் காரில் ப்ரீமியம் அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. முக்கியமாக இதில் பானரோமிக் கர்வ்டு டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. அதில் 12.3 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 12.3 இன்ச் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கண்ட்ரோல் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இதுபோக இந்த காரில் 12 ஸ்பீக்கர் கொண்ட போஸ் ஆடியோ சிஸ்டமும், இரண்டாவது வரிசை சீட் பவர்டு சீட்டாகவும், வெண்டிலேட்டட் மற்றும் லெக் சப்போர்ட் கொண்ட சீட்டுகளாகவும் வழங்கப்பட்டுள்ளன.

இது போக இந்த காரில் பின்வரிசை சீட்டுகளில் அமர்வதற்கு பவார்டு ஸ்லைடிங் டோர் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக இந்த காரின் உட்பகுதியில் டூயல் சன்ரூஃப் தொடங்கப்பட்டுள்ளது. இந்த காரில் பாதுகாப்பு அம்சத்திற்காக தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 33 வகையான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கியா கார்னிவெல் காரில் 2.2 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் இதற்கு முந்தைய தலைமுறை காரிலும் பொருத்தப்பட்டிருந்தது. இந்த இன்ஜின் 200 பிஎஸ் பவரையும் 44 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் காரை பொறுத்தவரை ரூபாய் 1.3 கோடி என்ற விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 99.8 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் 384 எச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 561 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாகவும் இருக்கிறது.

இந்த கார் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.3 நொடியில் பிக்கப் செய்து விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் 10 முதல் 80 சதவீத பேட்டரியை வெறும் 24 நிமிடத்தில் சார்ஜ் செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த காரை சார்ஜ் செய்ய அதிக நேரம் காத்திருக்க வேண்டிய தேவையில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அடிக்கடி வாகனத்தை மாற்றும் பழக்கம் கொண்ட பணக்காரர்கள் இந்த லீஸ் முறையில் வாகனத்தை வாங்குவதை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. இவர்கள் அதிக விலை கொடுத்து வாகனத்தை வாங்க வேண்டியது இல்லை அதற்கு பதிலாக லீவ் தொகையை மட்டும் செலுத்தினாலே அந்த காரை அவர்களால் சொந்தக்காரர் போல பயன்படுத்த முடியும்.

More from DriveSpark

Article Published On: Friday, October 25, 2024, 23:08 [IST]
English summary
Kia carnival lease plan india for just rs 1 49 lakh
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X