கியா ஷோரூமுக்கு வரும் நிறைய பேர் வாங்குவது இந்த காரை தான்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது!

கியா (Kia), உலகளவில் பிரபலமான தென்கொரிய கார் நிறுவனம். 2019ஆம் ஆண்டில் செல்டோஸ் மூலமாக இந்திய மார்க்கெட்டில் நுழைந்த கியா, தற்சமயம் இந்தியாவின் டாப்-5 கார்களுள் ஒன்றாக விளங்குகிறது. தொடர்ந்து புது, புது எலக்ட்ரிக் கார்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துவரும் கியா, நடந்து முடிந்த 2024 மே மாதத்தில் எத்தனை கார்களை விற்பனை செய்துள்ளது என்பது குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அதன்படி, கடந்த மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கியா கார்களின் எண்ணிக்கையையும், வழக்கத்தை காட்டிலும் அவை எவ்வளவு அதிகம் என்பதையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் கார்கள் விற்பனையில் வேகமாக வளர்ந்துவரும் நிறுவனமான கியா கடந்த 2024 மே மாதத்தில் மொத்தம் 19,500 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் இது கிட்டத்தட்ட 4% அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 18,766 கார்களை மட்டுமே கியா விற்பனை செய்து இருந்தது.

kia cars may sales report

கடந்த மே மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கியா காராக முதலிடத்தில் சொனெட் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 7,433 சொனெட் கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. முதல்முறையாக 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சொனெட் காரை இந்த ஆண்டு துவக்கத்தில் கியா அப்டேட் செய்திருந்தது.

ஆனால், கடந்த ஆண்டு மே மாதத்தில் 8,251 சொனெட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், கியா சொனெட் கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது 818 குறைந்துள்ளது. அதாவது, 2023 மே மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு மே மாதத்தில் 818 சொனெட் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இப்போதும் இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் கியா காராக முதலிடத்தில் சொனெட் உள்ளது.

kia cars may sales report

சொனெட்டிற்கு அடுத்து, கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா காராக 2வது இடத்தில் செல்டோஸ் உள்ளது. நடந்து முடிந்த கடந்த மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கியா செல்டோஸ் கார்களின் எண்ணிக்கை 6,736 ஆகும். ஆனால், கடந்த ஆண்டு மே மாதத்தில் 4 ஆயிரத்திற்கும் கொஞ்சம் அதிகமான செல்டோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

சரியாக சொல்ல வேண்டுமென்றால், 4,065 செல்டோஸ் கார்கள் மட்டுமே அந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 2023 மே மாதத்தில் செல்டோஸ் கார்களை காட்டிலும் கியா கேரன்ஸ் எம்பிவி கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், இந்த ஆண்டு மே மாதத்தில் 3வது இடத்திற்கு சரிந்துள்ள கேரன்ஸ் 5,316 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

kia cars may sales report

ஆனால், கடந்த ஆண்டு மே மாதத்தில் 6,367 கேரன்ஸ் கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. சொனெட், செல்டோஸ், கேரன்ஸ் இவை மூன்றும் தான் தற்போதைக்கு கியா இந்தியா நிறுவனத்தின் பிரதான கார்களாக உள்ளன. இவை தவிர்த்து, இவி6 என்கிற எலக்ட்ரிக் காரையும் இந்தியாவில் கியா நிறுவனம் விற்பனை செய்கிறது. ஆனால், ஒரு மாதத்தில் 100 கியா இவி6 எலக்ட்ரிக் கார்கள் கூட விற்பனையாகுவதில்லை.

இந்தியாவில் உற்பத்தி செய்யும் கார்களை வெளிநாடுகளுக்கும் கியா நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது. கடந்த மே மாதத்தில் மொத்தம் 2,304 கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு கியா ஏற்றுமதி செய்துள்ளது. ஆக, ஒட்டுமொத்தமாக கடந்த மாதத்தில் 21,804 கார்கள் கியா இந்தியா நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இந்தியாவில் உற்பத்தி செய்யும் கார்களை 100க்கும் அதிகமான நாடுகளுக்கு கியா ஏற்றுமதி செய்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்கள் உற்பத்தி மையமாக இந்தியாவை கியா நிறுவனம் நன்கு பயன்படுத்தி வருகிறது. ஏனெனில், நம் நாட்டில் கார்களை உற்பத்தி செய்வது என்பது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் செலவு குறைவு ஆகும். அதேநேரம், இந்தியாவிலும் கார்கள் விற்பனையில் கியா முன்னேற்றம் கண்டு வருகிறது. இது கியா நிறுவனத்துக்கு டபுள் போனஸ் என்றுதான் சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Sunday, June 2, 2024, 8:00 [IST]
English summary
Kia cars sales report of may 2024 check all details here
மேலும்... #kia motors #kia sonet #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X