ரெண்டு குடும்பம் தாராளமா போகலாம்! இந்தியாவில் பெரிய உருவம் கொண்ட காரின் சோதனையோட்டத்தை தொடங்கிய கொரிய பிராண்ட்
இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு வராத ஓர் கார் மாடல் ஆந்திரா சாலையில் வலம் வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. பொதுவாக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் வாகனங்களை, உற்பத்தி நிறுவனங்கள் மறைக்கப்பட்டநிலையிலேயே சோதனையோட்டத்திற்கு உட்படுத்தும். அதன் பின்னரே அந்த வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்படும்.
ஆனால், இந்த மாதிரியான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் தென்கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia), அதன் புதுமுக காரை நாட்டில் வைத்து சோதனைக்கு உட்படுத்தத் தொடங்கி இருக்கின்றது. தன்னுடைய இவி9 (EV9) எனும் கார் மாடலையே அது நாட்டில் வைத்து சோதனையோட்டம் செய்ய தொடங்க இருக்கின்றது, கியா.

இந்த காரை கியா நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சியான ஆட்டோ எக்ஸ்போ தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வைத்தே இவி9 காரை கியா இந்தியாவிற்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தியது.
இதனால்தான் தற்போது எந்தவொரு மறைப்புகளும் இன்றி அந்த காரை சோதனையோட்டம் செய்துக் கொண்டிருக்கின்றது, கியா. கியா இவி9 ஓர் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த காரில் 7 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். இத்தனை பேர் பயணித்தாலும் மிக மிக தாராளமான இட வசதியுடன் அவர்களால் பயணித்துக் கொள்ள முடியும்.

அத்தகைய தாராளமான இட வசதிக் கொண்டதே இவி9 என கியா கூறுகின்றது. இதுதவிர, அதிக லக்கேஜ்களையும் இந்த காரில் ஏற்றிச் செல்ல முடியும் என கியா தெரிவித்து இருக்கின்றது. இதன் பூட் பகுதியில் 312 லிட்டர் முதல் 2,993 லிட்டர் வரையிலான லக்கேஜ்களை வைத்துக் கொள்ள முடியுமாம்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளை மடித்துக் கொள்வதன் வாயிலாகவே இத்தகைய மிகப் பெரிய பூட் ஸ்பேஸ் வசதியை இவி9 பயன்பாட்டாளர்களால் அனுபவித்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால்தான் இந்த காரில் ரெண்டு குடும்பம்கூட தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது.

இத்தகைய சிறப்பு அம்சங்களைத் தாங்கிய காரே தற்போது தீவிர சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. ஆகையால், இந்தியாவில் விரைவில் இந்த விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இவி9 அதிகாரப்பூர்வ அறிமுகத்தைப் பெற்றுவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி கியா நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் கார் பிரிவில் இவி6 எனும் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இது மிகவும் காஸ்ட்லியான எலெக்ட்ரிக் காராக காட்சியளிக்கின்றது. மேலும், இதனை முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராகவே இறக்குமதி செய்து விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது, கியா. ஆனால், இவி9 இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், பிராண்டின் விலை குறைவான இ-காராக இவி9-இன் வருகை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இதன் உற்பத்தி பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் நிறுவனத்திடம் இருந்து வெளியாகவில்லை. ஆகையால், சிகேடி வாயிலாகவும் இந்த கார் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் பிரீமியம் மற்றும் சிறப்பம்சங்கள் என அனைத்திலும் வியக்க வைக்கக் கூடிய ஓர் தயாரிப்பாக இருக்க போகின்றது.
டிவி போன்ற திரைகள், பன்முக ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், லெவல் 2 அடாஸ் அம்சம், பவர் வசதிக் கொண்ட 2வது வரிசை இருக்கைகள் மற்றும் பவர் டெயில்கேட் போன்ற அம்சங்கள் எல்லாம் இவி9 காரில் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இதுதவிர, இதுபோன்று இன்னும் பல ஏராளமான அம்சங்களைத் தாங்கியதாகவும் இந்த கார் மாடல் இருக்கும் என கூறப்படுகின்றது. அந்தவகையில், அதிக சொகுசான இருக்கைகள், பயணிகளுக்கான ஆர்ம் ரெஸ்ட், கப் ஹோல்டர்கள், பெரிய சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல்கள் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜர் போன்ற தரமான அம்சங்களும் புதிய கியா இவி9 எலெக்ட்ரிக் காரில் இடம் பெற இருக்கின்றன.
கியா இவி9 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆகிய ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகின்றது. மேலும், இது ஓர் முழு சார்ஜில் 400 கிமீ முதல் 500 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரக் கூடிய காராகவும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த கார் சிகேடி வாயிலாக அதாவது, இறக்குமதி செய்யப்பட்டு பின்னர் இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனைக்குக் கொண்டு வரப்படும் எனில் அதன் விலை சற்று அதிகமாகவே இருக்கும். 90 லட்சம் ரூபாய் வரை அதன் விலை இருக்கக் கூடும். ஆனால், இந்த காரை எப்படி கியா விற்பனைக்குக் கொண்டு வரும் என்பது அறியப்படாத தகவலாகவே இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









