கோடி ரூபாயில் கூட கியா காரா... 500கிமீ ரேஞ்ச் உடன் புதிய கியா இவி9!! விலை எவ்வளவு தெரியுமா?

கியா (Kia) நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதில் கடந்த சில ஆண்டுகளாக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று (அக்டோபர் 3) முற்றிலும் புதிய எலக்ட்ரிக் கார் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவி9 (EV9) என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் கார் கியா நிறுவனத்தின் லக்சரியான எலக்ட்ரிக் காராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், கியா இவி9 எலக்ட்ரிக் காரின் விலை ரூ.1.30 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எலக்ட்ரிக் கார்களில் ரேஞ்ச் தான் மிக முக்கியமானது. ஒருமுறை சார்ஜ் நிரப்பினால் கார் எவ்வளவு தொலைவிற்கு இயங்கும் என்பதை பொறுத்துதான் எலக்ட்ரிக் கார்களை மக்கள் வாங்குகின்றனர். அந்த வகையில், சுமார் 500கிமீ-க்கும் அதிகமான ரேஞ்ச் உடன் கியாவின் புதிய இவி9 எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

kia ev9 launched in india

உலகளவில் இது கியாவின் விலையுயர்ந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும். ஏனெனில், அந்த அளவிற்கு 5 மீட்டர்களுக்கும் அதிகமான நீளத்துடன் பிரம்மாண்டமான எலக்ட்ரிக் காராக இவி9 உருவாக்கப்படுகிறது. முழுவதுமாக வெளிநாட்டில் இருந்து சிபியூ முறையில் இந்தியாவில் இந்த எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட உள்ளது. அதாவது, இந்த கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட போவதில்லை; முழுவதுமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது.

இதன் காரணமாகவே, புதிய இவி9 எலக்ட்ரிக் காரின் விலை ரூ.1.30 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஜிடி-லைன் என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் கியா இவி9 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், இவி9 கார் எந்த அளவிற்கு பிரம்மாண்டமாக உள்ளதோ அதற்கு இணையாக பெரிய அளவிலான ஜன்னல் கண்ணாடிகள் கொண்டுள்ளது.

காரின் மேற்கூரையை தாங்கி நிற்கும் பில்லர்களும் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளதால், ஜன்னால் கண்ணாடி பகுதி முழுவதுமாக கருப்பு நிறத்தில் உள்ளது; இதனால் மேற்கூரை அந்தரத்தில் பறப்பது போல் காட்சியளிக்கிறது. தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் அதன் கார்களின் முன்பக்கத்தை 'புலி' போன்றதான தோற்றத்தில் வழங்குகிறது. அதனை புதிய இவி9 எலக்ட்ரிக் காரிலும் மாடர்ன் தரத்தில் காண முடிகிறது.

இதற்கு ஏற்றவாறு, ஹெட்லைட்களுக்கு அருகே ஒளிரக்கூடிய எல்இடி டிஆர்எல்-கள் கொடுக்கப்பட்டுள்ளன. எலக்ட்ரிக் கார் என்பதால் கிரில் பகுதி எதுவும் இல்லை. 20-இன்ச் 'கிரிஸ்டல்-கட்' அலாய் சக்கரங்கள் உடன் காரின் பக்கவாட்டு பகுதி அழகாக இருக்கிறது. காரின் பின்பக்கத்தில் பெரிய டெயில்கேட் எந்தவொரு டிசைனும் இன்றி சிம்பிளாக உள்ளது.

kia ev9 launched in india

முன்பக்கத்தை போலவே பின்பக்கத்திலும் மெல்லிய வடிவத்தில் எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்பாய்லர் காரின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்னோ வெள்ளை பேர்ல், ஓசன் நீளம், பெப்பிள் கிரே, பந்தேரா மெட்டல், அரோரா பிளாக் பேர்ல் என மொத்தம் 5 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்த எலக்ட்ரிக் கார் கிடைக்கும். காருக்கு உள்ளே டேஸ்போர்டு நன்கு பெரியதாக வழங்கப்பட்டுள்ளது.

டேஸ்போர்டில் 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 5-இன்ச் டிஸ்பிளே உடன் ஓட்டுனருக்கான தகவல்களை வழங்கக்கூடிய திரை உள்ளது. காரின் கேபினை வெள்ளை & கருப்பு அல்லது பிரவுன் & கருப்பு என 2 ஆப்ஷன்களில் ஒன்றில் பெறலாம். இந்த எலக்ட்ரிக் காரினுள் 3 வரிசைகளில் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் 2 இருக்கைகள் என மொத்தம் 6 பேர் பயணிக்கக்கூடிய காராக இவி9 உருவாக்கப்பட்டுள்ளது.

கியா இவி9 எலக்ட்ரிக் காரில் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை இயங்க வைக்க அளவில் பெரியதாக 99.8kWh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பி அதிகப்பட்சமாக 561கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என ARAI சான்றளித்துள்ளது. எலக்ட்ரிக் மோட்டார்கள் அதிகப்பட்சமாக 383 பிஎஸ் மற்றும் 700 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா இவி9 எலக்ட்ரிக் கார் பல வெளிநாடுகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ளது. இத்தகைய விலையுயர்ந்த எலக்ட்ரிக் காருக்கு இந்தியாவிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதை ஆராய்ந்து பார்த்த பின்னரே இவி9 காரை கியா அறிமுகம் செய்துள்ளது. என்றாலும், விலை குறைவான கியா எலக்ட்ரிக் கார்கள் இன்னும் அதிக மக்களை சென்றடையும்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 3, 2024, 14:39 [IST]
English summary
Kia ev9 electric car launched in india price features range all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+