விட்டா மாருதியையே தூக்கி சாப்பிட்றுவாங்கலாட்ட இருக்கு... புதுசா வந்த கம்பெனி ஒரு காட்டு காட்டிகிட்டு இருக்கு!

2024ம் ஆண்டின் ஜூன் மாதம் முடிவடைந்து, ஜூலை மாதத்தில் தற்போது நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த தருணத்தில், முன்னணி கார் நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் (Sales Reports) தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இதன்படி கியா இந்தியா (Kia India) நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டும் வெளியாகியுள்ளது. கியா நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய சந்தையில், 19,391 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 21,300 கார்களாக உயர்ந்துள்ளது.

இது 9.8 சதவீத வளர்ச்சியாகும். இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கியா நிறுவனத்தின் கார் என்ற பெருமையை சொனெட் (Kia Sonet) பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 9,816 கியா சொனெட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Kia Sonet

ஜூன் மாத விற்பனையில் மட்டுமல்லாது, நடப்பு 2024ம் ஆண்டின் முதல் பாதி விற்பனையிலும், கியா இந்தியா நிறுவனம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஜூன் மாதத்துடன், 2024ம் ஆண்டின் முதல் பாதி (6 மாதங்கள்) முடிவடைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் கியா நிறுவனம் இந்திய சந்தையில் 1,26,137 கார்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த 2023ம் ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது, இது 6 சதவீத வளர்ச்சி ஆகும். ஜூன் மாத விற்பனையை போல், நடப்பு 2024ம் ஆண்டின் முதல் பாதியிலும், இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கியா நிறுவனத்தின் கார் என்ற பெருமையை சொனெட் பெற்றுள்ளது.

Kia Seltos

கியா நிறுவனம் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்த 1,26,137 கார்களில், 43 சதவீதம் சொனெட் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா சொனெட் காரின் ஆரம்ப விலை 7.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 15.75 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) விலை ஆகும். கியா சொனெட் காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் ஆகும்.

இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) உள்ளிட்ட கார்களுடன், கியா சொனெட் போட்டியிட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் காலடி எடுத்து வைத்த கியா நிறுவனம் இங்கு மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதை இந்த சேல்ஸ் ரிப்போர்ட் நமக்கு தெளிவாக எடுத்து காட்டியுள்ளது. வரும் காலங்களில் கியா நிறுவனம் இன்னும் பல்வேறு புதிய கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இதில், கியா சைரோஸ் (Kia Syros), புதிய தலைமுறை கியா கார்னிவல் (New Generation Kia Carnival) மற்றும் கியா இவி9 (Kia EV9) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்த கார்களின் வருகைக்கு பின்னர், கியா நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, July 1, 2024, 23:49 [IST]
English summary
Kia india sales report june 2024 sonet leads chart
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+