கடலில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து காருக்கான அணிகலனை தயார் செய்த கியா..

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia), கார்களுக்கான பிரத்யேக அக்சஸரீ (Accessory)-களை தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அக்சஸரீஸ்களை அந்நிறுவனம் மறுசுழற்சி (Recycled) செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளில் இருந்து தயார் செய்யப்பட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. அது குப்பைக் கிடங்குகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக்குகள் அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. மாறாக, கியா நிறுவனம் பசுபிக் பெருங்கடலில் இருந்து சேகரித்த பிளாஸ்டிக்குகளின் வாயிலாகவே அது கார்களுக்கான பிரத்யேக அக்சஸரீஸ்களை தயார் செய்து இருக்கின்றது.

பசுபிப் பெருங்கடலில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக்கு கழிவுகளை மறுசுழற்சி செய்து வாகனங்களுக்கான அக்சஸரீஸ்களை தயார் செய்த முதல் நிறுவனம் இதுவே ஆகும். தி ஓசோன் கிளீன்-அப் (The Ocean Cleanup) எனும் நிறுவனத்துடன் இணைந்தே இந்த பணியை கியா செய்து இருக்கின்றது.

Kia unveils car accessory from ocean plastic

தி ஓசோன் கிளீன்-அப் என்பது இலாப நோக்கமற்ற அமைப்பு ஆகும். இது நீண்ட காலமாக பசுபிக் பெருங்கடலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. மனிதர்களால் மாசாக்கப்பட்ட மற்றும் மனிதர்களில் கடலில் வீசப்பட்ட குப்பைகளை கடலில் இருந்து அகற்றும் பணிகளையே இந்த அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

இந்த அமைப்பிற்கே நீண்ட காலமாக தன்னுடைய ஒத்துழைப்பை கியா நிறுவனம் வழங்கி வருகின்றது. 2022 ஆம் ஆண்டில் இருந்தே இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையிலேயே பசுபிக் பெருங்கடலில் இருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து கியா கார்களுக்கான பிரத்யேக அணிகலன்களை தயார் செய்து லிமிடெட் எடிசனாக விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

Kia made car accessory from ocean plastic

தன்னுடைய புகழ்பெற்ற கார் மாடலான கியா இவி3 (Kia EV3) வாகனத்திற்கான டிரங்க் லைனர் (trunk liner)-ரையே அது தயார் செய்திருக்கின்றது. குறிப்பிட்ட உலக சந்தையில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். கியா இவி3 ஓர் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். உலகின் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இத்தகைய கார் மாடலுக்கான பிரத்யேக அக்சஸரீஸ்களை அது தற்போது அறிமுகப்படுத்தி இருக்கின்றது. விரைவில் இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பு அணிகலன்களையும் அது தயார் செய்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது. மிக முக்கியமாக தன்னுடைய வாகனங்களில் 20 சதவீதம் வரை மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தவும் அது திட்டமிட்டு இருக்கின்றது.

2030 ஆம் ஆண்டிற்குள்ளாக இந்த இலக்கை எட்டிவிடும் என தெரிவித்திருக்கின்றது. கியா இவி3, ஓர் ஏஐ தொழில்நுட்ப வசதிக் கொண்ட கார் மாடல் ஆகும். வாகனம் சார்ந்த பல்வேறு உதவிகளை இது வழங்கும். இதுதவிர, சில பிரத்யேக பரிந்துரைகளையும் வாகன பயன்பாட்டின்போது இந்த தொழில்நுட்பம் வழங்கும்.

இந்த எலெக்ட்ரிக் கார் ஓர் முழு சார்ஜில் 605 கிமீ ரேஞ்சை வழங்கும். இந்த அதிக ரேஞ்ச் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 81.4kWh பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய திறன் கொண்ட காரையே உளக சந்தையில் மட்டும் கியா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் மாடலையும், இவி9 எலெக்ட்ரிக் கார் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் இவி9 லேட்டஸ்ட் அறிமுகம் என்பது கவனிக்கத்தகுந்தது. உலகின் பல்வேறு விருதுகளை பெற்ற மற்றும் அதிக சிறப்பம்சங்களைத் தாங்கிய ஓர் எலெக்ட்ரிக் கார் மாடலே இதுவாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடலில் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் மாசுறுவதுடன், கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்தை அவை ஏற்படுத்துகின்றன. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டே தி ஓசோன் கிளீன்-அப் அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்துடனான கூட்டணியின் வாயிலாக பிளாஸ்டிக்குகளை மறு சுழற்சி கியா வாகனங்களில் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 16, 2024, 21:38 [IST]
English summary
Kia launches innovative car accessory crafted from recycled plastic collected from pacific ocean
மேலும்... #kia motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+