குடும்பமாக செல்வதற்கு ஏற்ற காரை உருவாக்கும் கியா... கார் வாங்கும் பிளானில் இருப்பவங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!

கியா (Kia), தென்கொரியாவை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். செல்டோஸ் கார் மூலமாக 2019ஆம் ஆண்டில் இந்திய மார்க்கெட்டில் நுழைந்த கியா, இந்தியாவில் அறிமுகம் செய்ய பல்வேறு கார்களை தயார் செய்து வருகிறது. அத்தகைய கார்களுள் ஒன்றுதான் க்ளாவிஸ் (Clavis) ஆகும். கடந்த சில மாதங்களில், இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்ட போது சிலமுறை கியா க்ளாவிஸ் கார் நம் கண்ணில் சிக்கியது. அந்த வகையில் தற்போது மீண்டும் க்ளாவிஸ் கார் ஒன்று சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கியா நிறுவனம் அடுத்ததாக அறிமுகம் செய்ய உள்ள கார்களுள் ஒன்று க்ளாவிஸ் ஆகும். இந்த நிலையில், இந்தியாவில் கியா க்ளாவிஸ் கார் ஒன்று மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் உத்தர பிரதேசத்தில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

kia clavis spotted in india

இந்த சோதனை ஓட்டத்தில், கியா க்ளாவிஸ் கார் தடிமனான கருப்பு நிற மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த காரை ஸ்கோடா யெட்டி எஸ்யூவி என நினைத்தோம். ஏனெனில், தோற்றத்தில் ஸ்கோடா யெட்டியை போன்றே இந்த கார் உள்ளது. ஸ்கோடா யெட்டி, சில வருடங்களுக்கு முன்பு வரையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுவந்த கார் ஆகும்.

வீடியோவை சற்று உற்றுக் கவனித்த பின்பே இது கியா நிறுவனத்தின் க்ளாவிஸ் கார் என்பதை அறிந்தோம். இந்த சோதனை ஓட்டத்தில் காரின் பெரும்பாலான பகுதிகள் மறைக்கப்பட்டு இருப்பினும், சில பகுதிகளை நம்மால் தெளிவாக காண முடிகிறது. முக்கியமாக, தடிமனான B-பில்லர் காரில் இருப்பதை காணலாம். அதாவது, முன் இருக்கை வரிசைக்கும், 2வது இருக்கை வரிசைக்கும் இடையில் தடிமனான பில்லர் இருப்பதை பார்க்கலாம்.

kia clavis spotted in india

ஸ்கோடா யெட்டி காரிலும் இவ்வாறான B-பில்லர் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகவே, க்ளாவிஸை பார்ப்பதற்கு யெட்டி போன்று உள்ளதாக ஆரம்பித்தில் கூறினோம். இந்த சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ள க்ளாவிஸ் காரின் C-பில்லரை மறைப்புகளால் மறைத்துள்ளனர். C-பில்லரை வைத்தே கியா க்ளாவிஸ் கார் ஸ்டேஷன் வேகன் தோற்றத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதா அல்லது பிரீமியம் எம்பிவி தோற்றத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதா என்பதை கூற முடியும்.

இன்னும் சொல்லப்போனால், காரின் பின்பகுதி முழுவதையும் மறைத்துள்ளனர். தள்ளக்கூடிய வகையில் பின் கதவுகளை இந்த கார் கொண்டிருக்க போவதில்லை என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். ஒட்டுமொத்தமாக கியா க்ளாவிஸ் கார் பாக்ஸ் போன்றதான தோற்றத்தை கொண்டுள்ளது. சோதனை காரில் சில்வர் நிறத்தில் ரூஃப் ரெயில்கள் இருப்பதையும் நமக்கு கிடைத்துள்ள வீடியோவில் காண முடிகிறது. இந்த சோதனை க்ளாவிஸ் காரில் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

kia clavis spotted in india

தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவில், க்ளாவிஸ் காரின் முன்பக்கத்தை காண முடிகிறது. இந்த காரின் முன்பக்கத்தில் பம்பரில் செங்குத்தான டிசைனில் எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், க்ளாவிஸ் காரின் பின்பக்கத்திலும் செங்குத்தான டிசைனில் எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்படலாம். காரின் முன்பக்கத்தில் எல்இடி டிஆர்எல்-களும் செங்குத்தான டிசைனில் உள்ளன.

மேலும், க்ளாவிஸ் காரின் முன்பக்கத்தில், காற்றை உள்வாங்கும் ஏர்டேம் அளவில் பெரியதாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது நமக்கு கிடைத்துள்ள வீடியோவில் காருக்கு உள்ளே கேபினையும் பார்க்க முடிகிறது. காருக்கு உள்ளே டேஸ்போர்டில் இரு கனெக்டட் திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் தலா 10.25 இன்ச் அளவுகளில் இருக்கலாம். கியா சொனெட் காரில் வழங்கப்படும் அதே 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தான் க்ளாவிஸ் காரிலும் பொருத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சோதனை ஓட்டத்தின் மூலமாக, கியா க்ளாவிஸ் கார் அதன் கடைசி கட்ட சோதனைகளில் உள்ளதை அறிய முடிகிறது. ஆதலால், விரைவாக வரும் மாதங்களில் இந்த கார் அறிமுகம் செய்யப்படலாம். க்ளாவிஸ் கார் மூலமாக, இந்தியாவிற்காக பெரிய திட்டங்களை கியா வைத்துள்ளது. அதாவது, க்ளாவிஸ் காரை எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வெர்சனிலும் அறிமுகம் செய்ய கியா திட்டமிட்டுள்ளது.

Source

More from DriveSpark

Article Published On: Sunday, August 4, 2024, 23:55 [IST]
English summary
Kia clavis car testing on yamuna expressway check all details here
மேலும்... #kia #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X