இந்தியாவில் கார் விற்பனையில் தாறுமாறாய் வருவாய் பார்க்கும் கொரியன் நிறுவனம்- வாயை பிளக்கும் இந்திய நிறுவனங்கள்

கியா (Kia) நிறுவனம் இந்திய கார்கள் மார்க்கெட்டில் 2019ஆம் ஆண்டில் நுழைந்தது. இன்னும் சொல்லப்போனால், கியா கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட துவங்கி இன்னும் 5 வருடங்கள் கூட முழுமையாக நிறைவடையவில்லை. ஆனால், அதற்குள் இந்தியாவில் மக்கள் பலருக்கு பரீட்சையமான கார் நிறுவனமாக கியா வளர்ந்துவிட்டது. இதன் வெளிப்பாடாக, இந்தியாவில் கார்கள் விற்பனையில் ஒரு பிரம்மாண்ட மைல்கல்லை கியா நிறுவனம் கடந்துள்ளது. அது என்ன என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஹூண்டாய் நிறுவனத்தை போன்று, தென்கொரியாவில் இருந்து உலகளவில் வரவேற்பை பெற்றுவரும் கார் நிறுவனம் கியா ஆகும். நம் இந்திய மார்க்கெட்டில் கியா சற்று தாமதமாகவே நுழைந்தது என்றாலும், குறுகிய காலத்தில் இந்தியர்கள் பலருக்கு நன்கு தெரிந்த கார் நிறுவனமாக கியா முன்னேறிவிட்டது.

kia cars 10 Lakhs sold

இதன் வெளிப்பாடாக, இந்தியாவில் கார்கள் விற்பனையில் 10 இலட்சம் என்கிற இமாலய எண்ணிக்கையை கியா கடந்துள்ளது. அதாவது, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கியா கார்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்துள்ளது. இந்த இமாலய விற்பனை எண்ணிக்கையை வெறும் 59 மாதங்களில், அதாவது 5 வருடங்களுக்கு 1 மாதம் முன்னதாகவே கியா எட்டியுள்ளது.

2019 செப்டம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் நுழைந்த கியா நிறுவனம் அறிமுகப்படுத்திய முதல் கார் செல்டோஸ் ஆகும். இந்த 59 மாதங்களில் கியா நிறுவனம் விற்பனை செய்த 10 இலட்சம் கார்களில் 48 சதவீதம், அதாவது 4.80 லட்ச கார்கள் செல்டோஸ் ஆகும். இந்தியாவில் கியா நிறுவனத்திற்கு நல்ல வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த பெருமை செல்டோஸ் காரையே சேரும். அதன்பின், 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தனது முதல் சொகுசு காராக கார்னிவலை கியா அறிமுகம் செய்தது.

kia cars 10 Lakhs sold

விலைமிக்க பிரம்மாண்டமான எம்பிவி கார் என்பதினாலேயே கார்னிவலின் விற்பனை பெரியதாக இல்லை. இதில் சூதாரித்து கொண்ட கியா, தனது 3வது காரை செல்டோஸை விட விலை குறைவானதாகவும், மிடில்-கிளாஸ் மக்கள் அனைவராலும் வாங்கக்கூடியதாகவும் அளவில் சிறியதாகவும் அறிமுகப்படுத்தியது. அதுதான், கியா சொனெட் என்கிற சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் ஆகும்.

இந்தியாவில் கியா நிறுவனத்தை விளம்பரப்படுத்திய பெருமையை செல்டோஸுக்கு இணையாக சொனெட் பெறுகிறது. ஆனால், செல்டோஸ் கார்களை காட்டிலும் சொனெட் கார்களின் விற்பனை எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஏனெனில், செல்டோஸ் அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு பின்பே சொனெட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் கியா விற்பனை செய்துள்ள 10 இலட்ச கார்களில் 3.40 லட்ச கார்கள் சொனெட் ஆகும்.

kia cars 10 Lakhs sold

2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கியா கேரன்ஸ் எம்பிவி கார், நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 16% பங்களித்துள்ளது. வருடம் வாரியாக பார்த்தால், முதல் 2019ஆம் ஆண்டில் வெறும் 45,226 கார்களை மட்டுமே இந்தியாவில் கியா விற்பனை செய்திருந்தது. அந்த வருடத்தில் கடைசி 4 மாதங்களில் மட்டுமே கியா செல்டோஸ் விற்பனை செய்யப்பட்டது. 2020ஆம் ஆண்டில் 1 லட்சத்து 40,505 கார்களை கியா விற்பனை செய்திருந்தது.

இதனை காட்டிலும், 2021ஆம் ஆண்டில் சற்று அதிகமாக 1 லட்சத்து 81,583 கியா கார்கள் விற்கப்பட்டு இருந்தன. ஆனால், அதன்பின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் கியா கார்களின் விற்பனை எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்திருந்தது. அதாவது, அந்த ஆண்டுகளில் ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 20 ஆயிரத்திற்கும் அதிகமான கியா கார்கள் விற்பனை செய்யப்பட்டன. 2024ஆம் ஆண்டில் இருந்து இப்போதுவரையில், 1.5 லட்ச கியா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனம் அளவிற்கு வேறெந்த நிறுவனமும் குறுகிய காலத்தில் இந்த அளவிற்கு வளர்ச்சியை கண்டதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் இந்த 10 இலட்ச கார்கள், கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். தெலுங்கானாவில் தொழிற்சாலையை கொண்டுள்ள கியா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யும் கார்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 10, 2024, 8:00 [IST]
English summary
Kia india car sales crossed 10 lakhs check all details here
மேலும்... #kia #kia motors #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X