கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று கியா (Kia). தற்போதைய நிலையில் ஒரே ஒரு எலெக்ட்ரிக் காரை மட்டுமே கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அதுவும் விலை உயர்ந்ததாக உள்ளது. கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் காரை பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையே 60.97 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 65.97 லட்ச ரூபாயாக இருக்கிறது. இத்தனைக்கும் இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மட்டுமே. ஆன்-ரோடு விலை (On-road Price) இன்னும் கூடுதலாக வரும். எனவே செல்வந்தர்களால் மட்டுமே இந்த காரை வாங்க முடியும் என்ற நிலை உள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்களும் வாங்க கூடிய விலையில் கியா நிறுவனம் ஒரு எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது.

Kia EV6

இந்த எதிர்பார்ப்பு கூடிய விரைவில் நிறைவேற வாய்ப்புகள் உள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம், கியா நிறுவனம் இவி2 என்ற பெயரில் (Kia EV2) புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இது மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

அனேகமாக இந்த எலெக்ட்ரிக் காரின் விலை 12 லட்ச ரூபாய் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் டிரைவிங் ரேஞ்ச், வசதிகள் போன்ற அம்சங்கள் எதை பற்றியும் கியா நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே கியா இவி2 எலெக்ட்ரிக் காரை பற்றிய தகவல்கள் அனைத்தும் மர்மமாகவே உள்ளன.

Kia Logo

இருப்பினும் கியா நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கியா இவி2 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று நாங்கள் கருதுகிறோம். டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற விஷயங்களை எல்லாம் நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம். மேலும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் விலை குறைவானது என்பதால், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டிசைனை பொறுத்தவரையில், பாக்ஸி வடிவமைப்பை கியா இவி2 கொண்டிருக்கலாம். எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி பகல் நேர விளக்குகள், புதிய அலாய் வீல்கள், பாடி கிளாடிங் மற்றும் ரூஃப் ரெயில்கள் போன்றவற்றை எல்லாம் நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம். இவி2 எலெக்ட்ரிக் கார் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்களை கியா நிறுவனம் வரும் காலங்களில் வெளியிடும் என கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் கார்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே எலெக்ட்ரிக் கார்களை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டால், அவற்றை வாங்குவதற்கு மக்கள் தயாராகவே உள்ளனர்.

இதன் காரணமாக கியா இவி2 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டால், விற்பனையில் சாதிக்கும் என நாங்கள் கருதுகிறோம். 2025ம் ஆண்டின் இறுதியில் இந்த கார் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள், கியா இவி6 எலெக்ட்ரிக் காருடையது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 23, 2024, 15:00 [IST]
English summary
Kia ev2 electric car india launch details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+