30இன்ச் டிவி போன்ற திரை கொண்ட கார் இந்தியா வர போகுதா! எப்போ? என்ன விலையில் இந்த கார் வர போகுது? இதோ விபரம்!

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாகக் கூறப்படும் கார் மாடல்களில் கியா இவி9 (Kia EV9)-ம் ஒன்றாகும். இந்த காரின் சோதனையோட்டத்தை ஏற்கனவே கியா நிறுவனம் நாட்டில் தொடங்கிவிட்டது. மேலும், தொடர்ந்து இந்த காரின் சோதனையோட்டம் இந்தியாவில் நடைபெற்ற வண்ணமே உள்ளது. எனவே சீக்கிரமே இவி9 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த கார் பற்றிய பல்வேறு கேள்விகளும், சந்தேகமும் இந்திய கார் விரும்பிகள் மத்தியில் எழும்பியிருக்கின்றது. இதற்கான விடைகளையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

கியா இவி9 ஓர் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்பாக இந்த கார் மாடல் காட்சியளிக்கின்றது. கூடுதல் சிறப்பாக, கியா இவி9 உலக அளவில் பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கின்றது. இத்தகைய கார் மாடலையே இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கும் பணிகளில் மிக தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது கியா நிறுவனம்.

Kia ev9

கியா இவி9 காரை எப்போது இந்தியாவில் எதிர்பார்க்கலாம்? கியா மோட்டார்ஸ் தற்போது காட்டி வரும் தீவிரத்தை வைத்து பார்க்கையில் இன்னும் ஒரு சில வாரங்களிலேயே இவி9-ஐ விற்பனைக்கு அறிமுகப்படுத்திவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, வருகின்ற தீபாவளி பண்டிகைத் தினத்திற்குள் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் மிகவும் உறுதியான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதுபற்றி எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் கியா தரப்பில் இருந்து வெளியாகவில்லை. இருப்பினும், இந்தியர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை கியா இவி9 எலெக்ட்ரிக் கார் ஏற்படுத்தி இருக்கின்றது.

கியா இவி9 எலெக்ட்ரிக் காரின் சிறப்பம்சங்கள்: கியா இவி9 மிகவும் விசாலமான உட்புறத்தைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களையும் மலைப் போல் கொண்டுள்ளது. குறிப்பாக டிவி போன்ற பெரிய திரை இந்த காரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இத்துடன், காற்றோட்டத்தை உறுதி செய்யக் கூடிய அதிக மிருதுவான இருக்கைகள், ஆர்ம் ரெஸ்ட், கப் ஹோல்டர்கள், பெரிய சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல்கள் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜர் போன்ற அம்சங்களும் கியா இவி9 எலெக்ட்ரிக் காரில் இடம் பெற இருக்கின்றன. மேலும், இந்த காரில் இரண்டு குடும்பம் வரை அமர்ந்து செல்வதற்கு வசதியாக இருக்கைகள் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதன் அடிப்படையில் 7 முதல் 9 இருக்கைகள் வசதி வழங்கப்படலாம என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்பார்க்கப்படும் விலை வரம்பு: இந்தியாவில் கியா இவி9 சற்று காஸ்ட்லியான காராகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஆந்திராவில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால், கியா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை சிகேடி வாயிலாகவே விற்பனைக்குக் கொண்டு வரும் என தெரிகின்றது. நிறுவனம் அதன் இவி6 கார் மாடலையையும் இதே பாணியிலேயே இந்திாயவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. கியா இவி9 சுமார் ரூ. 70 லட்சம் விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பிரீமியம் அம்சம் நிறைந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி என்பதால் இதைவிட அதிக விலைக்கு வந்தாலும் சந்தேகப்பட ஒன்றுமில்லை. மேலும், இதன் வருகை சந்தையில் உள்ள மற்ற உயர்தர எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமைய இருக்கின்றது.

ரேஞ்ஜ் மற்றும் வேரியண்ட் விபரங்கள்: கியா இவி9 எலெக்ட்ரிக் கார் ஓர் முழு சார்ஜில் 500 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் அதிக வேகத்திலும் இந்த எலெக்ட்ரிக் காரை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். வெறும் 30 நிமிடங்களுக்குள் 80 சதவீத சார்ஜை ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தின் வாயிலாக ஏற்றிக் கொள்ள முடியும் என கியா தெரிவித்து இருக்கின்றது. உலக சந்தையில் இந்த எலெக்ட்ரிக் கார் ஐந்து விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. பேட்டரி பேக் மற்றும் மின்சார மோட்டார் விஷயங்களில் பல விதமான தேர்வுகள் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா இவி9 இந்தியாவின் மின்சார வாகன சந்தையில் விற்பனைக்கு வரும் எனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை அது இந்த பிரிவில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆடம்பரம், தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் என அனைத்திலும் இந்த கார் மிக சிறந்ததாக உள்ளது. அத்துடன், பல்வேறு விருதுகளை வென்ற காராகவும் இவி9 இருக்கின்றது. எனவே, பிரீமியம் மின்சார எஸ்யூவி கார் பிரிவில் வலுவான போட்டியாளராக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 1, 2024, 20:45 [IST]
English summary
Kia ev9 is expected to go on sale in india soon here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+