தரமான கொரியன்-ஸ்டைல் கார்!! புதுசா கார் வாங்குவதற்கு நேரம் வந்தாச்சு - விலை ரூ.10.89 லட்சம்
கியா (Kia) நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட செல்டோஸ் (Seltos) காரை சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, செல்டோஸ் மாடலில் சில வசதிகள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, செல்டோஸ் காரில் புதியதாக இரு வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம் வாங்க.
ஹூண்டாய் நிறுவனத்தை போன்று தென்கொரியாவை சேர்ந்த கார் நிறுவனமான கியா இந்தியாவில் முதன்முதலாக 2019ஆம் ஆண்டில் நுழைந்தது. இந்தியாவில் கியாவின் முதல் காராக செல்டோஸ் 2019ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு வருடத்திலும் தவறாமல் அப்டேட் செய்யப்பட்டு வரும் செல்டோஸ் காரின் லேட்டஸ்ட் வெர்சன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய செல்டோஸ் காரின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், சில புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஏற்கனவே கூறியதுபோல் பெட்ரோல் ஜி1.5 எச்டிகே+ ஐவிடி மற்றும் டீசல் 1.5 லிட்டர் சிஆர்டிஐ விஜிடி எச்டிகே+ 6-ஆட்டோமேட்டிக் என்கிற இரு புதிய வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய வேரியண்ட்கள் இரண்டும் செல்டோஸின் மிட்-வேரியண்ட்டான எச்.டி.கே+ இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதிய வேரியண்ட்களில் ட்யூயல் பேன் பனோராமிக் சன்ரூஃப் மற்றும் டிரைவ் & டிராக்ஷன் கண்ட்ரோல் மோட்கள் சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, பெடில் ஷிஃப்டர்கள் மற்றும் ஸ்டார் மேப் எல்இடி-கனெக்டட் டெயில் லேம்ப்களையும் இந்த புதிய வேரியண்ட்கள் பெற்றுள்ளன. மேலும், புதிய வேரியண்ட்களின் மூலம் இந்த வசதிகளை அனைத்து செல்டோஸ் எச்டிகே+ வேரியண்ட்களும் பெற்றுள்ளன.
அதேபோல், செல்டோஸ் எச்டிகே வேரியண்ட்டிலும் ஸ்டார் மேப் எல்இடி டி.ஆர்.எல்-கள், ஸ்கூட்டரை மற்றும் என்ஜினை எளிமையாக ஸ்டார்ட் & ஸ்டாப் செய்வதற்கு உதவியாக ஸ்மார்ட் கீ மற்றும் ஸ்டார் மேப் எல்இடி-கனெக்டட் டெயில் லேம்ப்கள் உள்பட சில புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கியா செல்டோஸின் விலைமிக்க எச்.டி.எக்ஸ் வேரியண்ட்டிலும் வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் செயல்படும் பவர் விண்டோஸ் அனைத்து கதவுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட 2024 செல்டோஸ் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.89 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.10.89 லட்சத்தில் எண்ட்ரீ-லெவல் எச்.டி.எக்ஸ் வேரியண்ட் கிடைக்கும். இந்த எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டை இனி 5 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் வாங்கலாம். அரோரா கருப்பு பேர்ல், கிராவிட்டி கிரே, இண்டென்ஸ் சிவப்பு, பெவ்டெர் ஆலிவ் மற்றும் இம்பெரீயல் நீலம் என்பன அந்த 5 பெயிண்ட் ஆப்ஷன்கள் ஆகும்.

புதிய அப்டேட்களினால், இந்தியாவில் கியா செல்டோஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முழுவதுமாக அப்டேட் செய்யப்பட்டுள்ளன. செல்டோஸ் காரின் அதிகப்பட்ச எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.20.35 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடன் எக்ஸ்-லைன் வேரியண்ட் கிடைக்கும். செல்டோஸ் காரின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள் இந்த ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளன.
புதிய செல்டோஸின் அறிமுகம் குறித்து கியா இந்தியா நிறுவனத்தின் சேல்ஸ் & பிஸ்னஸ் பிரிவின் முதன்மை அதிகாரி மியுங்-சிக் சோஹ்ன் கூறுகையில், "செல்டோஸ் மீது இந்தியாவின் பாசம் தெளிவாக உள்ளது. எங்களின் புதிய தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு அதை தொடர்ந்து மேம்படுத்துவதே எங்கள் குறிக்கோள்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்களின் விற்பனையை தொடர்ந்து உச்சத்தில் வைத்திருக்க வேண்டுமெனில், இவ்வாறான புது, புது அப்டேட்கள் அவசியமாகுகின்றன. இதற்கு ஏற்றவாறு கியா நிறுவனமும் மறக்காமல் இந்தியாவில் அதன் கார்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் அப்டேட் செய்து வருகிறது. இந்த முறை, செல்டோஸ் தொழிற்நுட்ப அம்சங்கள் ரீதியாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








