கியா இப்படியே போச்சுனா டாடாவை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் போலயே!! முதல் டார்க்கெட் மஹிந்திரா தான்...

கியா (Kia), தென்கொரியாவை சேர்ந்த உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவிலும் மாதந்தோறும் ஆயிரக்கணக்கிலான கார்களை விற்பனை செய்கிறது. மேலும், இந்தியாவில் உற்பத்தி செய்யும் கார்களை மற்ற வெளிநாடுகளுக்கும் அதிக எண்ணிக்கையில் கியா ஏற்றுமதி செய்கிறது. இதனை வெளிக்காட்டும் வகையில், நடந்து முடிந்த 2024 செப்டம்பர் மாதத்தில் கியா இந்தியா நிறுவனம் விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்த கார்களின் எண்ணிக்கைகள் குறித்த விபரங்கள் கிடைத்து உள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உலகின் மிக பெரும் கார் சந்தைகளுள் ஒன்றான இந்தியாவில் சமீப காலத்தில் நுழைந்து வெற்றிநடை போட்டுவரும் வெளிநாட்டு கார் நிறுவனங்களுள் ஒன்று கியா ஆகும். 2019ஆம் ஆண்டில் செல்டோஸ் என்கிற எஸ்யூவி கார் மூலமாக இந்தியாவில் நுழைந்த கியா நிறுவனம், கார்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக ஆந்திராவில் அனந்தபுர் என்கிற பகுதியில் தொழிற்சாலையை நிறுவியது.

kia india september car sales

செல்டோஸை தொடர்ந்து சொனெட், கேரன்ஸ் என பல வெற்றிக்கரமான கார்களை இந்தியாவில் கியா அறிமுகம் செய்தது. இதன் மூலமாக, குறுகிய காலத்தில் இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக கியா உருவெடுத்து உள்ளது. கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் மட்டும் 23,523 கார்களை கியா இந்தியா நிறுவனம் உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டில் இதே செப்டம்பர் மாதத்தில் 20,022 கார்களை மட்டுமே இந்தியாவில் கியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, இந்தியாவில் கியா கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது 17% அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்புக்கு கியா சொனெட் காரின் பங்களிப்பு மிக முக்கியமானது ஆகும். கியாவின் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி காரான சொனெட் கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 10,335 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

kia india september car sales

தற்போதைக்கு சொனெட் தான் ஒரு மாதத்தில் 10 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனையாகும் ஒரே கியா கார் ஆகும். இதற்கடுத்து 2வது இடத்தில் இந்தியாவின் முதல் கியா காரான செல்டோஸ் உள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட செல்டோஸ் கார்களின் எண்ணிக்கை 6,959 ஆகும். இதற்கடுத்து 3வது இடத்தில் கியாவின் மாடர்ன் எம்பிவி காரான கேரன்ஸ் 6,217 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது.

இந்த 2024ஆம் ஆண்டின் ஜூலை- செப்டம்பர் என கடந்த 3 மாதங்களில் மொத்தம் 66,553 கார்களை இந்தியாவில் கியா விற்பனை செய்துள்ளது. இது, அதற்கு முந்தைய 3 மாத விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் ஏறக்குறைய 10% அதிகமாகும். இந்த 66,553 கார்கள் விற்பனையில் கியா சொனெட் காரின் பங்களிப்பு மட்டும் 45% ஆகும். இதற்கடுத்து, செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் கார்கள் முறையே 28% மற்றும் 27% பங்களிப்பை கொடுத்துள்ளன.

kia india september car sales

இந்த 3 கார்கள் மட்டுமின்றி, இவி6 என்கிற எலக்ட்ரிக் காரும் கியாவில் இருந்து இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் கியா நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக கார்னிவல் லிமௌசைன் பிளஸ் மற்றும் இவி9 என்கிற எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில், இவி9 எலக்ட்ரிக் கார் ஆனது இந்தியாவிற்கான கியாவின் 2.0 வெர்சனில் வெளிவரும் முதல் காராக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதற்காக மட்டுமின்றி, இந்தியாவில் உற்பத்தி செய்து கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவும் தான் முக்கியமாக இந்தியாவில் கியா களம்புகுந்தது. கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் மட்டும் 2,006 கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து கியா நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கியாவின் ஆதிக்கம் தொடர்ந்துக் கொண்டே போகிறது. மற்ற முன்னணி கார் நிறுவனங்களை போன்று கியாவின் திட்டங்களும் எலக்ட்ரிக் கார்களை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது. ஆனால், கியாவின் புதிய எலக்ட்ரிக் கார்கள் விலையுயர்ந்தவையாக இருக்கின்றன. விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் கியா இவி9 எலக்ட்ரிக் காரின் விலையும் ரூ.90 லட்சம் என்கிற அளவில் நிர்ணயிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 2, 2024, 13:00 [IST]
English summary
Kia india car sales and exports report 2024 september check all details here
மேலும்... #kia motors #kia #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X