கண்ண மூடிட்டு போய் வாங்குறாங்க.. இந்தியாவில் சாதனை படைக்கும் தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனம்..

இந்தியாவில் தனக்கென ஓர் மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கின்றது தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனமான, கியா (Kia). இதை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களே தற்போது வெளியாகி உள்ளன. சுமார் 10 லட்சம் யூனிட் கியா கார்கள் நாட்டில் விற்பனையாகி இருப்பதாகவே தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து ஐந்து ஆண்டுகளே ஆகின்றன. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் 59 மாதங்களே ஆகின்றன.

இந்த ஐந்தாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை கியா கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்த சூழலிலேயே ஜாக்பாட் சந்தோஷமாக 10 லட்சம் யூனிட் விற்பனை சாதனையை அது படைத்து இருக்கின்றது. இது ஒட்டுமொத்த இந்திய வாகன உலகிற்கும் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

Kia hits 1m sales milestone

மேலும், 10 லட்சம் யூனிட் விற்பனை தகவலின் வாயிலாக கியா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக அமோகமான வரவேற்பு நாட்டில் கிடைத்துக் கொண்டிருப்பது மிக துள்ளியமாக தெரிய வந்திருக்கின்றது. கியா நிறுவனம் இந்தியாவில் முதன் முதலில் அறிமுகப்படுத்திய கார் மாடல் செல்டோஸ் (Seltos) ஆகும்.

இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல். இதுவே இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கியா கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் சுமார் 48 சதவீத பங்களிப்பை இந்த கார் மாடலே வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாகவே மற்ற கார் மாடல்கள் இருக்கின்றன.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் நிறுவனத்தின் இரண்டாவது பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக சொனெட் (Sonet)-ம், மூன்றாவது அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக கேரன்ஸ் (Carens)-ம் உள்ளன. சொனெட் 34 சதவீத பங்களிப்பையும், கேரன்ஸ் 16 சதவீத பங்களிப்பையும் வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த கார் மாடல்களுடன் சேர்த்து கியா நிறுவனம் நாட்டில் இவி6 (EV6) எனும் எலெக்ட்ரிக் கார் மாடலையும் நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டுள்ளது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். மேலும், நிறுவனத்தின் மிக அதிக விலைக் கொண்ட தயாரிப்பாகவும் அது காட்சியளிக்கின்றது.

ஆகையால், வசதிப் படைத்தவர்களால் மட்டுமே வாங்கக் கூடிய கார் மாடலாகவும் அது காட்சியளிக்கின்றது. இதன் விளைவாகவே இக்காரின் விற்பனையும் சற்றே குறைவாக இருக்கின்றது. அதேவேளையில், நிறுவனம் எதிர்பார்த்ததைவிட மிக சிறப்பான வரவேற்பு இவி6 எலெக்ட்ரிக் காருக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

தொடர்ந்து, கியா நிறுவனம் விரைவில் இன்னும் சில புதுமுக கார் மாடல்களையும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது நிறுவனத்திற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு அது சீக்கிரமே இவி9 (EV9) மற்றும் கிளாவிஸ் (Clavis) போன்ற கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இதில், இவி9 என்பது எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். உலக அளவில் மிக சிறப்பான வரவேற்பையும், பல்வேறு விருதுகளையும் இந்த கார் மாடல் குவித்துக் கொண்டிருக்கின்றது. இதேபோல், கிளாவிஸ் கார் மாடலை இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவை மையப்படுத்தியே விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இந்த கார் பிரிவிற்கு இந்தியாவில் நல்ல டிமாண்ட் உண்டு என்பது கவனிக்கத்தகுந்தது. இதனால்தான் இந்த பிரிவை மையப்படுத்தி கியா நிறுவனம் கிளாவிஸ் கார் மாடலை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. வருகின்ற 2025 ஆம் ஆண்டிற்குள்ளாகவே இதன் வருகை அரங்கேறிவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 10 லட்சம் யூனிட் விற்பனை எனும் மாபெரும் சாதனையை கியா நிறுவனம் படைத்திருப்பதை வைத்து பார்க்கையில், அந்த நிறுவனத்திற்கு என்ன மாதிரியான அமோகமான வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது துள்ளியமாக தெரிய வந்திருக்கின்றது. மேலும், இதுபோன்று பல்வேறு விற்பனை சாதனையை வரும் நாட்களில் இந்த கார் மாடல் படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, August 26, 2024, 17:33 [IST]
English summary
Kia celebrates 1 million unit sales in india within 5 years
மேலும்... #kia motors #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+