இந்தியர்களுக்காக செல்டோஸில் கூடுதல் ட்ரிம்களை இணைத்த கொரிய நிறுவனம்.. மீண்டும் தலை தூக்கும் டீசல் ஆதிக்கம்!
இந்தியர்களின் ஃபேவரிட் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் ஒன்றாக கியா செல்டோஸ் (Kia Seltos) இருக்கின்றது. இந்த கார் மாடலிலேயே தற்போது ஐந்து புதிய ட்ரிம் (New Trim)-களை இணைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை என்ன? அவற்றின் விலை என்ன? இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
தென்கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia), அதன் புகழ்பெற்ற எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் ஒன்றான செல்டோஸ் (Seltos)-இல் கூடுதலாக மேலும் சில புதிய ட்ரிம்களை விற்பனைக்கு இணைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிதாக எச்டிஇ (HTE), எச்டிகே (HTK), எச்டிகே பிளஸ் (HTK+), எச்டிஎக்ஸ் (HTX) மற்றும் எச்டிஎக்ஸ் பிளஸ் (HTX+) ஆகிய ட்ரிம்களை அது புதிதாக தற்போது விற்பனைக்கு இணைத்திருக்கின்றது.

செல்டோஸின் டெக்-லைன் தேர்விலேயே இவை விற்பனைக்கு இணைக்கப்பட்டு இருக்கின்றன. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதிக் கொண்ட 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் எஞ்சினுடனேயே இந்த ட்ரிம்கள் விற்பனைக்குக் கிடைக்கும். மேலும், மிக சவாலான விலையே இந்த கார்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
ரூ. 11 லட்சத்து 99 ஆயிரத்து 900-மே இதன் ஆரம்ப விலை ஆகும். அதிகபட்ச விலையாக ரூ. 18.27 லட்சம் உள்ளது. புதிய ட்ரிம்கள் இணைப்பால் தற்போது கியா செல்டோஸின் வரிசை அதிகரித்துள்ளது. 24 வேரியண்டுகளாக அது அதிகரித்து இருக்கின்றது. நாட்டின் ஐந்தாவது மாபெரும் கார் உற்பத்தி நிறுவனமாக கியா விளங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த இடத்தில் இருந்து முன்னணி இடங்களுக்கு நகரும் நோக்கில் அந்நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் அடிப்படையிலேயே சமீபத்தில் 2024 சொனெட் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது கியா செல்டோஸில் மேலும் சில ட்ரிம்களை புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
இந்தியாவில் செல்டோஸுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் செல்டோஸின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை விற்பனைக்குக் களமிறக்கியது. இதற்குள்ளாக 65 ஆயிரம் யூனிட் விற்பனையை அது எட்டியது. இத்தகைய வரவேற்பை இந்த கார் பெற்றுக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே செல்டோஸில் டீசல் தேர்வுகளை அதிகளவில் கியா தற்போது விற்பனைக்கு களமிறக்கி இருக்கின்றது.
அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய ஓர் கார் மாடலே கியா செல்டோஸ் ஆகும். உதாரணமாக, 32 வகையான பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில், 15 பாதுகாப்பு அம்சங்கள் மிக மிக முக்கியமானவை ஆகும். இத்துடன், லெவல் 2 வகை அடாஸ் தன்னாட்சி அம்சமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
எனவே மிட்-சைஸ் எஸ்யூவி கார் பிரிவில் அதிக பிரீமியம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைத் தாங்கிய கார் மாடலாக செல்டோஸ் காட்சியளிக்கின்றது. இந்த காரில் இரண்டு நவீன அம்சங்கள் கொண்ட திரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 26.04 செமீ அளவுள்ள முழு டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் 26.03 செமீ அளவுள்ள எச்டி தொடுதிரையே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த திரை வாயிலாக நேவிகேஷனைப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், டூயல் ஜோன் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் ஏர் கன்டிஷனர் மற்றும் ஆர்17 43.66 செமீ அளவுள்ள கிரிஸ்டல் கட் அலாய் வீல் ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், மேலும் சில முக்கிய அம்சங்களாக டூயல் பேன் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் ஆகியவையும் கியா செல்டோஸில் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கியா செல்டோஸ் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே நிறுவனம் இந்த கார் மாடலில் கூடுதல் ட்ரிம்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. நிறுவனத்தின் இந்த செயல் செல்டோஸ் மீதான வரவேற்பை இன்னும் அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








