யாருமே வாங்கமாட்டாங்கனு நினைச்ச காரை 24 பேர் வாங்கிட்டாங்க! எங்கடா வச்சிருக்கீங்க இவ்வளவு காசை?
கியா நிறுவனம் கடந்த ஜூன் மாத விற்பனை குறித்த விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ஆச்சரியமான ஒரு தகவல் ஒன்று இடம் பெற்றுள்ளது. கியா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரான இவி6 எலெக்ட்ரிக் கார் கடந்த ஜூன் மாதம் கடந்த 6 மாதத்தில் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளது. இப்படியாக இந்நிறுவனத்தின் என்னென்ன கார்கள் எவ்வளவு விற்பனையாகியுள்ளது என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.
கியா நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைத்து வாகனங்களை தயார் செய்து வெளியிட்டது முதல் மக்கள் மத்தியில் பிரபலமான நிறுவனமாக மாறி வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பலரின் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை விரும்பி வாங்கி வருகிறார்கள். இதனால் இந்நிறுவனம் தரமான தயாரிப்புகளை தயாரித்து வெளியிட்டு வருகிறது.

இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்து உள்ளது என்ற விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது செல்டோஸ், சோனட், கேரன்ஸ் மற்றும் இவி6 ஆகிய கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.இதில் செல்டோஸ், சோனட் ஆகிய கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன. இவி6 காரை பொருத்தவரை எலெக்ட்ரிக் காராக விற்பனையாகி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் கியா நிறுவனத்தின் செல்டோஸ் கார் 6,306 கார்களும், சோனட் காரை பொருத்தவரை 9,816 கார்களும் கேரன்ஸ் கார் 5,154 கார்களும் விற்பனையாகி உள்ளன. இவி 6 காரை பொருத்தவரை 24 கார்கள் விற்பனையாகி உள்ளன. வெறும் 24 கார்கள் தான் விற்பனையாகியுள்ளது இது விற்பனை அதிகமான விற்பனை என்று கேட்டால் அதிகம் தான். கடந்த ஜூன் மாதம் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளது.

கியா நிறுவனத்தின் இவி6 காரை கடந்த ஜனவரி மாதம் யாருமே வாங்கவில்லை. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தலா ஒரு கார்களும், ஏப்ரல் மாதம் ஐந்து கார்களும், மே மாதம் 15 கார்களும் விற்பனையாகி இருந்தன. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் தான் இருப்பதிலேயே அதிகமாக 24 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆறு மாதத்தில் மொத்தமாக 46 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது.
கியா இவி6 காரை பொருத்தவரை ரூ61 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் உள்ள பேட்டரியை பொருத்தவரை 77.4 கிலோவாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது இதன் மூலம் இந்த முறை சார்ஜ் போட்டால் 528 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு ஏஆர்ஏஐ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இது 708 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் வழங்கி உள்ளது.

கியா நிறுவனத்தின் இந்த இவி6 கார் ரியர் வீல் டிரைவ் கொண்ட அம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 229 பிஎச்பி பவரும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோக ஆல்வீல் டிரைவ் வேரியண்டில் இரண்டு மோட்டார் செட்டப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வேரியன்ட் கார் 325 பிஎச்பி பவரையும் 65 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் உள்ள பேட்டரி பவரை பொருத்தவரை 10-80 சதவீத சார்ஜை வெறும் 73 நிமிடத்தில் ஏற்றிவிடும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 50 கிலோவாட் டிசி பாஸ்ட் சார்ஜரும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் எல்இடி டிஆர்எல் ஸ்டிரிப்புகள், எல்இடி ஹெட்லைட்டுகள், முன்பக்க கருப்புநிற கிரில், பெரிய ஏர்டேம், பில்லர் பகுதி மற்றும் ஓஆர்விஎம் பகுதி எல்லாம் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.
கியா நிறுவனத்தின் இவி6 கார் ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா காருக்கும் எம்ஜி நிறுவனத்தின் இசட்எஸ் என்ற எலெக்ட்ரிக் காருக்கும் போட்டியாக விற்பனையாகி வருகிறது. ஹூண்டாய் நிறுவனம் தனது கோனா காரை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. இதன் அப்டேட் வெர்ஷன் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்த கார்களைவிட தற்போது மக்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் கியா இவி6 காருக்கு தான் அதிக மவுசு இருப்பது தெரியாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனத்தின் இவி6 காரின் விலை அதிகமாக இருப்பதால் இந்த காரை வாங்கும் அளவுக்கு திறன் கொண்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கிறது இதனால் இந்த காரின் விற்பனை குறைவாக தான் இருக்கும் ஆனால் கடந்த ஜூன் மாதம் மிக அதிக எண்ணிக்கையில் இந்த கார் விற்பனையாகியுள்ளது நிச்சயம் ஆச்சரியப்பட வேண்டிய தகவலாக தான் இருக்கிறது.


Click it and Unblock the Notifications









