உங்க டப்பா காருக்கும் நிறைய காசு கொடுக்க கியா ரெடியா இருக்காங்க! எவ்வளவு தேறும்னு ஆன்லைன்லயே செக் பண்ணலாம்!

கியா நிறுவனம் ஏற்கனவே பழைய கார்களை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் நிறுவனத்தின் கார்களை வாங்க விரும்பினால் அவர்களது பழைய கார்களை எக்சேஞ்ச் செய்துவிட்டு புதிய கார்களை வாங்கும் சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த சேவையை தற்போது ஆன்லைன் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய காருக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற தகவலை பெற்றுக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

வாடிக்கையாளர்கள் அந்த வாகனங்களை விற்பனை செய்துவிட்டு தங்கள் நிறுவனத்தின் வாகனத்தை வாங்க வேண்டும் என்பதற்காக எக்சேஞ்ச் வசதியை வைத்துள்ளார்கள். சில நிறுவனங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் போனஸ்களையும் வழங்கி வருகிறார்கள். இப்படியாக கியா நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வேறு நிறுவனத்தின் கார்களை பயன்படுத்தி வந்தால் அதை எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளும் ஆப்ஷனை வழங்குகிறது.

kia exchange evaluation service

இப்படியாக கியா நிறுவனம் எக்ஸ்சேஞ்ச் யுவர் கார் என்ற பெயரில் சான்றளிக்கப்பட்ட பழைய கார்களை வாங்கி அந்த விலைக்கு பதிலாக புதிய கார்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது கியா நிறுவனத்தின் புதிய கார்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய கார் எவ்வளவு விலைக்கு போகும் என்ற விபரங்களை ஆன்லைன் மூலமாக தெரிந்து கொள்வதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்காக கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அங்கு கார்களை எக்சேஞ்ச் செய்வது குறித்த தகவல்கள் உள்ள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கு நீங்கள் வைத்திருக்கும் வாகனம் எந்த நிறுவனத்தின் தயாரிப்பு, எந்த மாடல், எந்த வருடம் தயாரிக்கப்பட்டது, என்ன வேரியன்ட், எவ்வளவு தூரம் பயணம் செய்துள்ளது என்ற விவரங்களை எல்லாம் அளித்த பின்பு கியா நிறுவனத்தின் தானியங்கி தளம் இந்த காருக்கான மதிப்பு ஒன்றை கொடுக்கும்.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் கார் எவ்வளவு விலைக்கு எக்ஸ்சேஞ்ச் போகும் என்ற தகவலை வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் அவர்கள் எதிர்பார்க்கும் தொகை கிடைத்தால் நிச்சயம் அவர்கள் அருகில் உள்ள டீலர் ஷிப்புகளுக்கு சென்று குறிப்பிட்ட விவரத்தை கூறி தங்கள் காரை எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ள முடியும்.

கியா வெப்சைட்டில் வரும் பழைய காருக்கான விலை மதிப்பு என்பது ஒரு உத்தேச விலை மதிப்பு தான். சரியான விலை மதிப்பு என்பது நீங்கள் அருகில் ஷோரூம்க்கு காரை கொண்டு சென்று அங்கு வல்லுநர்கள் உங்கள் காரை முழுவதுமாக சோதனை செய்த பின்பு அதன் எக்ஸ்சேஞ்ச் விலை குறித்த விபரங்களை உங்களுக்கு வழங்குவார்கள். அதுதான் இறுதியான விலையாகும்.

ஆன்லைன் மூலம் நீங்கள் பெரும் விலைக்கும் நேரடியாக ஷோரூம் சென்று பெரும் விலைக்கும் சில விலை வித்தியாசங்கள் ஏற்படலாம். இது உங்கள் வாகனத்தில் உள்ள டேமேஜ் மற்றும் வாகனத்தின் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பொருத்ததாக இருக்கிறது. சில நேரம் ஆன்லைனில் உள்ள விலையை விட ஷோரூம்களில் அதிக விலை கொடுத்தும் வாங்க வாய்ப்பு இருக்கிறது.

கியா நிறுவனம் இந்த முன்னெடுப்பை ஏற்கனவே பழைய கார்களை விற்பனை செய்துவிட்டு புதிய காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு தெளிவை உருவாக்குவதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான அசெளகரியங்களை கொடுக்கும் என்பதால் இந்த புதிய வசதியை கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

பொதுவாக பயன்படுத்தப்பட்ட கார்கள் என்றால் அந்த கார்கள் வாங்கிய புதிதிலிருந்து முதல் சில ஆண்டுகளுக்கு மிக வேகமாக விலை குறையும். அதன் பிறகு விலை குறைவு என்பது குறைந்து விடும். அதே நேரம் எத்தனை உரிமையாளர்கள் இந்த காரை வாங்கி உள்ளார்கள் என்பதை பொறுத்தும் இதன் விலை இருக்கிறது. அதிக உரிமையாளர்கள் வாங்கினால் மிக குறைவான விலைக்கு தான் இந்த கார் வாங்கப்படும்.

இந்தியாவில் பயன்படுத்த கார்களுக்கானா மார்க்கெட் மிகப்பெரிய விரிவடைந்து வருகிறது. பல்வேறு விலைகளில் பல்வேறு செக்மென்ட் கார்கள் விற்பனையாகி வருகின்றன. சமீப காலமாக புதிய கார்களின் விலை உயர்வு மற்றும் பல்வேறு வேரியன்ட்களில் டீசல் கார்கள் நிறுத்தப்பட்டதன் காரணமாக ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களை பலர் வாங்கி வருவதால் கியா நிறுவனத்தில் நீங்கள் விற்பனை செய்யப்படும் கார்கள் இந்த மார்க்கெட்டுக்கு சென்று விடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தவிர இவ்வாறான புதிய முயற்சிகளில் இறங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் பல்வேறு வசதிகளை கொடுக்கும். முக்கியமாக தனது காரை விற்பனை செய்து விட்டு புதிய காரை வாங்கலாம் என்ற வாடிக்கையாளர்களுக்கு ஒரு நம்பிக்கையும் ஊக்கத்தையும் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, July 12, 2024, 13:01 [IST]
English summary
Kia exchange evaluation service online car exchange
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+