7 பேரும் சொகுசா போகலாமா!.. பெரிய உருவம் கொண்ட காரை விற்பனைக்கு கொண்டு வந்த கியா..

இந்தியாவே எதிர்பார்த்த கியா கார்னிவல் (Kia Carnival) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஓர் சொகுசு அம்சங்கள் நிறைந்த எம்பிவி (MPV) ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலை கியா நிறுவனம் நேரடியாக இறக்குமதி செய்தே விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்தியாவிற்கு கார் மாடல் ஒன்றும் புதிதல்ல. இது ஏற்கனவே பழக்கப்பட்ட கார் மாடல் ஆகும். அதேவேளையில், இப்போது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருப்பது புதிய அம்சங்கள், அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்கள் மற்றும் அதிக லக்சூரி அம்சங்களைத் தாங்கிய நான்காம் தலைமுறை வெர்ஷன் ஆகும்.

இதையே நேரடியாக இம்போர்ட் செய்து கியா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த ஆடம்பர கார் பற்றி அறிய வேண்டிய சுவாரஷ்யமான மற்றும் முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். மிக முக்கியமாக காரின் விலை, சிறப்பம்சங்கள் எஞ்சின் விபரம் மற்றும் எத்தனை வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Kia carnival top things

வேரியண்ட் விபரம்: கியா நிறுவனம் கார்னிவல் கார் மாடலை ஒரே ஒரு தேர்வில் மட்டுமே விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. லிமோசைன் எனும் வேரியண்டில் மட்டுமே அது விற்பனைக்குக் கிடைக்கும். முன்னதாக விற்பனையில் இருந்த கியா கார்னிவல் மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைத்தது. பிரிமியம், பிரெஸ்டீஜ் மற்றும் லிமோசைன் ஆகிய தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைத்தது.

ஒவ்வொன்றும் தனித்துவமான அம்சங்கள் மற்றும் இருக்கைகள் வசதியைக் கொண்டது ஆகும். அதாவது, ஏழு, எட்டு மற்றும் ஒன்பது ஆகிய இருக்கை எண்ணிக்கைகளின் அடிப்படையில் அது கிடைத்து. ஆனால், இப்போது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் கார்னிவல் கார் மாடலோ 7 சீட்டர் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும். உலக சந்தையில் 11 பேர் பயணிக்கின்ற வகையிலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

விலை விபரம்: கார்னிவல் லிமோசான் கார் மாடலுக்கு ரூ. 63.90 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதேவேளையில் முன்னதாக விற்பனையில் இருந்த கார்னிவலைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிக விலை ஆகும். முந்தைய வெர்ஷனின் அதிகபட்ச விலையே ரூ. 35.50 லட்சம் மட்டுமே ஆகும். இதனால்தான் இதற்கு மிக சிறப்பான வரவேற்பு நாட்டின் பணக்கார குடும்பத்தினர்கள் மத்தியில் கிடைத்தது.

சிறப்பம்சங்கள்: இந்த காரின் அழகிய தோற்றத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக ஆட்டோ எல்இடி புரஜெக்டர் வகை ஹெட்லேம்ப், எல்இடி பகல் நேரத்திற்கான லைட்டுகள், 18 அங்குல அலாய் வீல்கள் மற்றும் டூயல் எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, டெயில் லைட் எல்இடி தரத்திலேயேக் காட்சியளிக்கின்றது. தொடர்ந்து, இணைப்பு வகை எல்இடி லைட் பார் போன்றவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும், அட்வான்ஸ்டான டிராவல் அனுபவத்தை வழங்கும் விதமாக இரண்டு 12.3 அங்குல திரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஒன்று டிரைவருக்கான திரையாகவும், மற்றொன்று, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும் செயல்படும். இதுதவிர, 11 அங்குல ஹெட்-அப் திரை, 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவருக்கான இருக்கை ஆகியவை இதில் வழங்கப்பட்டு உள்ளன.

இந்த இருக்கை வெண்டிலேஷன் மற்றும் ஹீட்டிங் வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றுடன், 64 வண்ணங்கள் அடங்கிய ஆம்பியன்ட் லைட், மழை வந்தால் தானாக வைப் செய்யும் வைப்பர் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட், ஸ்டாப் ஆகிய வசதிகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

பாதுகாப்பு அம்சங்கள்: கியா நிறுவனம் இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களை மிக தாராளமாக வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 8 ஏர் பேக்குகளை பயணிகளின் பாதுகாப்பான ரைடை உறுதிப்படுத்தும் விதமாக அது வழங்கி இருக்கின்றது. இதுதவிர, லெவல் 2 வகை அடாஸ் அம்சம், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், இஎஸ்சி மற்றும் ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

எஞ்சின் திறன் மற்றும் கியர்பாக்ஸ் விபரம்: 2.2 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் எஞ்சினையே இந்த காரில் கியா வழங்கியிருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 193 எச்பி மற்றும் 441 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். கியர்பாக்ஸைப் பொருத்த வரை 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டரே பயன்படுத்தப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா கார்னிவல் கார் அதிக ஆடம்பர அம்சங்கள் நிரம்பியதாக விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஆகையால், இதற்கு பணக்கார குடும்பத்தினர் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு 3 ஆண்டுகள் இலவச பராமரிப்பு திட்டம் மற்றும் வாரண்டி மற்றும் ஆர்எஸ்ஏ பலன்களை கியா அறிவித்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 3, 2024, 15:59 [IST]
English summary
Kia carnival luxury mpv top things to know price engine variants details
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+