கியா உருவாக்க போகிற வாகனங்களை பார்த்து எல்லாரும் செம்ம ஷாக்... ஹாலிவுட் படங்களில் கூட இப்படி பார்க்க முடியாது!

கியா (Kia), தென்கொரியாவை சேர்ந்த முன்னணி கார் நிறுவனம். மற்ற கார் நிறுவனங்களை போன்று, எலக்ட்ரிக்கை நோக்கி நகர்ந்து வரும் கார் நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிலையில், கியா நிறுவனம் அதன் எதிர்கால எலக்ட்ரிக் கார் கான்செப்ட்களை வெளியீடு செய்துள்ளது. ஆனால், இவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட உள்ள கியா கார்கள் தனி நபர் பயன்பாட்டிற்காக இல்லாமல், பிரத்யேகமான கமர்ஷியல் பயன்பாட்டிற்கானவைகளாக இருக்கும். அதாவது, டெலிவிரி சர்வீஸ்கள், கார் ஷேரிங் போன்றவற்றிற்கு பயன்படுத்தக் கூடியவைகளாக இருக்கும் என கியா தெரிவித்துள்ளது. கியா வெளியீடு செய்துள்ள இந்த புதிய கான்செப்ட்கள் குறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

கியா கான்செப்ட் பிவி1 (PV1): இந்த கான்செப்ட்டில் இருந்து உருவாக்கப்பட உள்ள கியா எலக்ட்ரிக் வாகனம் ஆனது போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புற சாலைகளில் எளிதாக நுழைந்து செல்லக் கூடியவைகளாக அளவில் சிறியதாக இருக்கும். இதனால், இந்த எலக்ட்ரிக் வாகனம் ஆனது டெலிவிரி சர்வீஸ்களிலும், கார் ஷேரிங் தொழில்களிலும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்கும்.

kia purpose-built ev concepts unveiled

அளவில் சிறியதாக இருப்பினும், பிவி1 கான்செப்ட்டில் இருந்து உருவாக்கப்படும் எலக்ட்ரிக் வாகனத்தினுள் விசாலமான இடவசதி மற்றும் தாழ்வான உடலமைப்பை பெறலாம் என கியா தெரிவித்துள்ளது. அதேபோல், அந்த வாகனத்தினுள் நின்று கொண்டு பணியாற்றவும் முடியம் என கியா கூறுகிறது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, வைகல் டூ லோடு வசதியும் இந்த வாகனத்தில் இருக்குமாம். இதன் மூலமாக, வாகனத்தின் மோட்டார் பவரை கொண்டு மற்ற மின்சாதன பொருட்களை பயன்படுத்தலாம்.

பிவி5 (PV5): பிவி1 கான்செப்ட்டில் இருந்து உருவாக்கப்படும் எலக்ட்ரிக் வாகனத்தை காட்டிலும் பிவி5 கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்படுவது அளவில் இன்னும் கொஞ்சம் பெரியதாக இருக்கும். இதற்கேற்ப மொத்தம் 4 கதவுகளை கொண்டதாக அந்த வாகனம் இருக்கும். பயணிகள் மற்றும் அவர்களது சுமைகளை ஒரே இடத்தில் கொண்டு செல்லக்கூடியதாக இந்த வாகனம் இருக்கும்.

kia purpose-built ev concepts unveiled

இருக்கைகளை மடக்கினால் கூடுதல் இடவசதி கிடைக்கும் வகையில் உட்புற கேபின் வடிவமைக்கப்படலாம். அதுமட்டுமின்றி, எலக்ட்ரிக் வாகனம் என்பதால் உட்பக்கத்தில் இடவசதி நிச்சயமாக அதிகமாக கிடைக்கும். இதனால், டாக்ஸி & கார்கோ என இரு விதமான போக்குவரத்துக்கும் மாற்றி, மாற்றி இந்த வாகனத்தை பயன்படுத்த முடியும்.

பிவி7 (PV7): இந்த கான்செப்ட்டில் உருவாக்கப்படுவது எலக்ட்ரிக் வேன் ஆக இருக்கும். ஆனால், ஜன்னல்கள் முழுவதும் அடைக்கப்பட்டு உள்ளதால், இதில் பயணிகளை அழைத்து செல்வது ஏற்றதாக இருக்காது. அதிகளவில் சரக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கு ஏற்றதாக இருக்கும். ஆதலால், சிறிய அளவிலான வணிகங்களை மேற்கொள்வோருக்கு உகந்த வாகனமாக இது இருக்கும்.

kia purpose-built ev concepts unveiled

மேலும், ஹெவி-ட்யூட்டி வேலைகளையும் மேற்கொள்ள கூடியதாக இந்த வாகனம் இருக்கும். இதற்கேற்ப அட்வான்ஸான தொழிற்நுட்ப மற்றும் பாதுகாப்பு வாதிகளை கொண்டதாக இந்த வாகனம் இருக்கும். வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால், இந்த எலக்ட்ரிக் வாகனத்தை பயணிகளை அழைத்துச் செல்லக்கூடியதாகவும் கியா நிறுவனம் மாற்றி வழங்கலாம்.

3 கான்செப்ட்களிலும் உள்ள ஒற்றுமை: இந்த 3 கான்செப்ட்களும் மாடர்ன் தரத்திலானவை ஆக உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பயணத்தை எந்த பக்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு சரியான வழிக்காட்டுதலை வழங்கக்கூடிய மென்பொருளை இவற்றில் கியா நிறுவனம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த 3 கான்செப்ட் வாகனங்களும் தாழ்வான கிரவுண்ட் க்ளியெரென்ஸை கொண்டுள்ளன. இதனால் இவற்றில் பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றுவதும் இறக்குவதும் எளியதாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்றும் கான்செப்ட் மாதிரிகளே என்பதை மறந்துவிட வேண்டாம். அதாவது, இவற்றின் அடிப்படையில் வரும் ஆண்டுகளில் எலக்ட்ரிக் வாகனங்களை கியா உருவாக்கவுள்ளது. ஆனால், அவை கிட்டத்தட்ட இதே தோற்றத்தில்தான் இருக்கும் என உறுதியளிக்க முடியாது. குறிப்பாக, அளவில் சிறியதாக உருவாக்கப்படும் பிவி1 வாகனத்தில் கியா கூறியுள்ளது எல்லாம் சாத்தியப்படுமா என்பது தற்போதைக்கு கேள்விக்குறியாகவே உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, July 22, 2024, 8:00 [IST]
English summary
Kia purpose built electric vehicle concepts unveiled check all details here
மேலும்... #kia #kia motors #electric vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X