கடலை மிட்டாய் கணக்கா விற்பனையாக போகும் விலை குறைவான கார்! இப்பவே ஷோரூமுக்கு போயி நமக்கு ஒன்னு சொல்லி வைக்கணும்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று கியா க்ளாவிஸ் (Kia Clavis). இந்த புத்தம் புதிய காரின் சோதனை ஓட்டம் வெளிநாடுகளில் ஏற்கனவே தீவிரமாக நடைபெற்று வருகிறது. டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கூட அந்த செய்திகளை வாசகர்களுக்கு வழங்கியிருந்தது.

இந்த சூழலில் இந்திய சாலைகளில் கியா க்ளாவிஸ் காரின் சோதனை ஓட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கியா க்ளாவிஸ் காரின் அறிமுகம் நெருங்கி வருவதை இது உணர்த்துகிறது. இந்திய சந்தையில் டாடா பன்ச் (Tata Punch), ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) ஆகிய கார்களுக்கு போட்டியாக கியா க்ளாவிஸ் கார் களமிறங்கவுள்ளது.

Kia Clavis Testing Commenced In India

எனவே டாடா பன்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் போலவே கியா க்ளாவிஸ் காரும் விலை குறைவானதாக இருக்கும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகிய 2 கார்களின் ஆரம்ப விலையும் வெறும் 6.13 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இவற்றை போலவே, கியா க்ளாவிஸ் காரின் ஆரம்ப விலையும் 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான ஆவலை கியா க்ளாவிஸ் கார் ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்த காரை பற்றிய இன்னொரு தகவலும் உலா வந்து கொண்டுள்ளது.

2024 Kia Sonet

இந்திய சந்தையில் ஏற்கனவே மிகவும் பிரபலமாக உள்ள கியா சொனெட் (Kia Sonet) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) ஆகிய கார்களுக்கு இடையே க்ளாவிஸ் நிலைநிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது நடக்கும்பட்சத்தில் கியா க்ளாவிஸ் காரின் ஆரம்ப விலை சுமார் 9 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயிக்கப்படலாம்.

ஏனெனில் இந்திய சந்தையில் கியா சொனெட் காரின் ஆரம்ப விலை 7.99 லட்ச ரூபாய் ஆகவும், கியா செல்டோஸ் காரின் ஆரம்ப விலை 10.90 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கிறது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான். ஆனால் டாடா பன்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் கார்களுக்கு போட்டியாக கியா க்ளாவிஸ் களமிறங்குமா? அல்லது கியா சொனெட், கியா செல்டோஸ் கார்களுக்கு இடைப்பட்ட ரகத்தில் நிலைநிறுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கியா நிறுவனம் இதனை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. செயல்திறனை பொறுத்தவரையில், கியா க்ளாவிஸ் காரில் மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் ஆகியவை ஆகும்.

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில் க்ளாவிஸ் காரில், 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு ஏஎம்டி, 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம். கியா க்ளாவிஸ் காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படுமா? என்பது கொஞ்சம் சந்தேகம்தான். ஒருவேளை கியா சொனெட்-கியா செல்டோஸ் கார்களுக்கு இடையே நிலைநிறுத்தப்பட்டால் வேண்டுமானால், டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம்.

டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் கார்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டால், பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் மட்டும்தான் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வசதிகளை பொறுத்தவரையில், எலெக்ட்ரிக் சன்ரூஃப், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, 360 டிகிரி கேமரா மற்றும் முன் பகுதியில் வென்டிலேட்டட் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்ற அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நடப்பு 2024ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது 2025ம் ஆண்டின் தொடக்கத்திலோ கியா க்ளாவிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே அடுத்த ஓராண்டு காலத்திற்கு பிறகு, ஓரளவிற்கு நடுத்தரமான விலையில் ஒரு புதிய காரை வாங்க முடிவு செய்திருப்பவர்கள், கியா க்ளாவிஸ் காரை பரிசீலனை செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 14, 2024, 13:48 [IST]
English summary
Kia clavis testing commenced in india expected price features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+