எல்லாமே நல்லா இருந்தும் வெறும் 22 பேர் மட்டும் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! ஏன் தெரியுமா?
கியா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரான இவி 6 எலெக்ட்ரிக் கார் கடந்த ஜூலை மாதம் எவ்வளவு எண்ணிக்கையில் விற்பனையானது என்ற விவரங்களை தான் இங்கே காணப் போகிறோம். பொதுவாக அதிக விலை கொண்ட கார்கள் குறைவான எண்ணிக்கையில் தான் விற்பனையாகும். இந்த காரின் விற்பனை மிகக் குறைவாக இருக்கிறது. இந்த கார் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் இதன் விற்பனை மிக குறைவாக இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ள நிலையில் வாகன விற்பனை நிறுவனங்கள் எல்லாம் கடந்த ஜூலை மாதம் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்ற ரிப்போர்ட்டை வெளியிட்டு வருகின்றன. அதன்படி கியா நிறுவனமும் தற்போது தனது தனது ஜூலை மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில், இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் சிறிய அளவு வீழ்ச்சியை விற்பனையில் சந்தித்துள்ளது. இருந்தாலும் கியா சோனட், கேரன்ஸ், செல்டோஸ் ஆகிய கார்கள் சிறப்பாக விற்பனையாகியுள்ளன.

கியா நிறுவனம் விற்பனை செய்து வரும் ஒரே எலெக்ட்ரிக் கார் இவி6 என்ற எலெக்ட்ரிக் கார் தான். இந்த காருக்கு வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் இல்லை. இந்த காரின் விற்பனை மிக மோசமான நிலையை எட்டி உள்ளது. இந்த காருக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு இல்லை என்பது தெரிகிறது. கடந்த ஜூலை மாதம் வெறும் 22 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.
இதுவே கடந்த ஜூன் மாதம் மொத்தம் 24 கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், தற்போது அதைவிட 2 கார்கள் குறைவாக விற்பனையாகி உள்ளது. ஆனால் இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை ஐந்து மாதங்களில் மொத்தமே 22 கார்கள் தான் விற்பனையாக இருந்தது. தற்போது ஒரே மாதத்தில் 22 கார்கள் விற்பனையாகி உள்ளது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

2024ம் ஆண்டு துவங்கிய போது பெரிய அளவுக்கு வரவேற்பு இல்லை, ஜனவரி மாதம் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தலா ஒரு கார்கள் விற்பனையாகி இருந்தது. ஏப்ரல் மாதம் 5 கார்கள் விற்பனையாகின. இந்நிலையில் கடந்த மே மாதம் தான் ஓரளவு விற்பனை அதிகரித்து 15 கார்கள் வரை விற்பனையானது.
இதையடுத்து ஜூன் மாதம் அதைவிட விற்பனை அதிகரித்து 24 கார்கள் விற்பனையாகிய நிலையில் ஜூலை மாதம் வெறும் 22 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் இந்த கார் விற்பனையாவதற்கு முக்கியமான காரணம் இந்த காரின் விலை தான். இது ஒரு பிரீமியம் செக்மெண்ட் எலெக்ட்ரிக் கார் என்பதால் இந்த கார் ரூபாய் 61 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது.
இந்த இவி 6 காரைப் பொறுத்தவரை 77.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் ஒரு முறை சார்ஜ் போட்டால் 528 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த கார் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் ஏஆர்ஏஐ சோதனை செய்யப்படும் போது 708 கிலோமீட்டர் வரை இந்த கார் பயணம் செய்து பெரிய சாதனையை படித்துள்ளது.
இந்த கார் ரியர் வீல் டிரைவ் உடன் சிங்கிள் மோட்டார் செட்டப் பொருத்தப்பட்ட காராக இருக்கிறது. இது 229 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆல்வீல் டிரைவ் வேரியண்ட் தனியாக விற்பனையாகிறது. இதில் இரண்டு மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 325 பிஎச்பி பவரும் 65 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் பேட்டரியை சார்ஜ் செய்ய 10 முதல் 80 சதவீத சார்ஜிற்க்கு வெறும் 73 நிமிடம் தான் ஆகிறது. இதற்கு டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பொருத்தப்பட வேண்டும். இது போக இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கண்ட்ரோல், டச் கண்ட்ரோல் ஏசி, ஆட்டோமேட்டிக் கியர் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனம் சரியான வாடிக்கையாளர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு இந்த கார் குறித்த விபரங்களை சொல்லி மார்க்கெட்டிங் யுத்தியை கையாண்டதன் மூலம் சமீப காலமாக இந்த காரின் விற்பனை ஓரளவு அதிகரித்துள்ளது. ஆனால் இந்த காரின் விலை குறையாத வரை இந்த காரின் விற்பனை பெரிய அளவுக்கு இருக்காது என்றே எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








