பைக்ல போறவங்க எல்லாம் இனி கார்ல போக போறாங்க! லோன் போடாமயே இந்த காரை வாங்கீரலாம்! விலை அந்தளவுக்கு கம்மி!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று கியா (Kia). தற்போதைய நிலையில் மொத்தம் 6 கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அவை கியா சொனெட் (Kia Sonet), கியா செல்டோஸ் (Kia Seltos), கியா கேரன்ஸ் (Kia Carens), கியா கார்னிவல் (Kia Carnival), கியா இவி6 (Kia EV6) மற்றும் கியா இவி9 (Kia EV9) ஆகிய கார்கள் ஆகும். இந்த வரிசையில் ஏழாவதாக ஒரு புத்தம் புதிய காரை கியா நிறுவனம் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

அது காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். எனவே நம்மால் இந்த காரை நடுத்தரமான விலையில் எதிர்பார்க்க முடியும். இதன் காரணமாக இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த கார் தற்போது ஏற்படுத்தியுள்ளது.

Kia Clavis Teaser

இந்திய சந்தையில் கியா நிறுவனம் அடுத்ததாக செய்யப்போகும் மிகப்பெரிய லான்ச் என்றால், அது இந்த கார்தான். அனேகமாக கியா க்ளாவிஸ் (Kia Clavis) அல்லது கியா சைரோஸ் (Kia Syros) ஆகிய 2 பெயர்களில், ஏதேனும் ஒரு பெயரில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

2025ம் ஆண்டின் தொடக்கத்தில், அதாவது இன்னும் ஒரு சில மாதங்களில், இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த காரின் டீசர் (Teaser) புகைப்படங்களை கியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த டீசர் புகைப்படங்களின் மூலமாக பாக்ஸி டிசைனில் (Boxy Design) இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Kia Clavis SUV Teaser

இந்திய சாலைகளில் கடந்த சில மாதங்களாவே இந்த காரை கியா நிறுவனம் சோதனை செய்து கொண்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் மூலமாகவே, இந்த கார் பாக்ஸி டிசைன் கொண்டதாகதான் இருக்கும் என்பது நமக்கு தெரியவந்திருந்தது. தற்போது அந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த காரின் முன் பகுதியில் 'L' வடிவ எல்இடி பகல் நேர விளக்குகள், பின் பகுதியில் அதே 'L' வடிவ டெயில்லைட்கள் வழங்கப்படவிருப்பதும், இந்த டீசர் புகைப்படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. மேலும் ரூஃப் ரெயில்கள் கொடுக்கப்படவிருப்பதும் கூட, இந்த டீசர் புகைப்படங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த காரின் வசதிகளை பொறுத்தவரையில், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 360 டிகிரி கேமரா, மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள், பிரீமியம் ஆடியோ சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் எல்லாம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு இடம்பெறுவதற்கான வாய்ப்புகளும் கூட இருக்கவே செய்கின்றன. செயல்திறனை பொறுத்தவரையில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்கள் ஆகும்.

இவை அனைத்தும் கியா சொனெட் காரில் தற்போது வழங்கப்பட்டு வரும் இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். அவை அப்படியே புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரிலும் வழங்கப்படலாம். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஐஎம்டி, 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா க்ளாவிஸ் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், கியா க்ளாவிஸ் கார் விற்பனையில் சாதனை படைக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 6, 2024, 23:00 [IST]
English summary
Kia clavis syros teaser check expected price specs and more
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+