மாசம் ஃபுல்லா போராடி ஒரே ஒரு காரை மட்டுமே வித்த கியா! இந்த காரை வாங்க ஆளே இல்லை ஏன் தெரியுமா?
கியா நிறுவனம் கடந்த மாதம் சிறப்பான விற்பனையை பெற்றிருந்தாலும், குறிப்பிட்ட ஒரு காரை விற்பனை செய்ய நிரூபணம் திண்டாடி வருகிறது. கடந்த ஒரு மாதம் முழுவதும் அந்நிறுவனத்தால் வெறும் ஒரு காரை மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது. இந்த காரின் விற்பனை மெல்ல மெல்ல சரிந்து வருகிறது. அப்படி என்ன கார் இது ஏன் இதன் விற்பனை சரிந்துள்ளது என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.
கியா நிறுவனம் இந்தியாவிற்குள் காலடி தடத்தை எடுத்து வைத்ததும் உள்ள முதல் களமிறங்கிய கார்கள் எல்லாம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகின்றன. கியா நிறுவனத்தின் கார்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் தனித்துவமான டிசைன் மக்களை அதிகம் ஈர்த்துள்ளது. இதனால் கியா நிறுவனத்தின் எல்லா கார்களும் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன.

ஆனால் கியா நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பிட்ட ஒரு காரை விற்பனை செய்ய நிறுவனம் திண்டாடி வருகிறது. கடந்த மார்ச் மாதம் முழுவதும் போராடிய நிறுவனம் வெறும் ஒரு காரை மட்டுமே விற்பனை செய்துள்ளது. பலரும் இந்த காரை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ரோட்டில் இந்த காரை பார்ப்பது அபூர்வமாக இருக்கும். ஆம் கியா நிறுவனத்தின் இவி6 கார் தான் இது.
கடந்த 2024-ம் ஆண்டு முதல் கியா நிறுவனம் இந்த காரை விற்பனை செய்ய பின்னாடி கொண்டு தான் இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் இந்நிறுவனத்தில் ஒரு காரை கூட விற்பனை செய்ய முடியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் வெறும் ஒரு காரை மட்டும் விற்பனை செய்துள்ளது. கடந்த மார்ச் மாதமும் போராடி வெறும் ஒரு காரை மட்டுமே இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
கியா நிறுவனத்தின் விற்பனை சரிவிற்கு என்ன காரணம் என இதுவரை தெரியவில்லை. இந்த கார் அறிமுகமான அக்டோபர் மாதம் 2023-ம் ஆண்டு 141 கார்கள் விற்பனையாக இருந்தன. நவம்பர் மாதம் 25 கார்கள் விற்பனையாக இருந்தது. டிசம்பர் மாதம் 6 கார்கள் விற்பனையாக இருந்தது. ஆனால் இந்த 2024-ம் ஆண்டு துவங்குவது முதல் இந்த காரின் விற்பனை பெரிய அளவில் இல்லை.
கியா இவி6 கார் இந்தியாவில் பிரபலமான எலெக்ட்ரிக் காராக இருக்கிறது. முதல் முதலில் இந்த கார் இந்தியாவிற்கு வரும்போது வெறும் 100கார்களை மட்டுமே விற்பனை செய்ய நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால் தற்போது 500கார்களுக்கும் அதிகமாக விற்பனை ஆகிவிட்டன. இந்த காரின் விலை அதிகம் என்பதால் இதன் விற்பனையை பெரிய அளவில் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டு, இந்தக் குறைந்த டார்கெட் வைக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த டார்கெட்டையும் தாண்டி விற்பனை ஆகிவிட்டது.
இந்த இவி6 காரை பொருத்தவரை எல்இடி டிஆர்எல் ஸ்ட்ரிப், எல்இடி ஹெட்லைட், சிங்கிள் ஸ்லாட் கிளாஸ் பிளாக் கிரில், வைட் ஏர் டேம், டூயல் ஸ்டோன் அலாய் வீல், கருப்பு நிறத்தில் பில்லர்கள் மற்றும் ஓஆர்விஎம் டூயல் டோன் பம்பர்கள் உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கண்ட்ரோல், ஏசியை கண்ட்ரோல் செய்ய டச் பேனல் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.
இந்த காரில் கியருக்கு வட்டமான நாப் வழங்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் கண்ட்ரோல் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள பேட்டரி பேக்கை பொருத்தவரை 77.4 கிலோவாட்ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த காரை ஒரு தடவை சார்ஜ் செய்தால் 528கிலோமீட்டர் வரை ரேன்ஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் இந்தியாவில் இறக்குமதி செய்து சோதனை செய்யப்படும் போது 708 கிலோமீட்டர் வரை ரேன்சர் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் மோட்டாரை பொறுத்த வரை ரியல் வீல் டிரைவ் மோட்டார் செட்டப் பொருத்தப்பட்டுள்ளது. இது 229 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆல்வில் டிரைவ் வேரியன்டை பொறுத்தவரை டூயல் மோட்டார் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இது 325 பிஎச்பி பவரையும் 65 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காரை சார்ஜ் செய்ய 10 முதல் 80 சதவீத பேட்டரிக்கு 73 நிமிடங்கள் ஆகிறது. இதற்காக 50 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இந்த காரின் விற்பனை சரிவிற்கு இதன் விலை தான் காரணம். இந்த கார் இந்தியாவில் ரூபாய் 60.5 லட்சம் முதல் ரூபாய் 65.95 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விற்பனை இந்தியாவில் மிக குறைவாக இருந்தாலும் அந்நிறுவனம் எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையில் இந்த கார் விற்பனையாகி விட்டது. அதனால் எத்தனை கார் விற்பனையானாலும் அது கியா நிறுவனத்திற்கு போனஸ் விற்பனை தான். அந்நிறுவனம் 100 கார்களை மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில், தற்போது 500க்கும் அதிகமான கார்கள் விற்பனையாகியுள்ளது அந்நிறுவனத்திற்கு பெரும் மதிப்பை ஏற்படுத்தியுள்ளது


Click it and Unblock the Notifications








