அடி மாட்டு விலையில் புதிய காரை களமிறக்க போகும் கியா! இந்த ரேட்ல மட்டும் வந்துருச்சுனா போட்டி நிறுவனங்கள் காலி!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று கியா க்ளாவிஸ் (Kia Clavis). எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கியா க்ளாவிஸ் கார், அடுத்த ஆண்டு தொடக்கத்தில், அதாவது இன்னும் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கியா க்ளாவிஸ் காரின் சோதனை ஓட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக கியா க்ளாவிஸ் காரை பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் தற்போது நமக்கு தெரியவந்துள்ளன. இந்த செய்தியில் அவற்றை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
கியா க்ளாவிஸ் காரில், கியா கார்னிவல் (Kia Carnival) காரை போன்ற செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்ட எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் கூடிய ஹெட்லைட்கள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அகலமான ஏர் டேம், டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஆகியவற்றையும் நாம் எதிர்பார்க்கலாம்.

மேலும் ட்யூயல் டோன் ரூஃப்ரெயில்கள், சுறா துடுப்பு ஆன்டெனா மற்றும் புத்தம் புதிய டிசைன் கொண்ட எல்இடி டெயில்லைட்கள் ஆகிய அம்சங்களும் வழங்கப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் இன்டீரியரை பொறுத்தவரையில் புதிய 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல், ட்யூயல் ஸ்க்ரீன்கள் போன்றவை வழங்கப்படலாம்.
ட்யூயல் ஸ்க்ரீன்களில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும். அத்துடன் ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் மற்றும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு ஆகிய அம்சங்களையும் நாம் எதிர்பார்க்க முடியும்.

செயல்திறனை பொறுத்தவரையில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. கியா க்ளாவிஸ் கார், கியா சொனெட் காரை விட விலை குறைவானதாக இருக்கலாம்.
இதன்படி பார்த்தால், கியா க்ளாவிஸ் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை கியா சொனெட் காருக்கு மேலாக கியா க்ளாவிஸ் கார் நிலைநிறுத்தப்பட்டால், கியா சொனெட் காரை விட அதிக விலையில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா நிறுவனம் வெகு சமீபத்தில் இந்திய சந்தையில் 2 புத்தம் புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அவை புதிய தலைமுறை கியா கார்னிவல் (Kia Carnival) மற்றும் கியா இவி9 (Kia EV9) ஆகியவை ஆகும். இந்த வரிசையில் கியா நிறுவனத்தின் அடுத்த மிகப்பெரிய லான்ச் என்றால், அது க்ளாவிஸ்தான்.
எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கியா க்ளாவிஸ் கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி கொண்டுள்ளது. சரியான விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், கியா க்ளாவிஸ் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நிச்சயமாக நல்ல வரவேற்பை பெறும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
குறிப்பு: படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை ஆகும்.


Click it and Unblock the Notifications








