இந்த கார் கையில் இருந்தால் எமனையே கூப்பிட்டு வச்சு வெறுப்பேத்தலாம்! வேற லெவல் விருதை வென்ற கியா கார்!

இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக நம்பப்படும் கார் மாடல்களில் கியா இவி9 (Kia EV9)-ம் ஒன்றாகும். இது எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். மிகுந்த கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதிக பிரீமியம் அம்சங்களை தாங்கிய வாகனமாக இதனை கியா வடிவமைத்திருக்கின்றது. உலக சந்தையில் மிகப் பெரிய வரவேற்பை இந்த கார் மாடல் பெற்று வருகின்றது. இதுமட்டுமில்லைங்க பல்வேறு உலக புகழ்பெற்ற விருதுகளையும் இந்த கார் வென்றிருக்கின்றது. இந்த நிலையிலேயே மேலும் ஒரு சிறப்பு அந்தஸ்தை இந்த கார் மாடல் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெடுஞ்சாலை பாதுகாப்புக்கான காப்பீட்டு நிறுவனம் (Insurance Institute for Highway Safety) மிக உயரிய விருதுகளில் ஒன்றான 'டாப் சேஃப்டி பிக்' (Top Safety Pick) எனும் விருதையே இந்த காருக்கு வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, பாதுகாப்பான பயணங்களுக்கு தேர்வு செய்ய உகந்த வாகனம் இது என்கிற விருதையே கியா இவி9 வென்றுள்ளது.

Kia ev9 wins top safety award

பலநிலைகளில் வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கு அடுத்தபடியாகவே இந்த விருது அக்காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் அனைத்திலும் இவி9 மிக சிறப்பாக செயல்பட்டு அதிக மதிப்பெண் புள்ளிகளை பெற்றிருக்கின்றது. இந்த நிலையிலேயே ஆய்வு புள்ளிகளின் அடிப்படையில் இந்த உயரிய விருதை நெடுஞ்சாலை பாதுகாப்புக்கான காப்பீட்டு நிறுவனம் அக்காருக்கு வழங்கி இருக்கின்றது.

காரை அதிக வேகத்தில் இயக்கி முன் பக்கத்தில் மோதுவது, பக்கவாட்டு பகுதியில் மோதுவது உள்ளிட்ட சோதனைகளே இவி9 மீது செய்யப்பட்டு இருக்கின்றன. அனைத்திலும் யாரும் எதிர்பார்த்திராத மிக சிறந்த மதிப்பெண் புள்ளிகளையே அது பெற்றிருக்கின்றது. இதுதவிர, பாதசாரிகளுக்கும் உகந்த வாகனம் இது என்பது தெரிய வந்திருக்கின்றது.

கியா நிறுவனம் கடந்த ஜனவரியில் இவி9 எலெக்ட்ரிக் காரின் குறிப்பிட்ட சில டிரிம்களில் கணிசமான மாற்றங்களைச் செய்தது. குறிப்பாக, எதிரில் வருபவர்களுக்கு சிறந்த பார்வை திறனை வழங்கும் விதமாக ஹெட்லைட்-இன் பிரகாசத்தை அது குறைத்தது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஐஐஎச்எஸ்-இன் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்தது.

இதுபோன்ற காரணங்களிலேயே அதிக புள்ளிகளை அக்கார் பெற்றது. ஆனால், இந்த விருது பிப்ரவரிக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட கியா இவி9-களுக்கு பொருந்ததாது. இதற்கு பின்னர் மாற்றங்களுடன் விற்பனைக்கு வந்த 2024 மாடலுக்கே பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. கியா இவி9 எலெக்ட்ரிக் கார் இந்த விருதை மட்டுமல்ல ஏற்கனவே கூறியதை போல இன்னும் பல விருதுகளை வென்றிருக்கின்றது.

Kia ev9

அந்தவகையில், நடப்பாண்டின் தொடக்கத்தில் ஆண்டின் மிக சிறந்த கார் விருது (World Car Of The Year), ஜெர்மனி நாட்டின் சொகுசு கார் விருது (Luxury Category in German Car of the Year 2024 Awards) உள்ளிட்ட பலதரப்பட்ட விருதுகளை இந்த கார் வென்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

கியாவின் இந்த தரமான தயாரிப்பு இப்போதைக்கு இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. விரைவில் அது விற்பனைக்கு வந்துவிடும் என நம்பப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சில மாதங்களுக்கு முன்னர் இந்த கார் இந்திய சாலையில் வலம் வரும் காட்சிகள் வெளியாகின. ஆமாங்க, நிறுவனம் இந்த காரை இந்திய சாலையில் வைத்து சோதனையோட்டம் நடத்தியது. இதை வைத்தே பலர் இந்த கார் சீக்கிரமே விற்பனைக்கு வந்துவிடும் என நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

வியக்க வைக்கும் வகையிலான சிறப்பம்சங்களைக் கொண்டதாகவும் இந்த கார் மாடல் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், டிவி போன்ற பெரிய திரைகள், பன்முக ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், லெவல் 2 அடாஸ் அம்சம், பவர் வசதிக் கொண்ட 2வது வரிசை இருக்கைகள் மற்றும் பவர் டெயில்கேட் போன்ற அம்சங்களே உலக சந்தையில் விற்பனையில் உள்ள கியா இவி9 எலெக்ட்ரிக் காரில் இடம் பெற்றிருக்கின்றன.

இதுதவிர, அதிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கக் கூடிய இருக்கைகள், ஆர்ம் ரெஸ்ட், கப் ஹோல்டர்கள், வான்வெளியை முழுமையாக காண்பிக்கும் வகையில் பெரிய சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜர் போன்ற அம்சங்களும் இந்த எலெக்ட்ரிக் காரில் இடம் பெற்றிருக்கின்றன. இதேபோல் ரேஞ்ஜ் தருவதிலும் இந்த கார் சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. ஓர் முழு சார்ஜில் இந்த கார் 400கிமீ முதல் 500கிமீ வரையில் ரேஞ்ஜ் தருமாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கியா நிறுவனம் இப்போதைய நிலவரப்படி இவி6 எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்கு இந்திய பணக்காரர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 25, 2024, 11:06 [IST]
English summary
Kia ev9 wins iihs top safety pick award for 2024 model
மேலும்... #kia motors #Kia EV9 #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+