கியா நிறுவனத்திற்கு இப்படி ஒரு நிலைமையா? வெறும் 15 காரை மட்டுமே வித்திருக்காங்க!

வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களையும் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்தி வருகின்றன. அதன்படி கியா நிறுவனமும் தனது எலெக்ட்ரிக் வாகனத்தை தயாரித்து இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. ஆனால் தற்போது இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக இல்லாமல் இது முற்றிலும் தனித்துவமான காரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இது குறித்த விற்பனை விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.

கடந்த மே மாத விற்பனை விபரங்களை கியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு முக்கியமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மிக முக்கியமாக கியா நிறுவனம் சமீபத்தில் தான் 2.5 லட்சமாவது வாகனத்தை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து புதிய மைல் கல்லை எட்டி பிடித்தது. இந்நிறுவனம் கடந்த மே மாதம் மட்டும் மொத்தம் 19,500 வாகனங்களை இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்துள்ளது.

kia ev6 sales

இதில் கியா நிறுவனத்தின் சோனட் கார் மட்டும் 7,433 கார்களும் செல்டோஸ் கார் 6,736 கார்களும் விற்பனையாகியுள்ளன. கியா கேரன்ஸ் காரை பொறுத்தவரை 5,316 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த போட்டியில் கியா நிறுவனத்தின் எெலக்ட்ரிக் கார் மிக குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனையாகி உள்ளது. கடந்த மே மாதம் முழுவதும் இந்த கார் வெறும் 15 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

இது மிக மோசமான விற்பனையாச்சே என்று நீங்கள் நினைத்தால் இது உண்மை அல்ல. கடந்த 6 மாதங்களில் அதிகபட்ச விற்பனையே கடந்த மே மாதம் தான் நடந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 கார்கள் விற்பனையாகியுள்ளன. 2024 ஜனவரி மாதத்தில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை. பிப்ரவரி, மார்ச் மாதத்தில் தலா ஒரு கார்களும், கடந்த ஏப்ரல் மாதம் 5 கார்களும் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கியா நிறுவனத்தின் பொருத்தவரை 77.4 கிலோவாட்ஹவர் பேட்டரி பேக் கொண்ட காராக இருக்கிறது. இந்த பேட்டரியை ஒரு தடவை சார்ஜ் போட்டால் இந்த கார் 528கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல்வீல் டிரைவ் ஆகிய இரண்டு ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு வருகிறது. சிங்கிள் மோட்டாரில் 229 பிஎஸ் பவரையும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆல்வீல் டிரைவ் ஆப்ஷனில் வரும்போது டூயல் மோட்டார் செட்டப் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த செட்டப்பில் இந்த கார் 325 பிஎஸ் பவரையும் 65 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பு அம்சமே இந்த காரில் உள்ள அம்சங்கள் தான்.

இந்த காலில் 14 ஸ்பீக்கர் கொண்ட மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக இரண்டு கர்வ்டு 12.3 இன்ச் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் ஆகும். மற்றொன்று டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்துக்காகவும் பயன்படுகிறது.இது பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

மேலும் இந்த காரில் வயர்லெஸ் போன் சார்ஜிங் வெண்டிலேட்டட் பவர் முன்பக்க சீட்டுகள், டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் சன்ரூஃப் ஆகிய ஆப்ஷன்களும் உள்ளன. இதுபோக பாதுகாப்பு அம்சத்திற்காக 8 ஏர் பேக்குகள், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்பாட் மானிட்டரிங் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் அடாஸ் தொழில்நுட்பம் இந்த காரில் புகுத்தப்பட்டுள்ளது.

இந்த காரின் விலை பொருத்தவரை கியா நிறுவனம் ரூபாய் 60.95 லட்சம் முதல் ரூபாய் 65 95 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த காரின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் இந்த காரில் உள்ள அம்சங்களும் இது வெளிநாட்டில் இருந்து தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் கார் என்பதாலும் இதன் விலை அதிகமாக இருக்கிறது.

கியா நிறுவனத்தின் இதை இவி6 கார் இந்திய மார்க்கெட்டுக்கு வரும்போது பெரும் பணக்காரர்கள் பலர் இந்த காரை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கார் அறிமுகமானது முதல் பெரிய அளவில் விற்பனை இல்லை பல மாதங்கள் ஒரு கார் அதிகமாக விற்பனையாகாத சூழ்நிலை இருந்தது. ஆனால் கடந்த மே மாதம் அதிகமாக விற்பனையாகி உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரன இவி6 காரின் விற்பனை கடந்த மே மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து இருந்தாலும், இதன் விலை அதிகமாக இருப்பதால் தொடர்ந்து இதன் விற்பனை அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் பட்சத்தில் இதன் விற்பனை சிறப்பாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, June 14, 2024, 10:52 [IST]
English summary
Kia ev6 sales may 2024 15 unit sold full details
மேலும்... #kia #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+