69 லட்ச ரூபாய் இவி காரை வெறும் ரூ1.29 லட்சத்திற்கு வாங்கலாம்! எப்படி தெரியுமா?
கியா நிறுவனம் தனது வாகனங்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது மட்டுமல்லாமல் கார் லீஸ் முறையிலும் கார்களை வழங்கி வருகின்றன. இதன்படி ஒருவர் காரை முழு தொகை கொடுத்து வாங்காமல் மாத தவணை முறையில் கட்டணம் செலுத்தி காரை சொந்தமாக்கிக் கொள்ள முடியும். இப்படியாக நிறுவனத்தின் ரூ69.39 லட்சம் மதிப்பிலான கார் ஒன்றும் லீஸ் முறையில் ரூ1.29 லட்சத்திற்கு வழங்கப்படுகிறது. இதனால் இந்த காஸ்ட்லியான காரை குறைவான விலையில் மக்களால் பயன்படுத்த முடியும் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தற்போது வாகனங்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யாமல் லீஸ் முறையில் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கும் அதிகமாகும் கிடைக்கிறது. அதே நேரம் வாகன தயாரிப்பு நிறுவனத்திற்கும் லாபம் கிடைக்கிறது, வாகனங்களை வாடிக்கையாளர்கள் அதிகமாக உபயோகப்படுத்த துவங்கி விடுகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கியா நிறுவனமும் எனது வாகனங்களுக்கான லீஸ் திட்டத்தை அறிமுகம் செய்தது. ஏற்கனவே கியா சோனட் கார் மாதம் ரூபாய் 17,999 என்ற விலையிலும், கியா செல்டோஸ் கார் மாதம் ரூபாய் 23,999 என்ற விலையிலும், கியா கேரன்ஸ் கார் மாதம் ரூபாய் 24,999 என்ற விலையிலும் 24 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை லீஸ்க்கு விடப்படுகின்றன.
இந்நிலையில் இந்த கார்களுக்கு அந்நிறுவனம் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு கிடைத்ததால் தற்போது கியா நிறுவனம் தனது காஸ்ட்லியான எலெக்ட்ரிக் காரான இவி 6 என்ற காரையும் இந்தத் திட்டத்தின் கீழ் லீஸ்க்கு பொதுமக்கள் வாங்கும் வகையில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இந்த காரை மாதம் ரூபாய் 1.29 லட்சம் செலுத்தி மக்கள் சொந்தமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த ரூபாய் மதிப்பில் இந்த வாகனத்திற்கான இன்சூரன்ஸ், பராமரிப்பு, பிக் அப் மற்றும் டிராப் 24 மணி நேர ரோடு அசிஸ்டென்ஸ் மற்றும் இலவச சர்வீஸ் உள்ளிட்டவை அடங்கும் என தெரிவித்துள்ளது. இந்த காரை லீஸ் முறையில் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூபாய் 1.29 லட்சத்தை கொடுத்தால் போதும் மற்ற எந்த செலவையும் அவர்கள் செய்ய வேண்டியதில்லை. அந்த செலவிலேயே கார்களின் முழு பராமரிப்பும் அடங்கிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான லீஸ் முறையிலும் எல்லாராலும் வாங்கி விட முடியாது. குறிப்பாக நான்கு செக்மெண்டில் உள்ள மக்கள் மட்டுமே இதை வாங்குவதற்கு அந்நிறுவனம் புதிய நிபந்தனையும் விதித்துள்ளது. அதன்படி இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த டாக்டர்கள், ஐசிஏஐ பதிவு பெற்ற சார்ட்டெட் அக்கவுண்டன்ட் இந்த காரை வாங்கலாம். சுயதொழில் செய்பவர்கள் இந்த காரை வாங்கலாம், குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த காரை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியா இவி 6 காரை பொறுத்தவரை 0 முதல் 80 சதவீத பேட்டரியை வெறும் 18 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் வகையில் 350 கிலோ வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இந்த காரில் 77.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த கார் 225.86 முதல் 320.55 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுபோக இந்த காரை சார்ஜ் செய்வதற்காக டிசி சார்ஜர் வழங்கப்படுகிறது. இது 10- 80% பேட்டரியை 73 நிமிடத்தில் சார்ஜ் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் அதிகபட்சமாக 192கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் போட்டால் இந்த காரில் 708 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இது மட்டுமல்லாமல் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.2நொடியில் பிக்கப் செய்துவிடும்.
இந்த காரின் பாதுகாப்பு அம்சத்தை பொருத்தவரை இந்திய மார்க்கெட்டில் உள்ள வேகமான கார் என்பதால் ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக இதில் அடாஸ் பாதுகாப்பு தொழில்நுட்பம், 8 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய அம்சங்கள் உள்ளன. இந்த கார் குளோபல் என்கேப் சோதனையில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது.
கியா இவி6 காரைப் பொறுத்தவரை நீங்கள் முழுமையாக சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்றால் ரூபாய் 64.11 லட்சம் முதல் ரூபாய் 69.35 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்றால் நீங்கள் இந்த காரை இதற்கு முன்னர் சொன்னதுபடி லீஸ் முறையில் எடுத்துக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெருநகரங்களில் வாழும் மக்கள் பலர் சொந்தமாக கார் வாங்குவதைவிட இப்படியான லீஸ் முறையில் கார் வாங்குவதை லாபமாக கருதுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நிச்சயம் இந்த லீஸ் முறை வசதியாக இருக்கும். அதில் காஸ்ட்லியான கார்களையும் அறிமுகப்படுத்தி உள்ளது நிச்சயம் பலரது கவனத்தை ஈர்க்கும்.


Click it and Unblock the Notifications









