பஞ்ச், எக்ஸ்டர் எல்லாம் காலியாக போகுது! கியாவின் இந்த புதிய கார் பற்றி தெரியுமா?
கியா நிறுவனம் விரைவில் தனது மூன்றாவது எஸ்யூவி ரக காரை மார்க்கெட்டில் இறக்க திட்டமிட்டு வருகிறது. அதன்படி இந்த கார் மைக்ரோ எஸ்யூவி செக்மெண்டில் உள்ள காராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த காருக்கான பெயரை கியா நிறுவனம் கிளாவிஸ் என டிரேடு மார்க் செய்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
கியா நிறுவனம் இந்தியாவில் களமிறங்கி சிறப்பான கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனம் ஆகும். மக்கள் மத்தியில் கியா நிறுவனத்தின் கார்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. இதனால் அதிக எண்ணிக்கையிலான கார்கள் விற்பனையாகி வருகின்றன. இதனால் நாளுக்கு நாள் கியா கார்களின் எண்ணிக்கை சாலைகளில் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் கியா நிறுவனம் தனது மூன்றாவது எஸ்யூவி ரக காரை இந்திய மார்க்கெட்டில் களம் இறக்க முடிவு செய்துள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கியா நிறுவனம் இந்த காருக்கு கிளாவிஸ் என பெயர் வைத்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த கார் இந்தியாவில் களமிறங்கினால் கியா நிறுவனம் களம் இறக்க போகும் ஐந்தாவது காராக இது இருக்கும்.
தற்போது கியா நிறுவனம் AY என்ற கோடு பெயரில் இந்த காரை தயாரித்து வருகிறது. இது நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காராக இருக்கிறது. கியா நிறுவனம் தனது சோனட் காருக்கும் கீழே உள்ள செக்மெண்டில் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வருகிறது. நமக்கு கிடைத்த தகவலின் படி இந்த கார் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் விற்பனைக்கு வருவதற்கான ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

கியா கிளாவிஸ் கார் மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் பட்சத்தில் இது மார்க்கெட்டில் ஏற்கனவே உள்ள டாடா பஞ்ச் மற்றும் ஹுண்டாய் எக்ஸ்ட்ர் ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் வடிவமைப்பை பொறுத்தவரை கியா சோனட் மற்றும் செல்டோஸ் ஆகிய கார்களின் வடிவமைப்பு போல இல்லாமல் கொஞ்சம் பாக்ஸியான லுக்கில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரின் முன் பக்கம் கியான் நிறுவனத்தின் வழக்கமான கிரில் டிசைனும், பம்பரிலேயே பொருத்தப்பட்ட ஹெட் லைட், பெரிய ஏர் டிரம் உள்ளிட்டவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ஸ்பைப் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அதை பார்க்கும்போது இந்த காரில் ரேடாரை அடிப்படையாகக் கொண்ட அடாஸ் தொழில்நுட்பம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முன் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரின் முன்பக்க கிரில் பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது/ இதுபோக ஓஆர்விஎம் பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டு 360 டிகிரி கேமரா வியூ கிடைக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் டூயல் டோன் அலாய் வீல் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக பிளாஷ் டைப் டோர் ஹேண்டில்கள், பானரோமிக் சன் ரூஃப் ஆகியன இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலே சொன்ன பல அம்சங்கள் இந்த செக்மெண்டிலேயே முதல்முறையாக பொருத்தப்பட்ட காராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக காருக்குள்ளே வென்டிலேட் கொண்ட முன்பக்க சீட்டுகள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹெட் ரெஸ்ட் மற்றும் ஆர்ம் ரெஸ்ட் ஆகிய பின்பக்க சீட்டுகளிலும் வழங்கப்படுகிறது. இதுபோக ஏசி வென்டுகள், போன் சார்ஜிங் சாக்கெட்டுகள், 3 பாய்ண்ட் கொண்ட சீட் பெல்ட், ஆகியன பின்பக்க சீட்டிலேயே வழங்கப்படுகிறது.
இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் நேச்சுரல் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகிய இன்ஜின் ஆப்ஷன் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. நிச்சயம் போட்டி நிறுவனங்களின் கார்களின் விலையை விட குறைவான விலையில் தான் இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனம் மைக்ரோ எஸ்யூவி செக்மெண்டில் புதிதாக களமிறக்கும் பட்சத்தில் நிச்சயம் அந்த கார் மக்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். கியா நிறுவனத்தின் வடிவமைப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் இந்த காரும் ஈர்ப்பை ஏற்படுத்தினால் பஞ்ச் மற்றும் எக்ஸ்டர் காரின் விற்பனை சரியும்.


Click it and Unblock the Notifications









