இந்தியாவுல இந்த வசதி கொண்ட கார்களுக்கு செம டிமாண்ட் போலிருக்கே.. சேல்ஸில் இப்பவே 4 லட்சத்த தொட்டிருச்சு!

கியா (Kia Motors) நிறுவனம் அதன் தயாரிப்புகளில் வழங்கும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக கார் இணைப்பு (Connected Car Tech) அம்சம் இருக்கின்றது. இந்த அம்சம் கொண்ட கார்களே விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியர்களின் ஃபேவரிட் கார் பிராண்டாக கியா மோட்டார்ஸ் உருவெடுத்தி இருக்கின்றது. தென்கொரியாவைச் சேர்ந்த இந்த கார் பிராண்டு நவீன தொழில்நுட்ப அம்சங்களை தன்னுடைய தயாரிப்பில் மிக தாராளமாக வழங்கிக் கொண்டிருப்பதனாலேயே இந்தியர்கள் மத்தியில் அது மிகப் பெரிய அளவல் பிரபலமைடந்துக் காட்சியளிக்கின்றது.

Kia connected car sale hits new milestone

அந்தவகையில், கியா நிறுவனம் அதன் தயாரிப்புகளில் வழங்கிக் கொண்டிருக்கும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக கார் இணைப்பு டெக்னாலஜி இருக்கின்றது. இந்த தொழில்நுட்பம் கொண்ட கியா கார்களுக்கே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாகவும், இந்த அம்சம் கொண்ட கார் விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டி இருப்பதாகவும் கியா தற்போது அறிவித்து இருக்கின்றது.

அது வெளியிட்டு இருக்கும் தகவலின்படி இதுவரை 4 லட்சம் யூனிட் கார் இணைப்பு அம்சம் கொண்ட கியா கார்கள் விற்பனையாகி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் இது 44 சதவீதம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் வாயிலாக கியாவின் கார் இணைப்பு அம்சத்திற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது துள்ளியமாக தெரிய வந்திருக்கின்றது.

மேலும், கியா கார் இணைப்பு அம்சம் கொண்ட கார் மாடல்களுக்கு தொடர்ச்சியாக வரவேற்பு அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும் கியா தெரிவித்து இருக்கின்றது. 30.9 சதவீதம் வரை அதிகரிப்பைச் சந்தித்து இருக்கின்றது. குறிப்பாக, கியா செல்டோஸின் கார் இணைப்பு அம்சம் கொண்ட தேர்விற்கே நல்ல அமோகமான வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலும் இதுவே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒட்டுமொத்த கன்னெக்டட் கார்கள் விற்பனையில் செல்டோஸ் (Seltos SUV) 65 சதவீத இடத்தைப் பிடித்திருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக சொனெட் (Sonet SUV) மற்றும் கேரன்ஸ் (Carens MPV) ஆகியவை இடம் பிடித்திருக்கின்றன.

கார் இணைப்பு அம்சத்தின் வாயிலாக ஹிங்கிலிஷ் (இந்தி+ஆங்கிலம்) வாய்ஸ் கமேன்ட்ஸ், ரிமோட் விண்டோ கன்ட்ரோல், ரிமோட் எஞ்சின் ஸ்டார்ட், ரிமோட் ஏசி ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளை கியா கார் இணைப்பு அம்சத்தின் வாயிலாக அதன் தயாரிப்புகளில் வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இப்போதைய நிலவரப்படி கியா நிறுவனம் இந்தியாவில் செல்டோஸ், சொனெட், கேரன்ஸ், கார்னிவல் ஆகிய கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றைத் தொடர்ந்து அந்நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் இவி9 எலெக்ட்ரிக் காரையும் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே இவி6 கார் மாடலை இந்தியாவில் கியா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தொழில்நுட்ப வசதிகள் அதிகம் கொண்ட கார்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு என்பதை வெளிக்காட்டும் வகையிலேயே கியாவின் இணைப்பு வசதிக் கொண்ட கார்களின் விற்பனை விபரம் அமைந்திருக்கின்றது. இந்த வகை கார்களுக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மேலும், இப்போது மட்டுமின்றி வரும் நாட்களிலும் அதற்கு டிமாண்ட் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு சான்றாகவும் தற்போதைய விற்பனை புள்ளி விபரம் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 7, 2024, 21:21 [IST]
English summary
Kia hits new milestone in connected cars sale
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+