நாடே காத்து கிடக்கும் புது காரின் விலை இவ்ளோதானா! இந்த குளிர் காலத்துலயும் டாடா, ஹூண்டாய்க்கு வேத்து கொட்டுது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று கியா க்ளாவிஸ் (Kia Clavis). எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார், நடப்பு 2024ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக இந்திய சந்தையில் பொது பார்வைக்கு கொண்டு வரப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு முன்னதாக கியா க்ளாவிஸ் காரின் சோதனை ஓட்டம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கியா க்ளாவிஸ் காரை பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் தற்போது நமக்கு கிடைத்துள்ளன. இதன்படி பார்த்தால், கியா நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, க்ளாவிஸ் காரிலும் ஏராளமான அதிநவீன வசதிகள் (Features) வழங்கப்படலாம் என தெரிகிறது.

Kia Clavis

இதில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் கனெக்ட்டிவிட்டி, 6 ஏர்பேக்குகள் மற்றும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்றவை மிகவும் முக்கியமானவையாக இருக்கலாம். இதுதவிர பனரோமிக் சன்ரூஃப், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள் போன்ற வசதிகளும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ட்யூயல் டோன் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளும் கியா க்ளாவிஸ் காரில் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள், கியா க்ளாவிஸ் காரின் வருகைக்காக காத்து கொண்டுள்ள இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன.

Kia Clavis SUV

பொதுவாக கியா நிறுவன கார்களின் டிசைன் (Design) சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இருக்கும். இந்த வரிசையில் கியா க்ளாவிஸ் காரும் கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்படவுள்ளது. டிசைனை பொறுத்தவரையில், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், 17 இன்ச் ட்யூயல் டோன் அலாய் வீல்கள், ஸ்பிளிட் எல்இடி டெயில்லைட்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் ஆகியவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர இந்த காரின் முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்களும் கொடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. செயல்திறனை பொறுத்தவரையில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் இடம்பெறலாம்.

இதுதவிர 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர வேறு ஒரு இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படலாம் என தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா பன்ச் (Tata Punch) மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) போன்ற கார்களுக்கு போட்டியாக கியா க்ளாவிஸ் களமிறக்கப்படவுள்ளது. இந்த கார்களை போலவே, கியா க்ளாவிஸ் காரின் விலையும் (Price) குறைவாகதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனேகமாக 7 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் கியா க்ளாவிஸ் கார் களமிறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நடப்பு 2024ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக பொது பார்வைக்கு வந்தாலும் கூட, அடுத்த ஆண்டு (2025) தொடக்கத்தில்தான் கியா க்ளாவிஸ் கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, January 29, 2024, 19:56 [IST]
English summary
Kia clavis new details out expected price features design engine
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+