கியா செல்டோஸ் காரை வாங்க ஆள் இல்லை! இப்படி நடக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!!
கியா (Kia), தென்கொரியாவை சேர்ந்த முன்னணி கார் நிறுவனம். 2019ஆம் ஆண்டில் செல்டோஸ் கார் மூலமாக மார்க்கெட்டில் நுழைந்த கியா, அதன்பின் தொடர் கார் அறிமுகங்கள் மூலமாக இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், கடந்த நவம்பர் மாதத்தில் கியா கார்கள் விற்பனை ஆனது கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், கியா செல்டோஸ் கார்கள் விற்பனை குறைந்திருப்பது ஆகும். கடந்த நவம்பரில் அப்படி எத்தனை கார்களை கியா விற்பனை செய்துள்ளது என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் கியா நிறுவனத்தின் முக்கியமான கார், சொல்டோஸ் மற்றும் சொனெட் ஆகும். இதில் சொனெட்டின் விற்பனை சிறப்பாகவே இருந்துவரும் நிலையில், செல்டோஸ் காரின் விற்பனை மாதத்திற்கு மாதம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பரில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு நவம்பரில் அதில் பாதி கூட விற்பனையாகவில்லை.

கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கியா காராக சொனெட் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த நவம்பரில் விற்பனை செய்யப்பட்ட சொனெட் கார்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 255 ஆகும். கடந்த ஆண்டு நவம்பரில் வெறும் 6 ஆயிரத்து 433 சொனெட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன என்றாலும், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 9 ஆயிரத்து 699 சொனெட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இந்த வகையில் பார்த்தால், அக்டோபரை காட்டிலும் நவம்பரில் 444 சொனெட் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. சொனெட்டிற்கு அடுத்து, கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா காராக 2வது இடத்தில் கேரன்ஸ் உள்ளது. கியாவின் விலை குறைவான எம்பிவி காரான கேரன்ஸ் கடந்த மாதத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 672 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

2023 நவம்பரில் 4,620 கேரன்ஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், கடந்த 2024 அக்டோபரில் 6,384 கேரன்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், அக்டோபரை காட்டிலும் நவம்பரில் 712 கேரன்ஸ் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கு அடுத்து 3வது இடத்திற்கு செல்டோஸ் தள்ளப்பட்டுள்ளது.
ஏனெனில், கடந்த நவம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட செல்டோஸ் கார்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 364 ஆகும். ஆனால், கடந்த ஆண்டு நவம்பரில் சுமார் 11 ஆயிரத்து 684 செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், 2023 நவம்பரை காட்டிலும் 2024 நவம்பரில் 6,320 செல்டோஸ் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதாவது, கடந்த ஆண்டு நவம்பரில் விற்பனை செய்யப்பட்டதில் பாதி எண்ணிக்கையிலான செல்டோஸ் கார் கூட இந்த ஆண்டு நவம்பரில் விற்பனை செய்யப்படவில்லை. இந்த 2024 அக்டோபர் மாதத்திலும் நவம்பரை காட்டிலும் 1,001 கார்கள் அதிகமாக 6,365 செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
சொனெட், கேரன்ஸ் மற்றும் செல்டோஸ் இவை மூன்றும் தான் தற்போதைக்கு இந்தியாவில் கியா நிறுவனத்தின் பிரதானமான கார்களாகும். இவை இல்லாமல் கார்னிவல், இவி6 போன்ற விலையுயர்ந்த கார்களையும் கியா விற்பனை செய்கிறது. கடந்த நவம்பர் மாதத்தில் 241 கார்னிவல் கார்களும், 68 இவி6 எலக்ட்ரிக் கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சொனெட் காருக்கு தொடர்ந்து சிறப்பான வரவேற்பு கிடைப்பது கியா நிறுவனத்துக்கு ஆறுதலாக இருந்தாலும், செல்டோஸின் விற்பனை சரிவு கியாவுக்கு நிச்சயமாக கவலையாகவே இருக்கும். ஏனெனில், இந்தியாவில் கார்கள் விற்பனை செய்ய ஆரம்பித்த கியா, அறிமுகம் செய்த முதல் கார் செல்டோஸ் ஆகும். ஆதலால், இந்தியாவில் கியா நிறுவனத்திற்கு முகம் ஆக செல்டோஸ் விளங்குகிறது.


Click it and Unblock the Notifications









