இந்த மின்சார காருல பயமே இல்லாம 600கிமீ பயணிக்கலாமா! டாடா ஷோரூம் போனவங்க கியாவ தேடி வரும் நேரம் வந்தாச்சு!
கியா நிறுவனம் இன்று ஓர் புதுமுக எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்திருக்கின்றது. அது இவி3 எனும் புத்தம் புதிய காரையே வெளியீடு செய்துள்ளது. இது ஓர் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவை அலங்கரிக்கும் விதமாக இந்த கார் மாடலை கியா தயார் செய்திருக்கின்றது.
மிகவும் போல்ட்டான டிசைன், நவீன கால தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் புதுமையான சிறப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை தாங்கிய வாகனமாக இந்த காரை உருவாக்கி இருப்பதாக கியா அதன் அறிவிப்பில் தெரிவித்து இருக்கின்றது. பலதரப்பட்ட விருதுகளை வென்ற கார் மடாலாக கியா நிறுவனத்தின் இவி9 எலெக்ட்ரிக் கார் மாடல் இருக்கின்றது.

இந்த கார் மாடலின் உரிமையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலேயே இவி3 எலெக்ட்ரிக் காரை தாங்கள் தயார் செய்திருப்பதாகவும் அது தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், கியா இவி9 எஸ்யூவி-யைவிட இந்த காம்பேக்ட் எஸ்யூவி எலெக்ட்ரிக் கார் மிக சிறந்த கியா தயாரிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தனித்துவமான மற்றும் புதிய அனுபவத்தையும் இந்த எலெக்ட்ரிக் கார் மாடல் வழங்கும் என கியா உறுதியாக தெரிவித்து இருக்கின்றது. மேலும், இந்த எலெக்ட்ரிக் காரை ஒன்பது விதமான வண்ண தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கவும் கியா நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. ஒன்பதில் அவென்சுரின் கிரீன் (Aventurine Green) மற்றும் டெர்ரகோட்டா (Terracotta) ஆகிய நிறங்கள் மட்டும் இந்த கார் மாடலுக்கு என தனித்துவமாக தயார் செய்யப்பட்டது என கியா தெரிவித்து இருக்கின்றது.

ஆகையால், இந்த கார் மாடலுக்கு இப்போதே மின்சார கார் காதலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிற தொடங்கிவிட்டது. ஐந்து பேர் வரை இந்த எலெக்ட்ரிக் காரில் தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியுமாம். ஐந்து பேர் பயணித்தாலும் அதிக இடவசதி இந்த காரில் தாராளமாக கிடைக்கும் என கியா கூறி இருக்கின்றது.
மேலும், பிரீமியம் ரைடு அனுபவத்தையும் இந்த கார் மாடல் வழங்கும் என தெரிவித்து இருக்கின்றது. இந்த அனுபவத்திற்காக மல்டி அட்ஜெஸ்டபிள் ஆம்பியன்ட் லைட், அல்ட்ரா சொகுசான இருக்கைகள், அதிக லக்கேஜை ஏற்றி செல்வதற்கான வசதி ஆகியவற்றை இந்த காரில் வழங்கி இருக்கின்றது.

இந்த இருக்கை ஓய்வெடுக்கவும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என கியா தெரிவித்துள்ளது. அதாவது, வழக்கமான கார்களில் சாய்வதைக் காட்டிலும் கியா இவி3 காரில் வழங்கப்பட்டு இருக்கும் இருக்கை அதிகமாக சாயும். எனவே ஒரு குட்டி தூக்கத்தைக்கூட இந்த காரில் போட்டுக் கொள்ள முடியும்.
இதுதவிர, 12.3 அங்குல கிளஸ்டர், 5 அங்குல ஏசி துவாரம், 12.3 அங்குல திரை (க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றை இதில் கன்ட்ரோல் செய்ய முடியும்) போன்ற வசதிகளும் இவி3-இல் வழங்கப்பட்டு இருப்பதாக கியா தெரிவித்து இருக்கின்றது. மேலும், கூடுதல் சிறப்பு வசதிகளாக இந்த காரில் க்ரூஸ் கன்ட்ரோல், டிரைவ் மோட், பொழுதுபோக்கு வசதிகள், நேவிகேஷன் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கு இருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் காரில் பேட்டரி பேக்கைப் பொருத்த வரை 58.3 kWh மற்றும் 81.4 kWh ஆப்ஷன்களே வழங்கப்பட இருக்கின்றன. இந்த இரண்டு ஆப்ஷனிலும் 150 kW மற்றும் 283 என்எம் டார்க்கை வெளியேற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரே வழங்கப்படும் என்றும் கியா கூறி இருக்கின்றது.
இந்த மோட்டாரின் டாப் ஸ்பீடு மணிக்கு 170 கிமீ ஆகும். மேலும், இதனால் வெறும் 7.5 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். இது ஓர் முழு சார்ஜில் 400 கிமீ முதல் 600 கிமீ ரேஞ்ஜ் தரும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இந்த ரேஞ்ஜ் திறனுக்காக பலர் இந்த காரை போட்டி போட்டுக் கொண்டு வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு வரும் பட்சத்தில் டாடா நெக்ஸான் மற்றும் எம்ஜி இசட்எஸ் இவி-க்கு போட்டியாக அமையும். ஆனால், இந்த கார் கொரியாவிலேயே முதலில் விற்பனைக்கு களமிறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
2024-ம் ஆண்டிற்குள் இதன் அறிமுகம் அரங்கேறிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு பின்னரே இந்தியா போன்ற உலக நாடுகளில் கியா இவி3 விற்பனைக்கு வர இருக்கின்றது. ஆனால், இதன் இந்திய வருகை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதேவேளையில், இந்த எலெக்ட்ரிக் கார் கட்டாயம் இந்தியா வரும் என்றும், அதுவும், 2025 முடிவிற்குள் அரங்கேறிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கியா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரில் ஏஐ அசிஸ்டன்ட் வசதி, எலக்ட்ரிக் டைனமிக் டார்க் வெக்டரிங் கண்ட்ரோல் வசதிக் கொண்ட அட்வான்ஸ்டு டிரைவிங் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (Advanced Driving Assistance Systems) ஆகியவற்றையும் வழங்க இருக்கின்றது. அடாஸ் அம்சத்தின் வாயிலாக இன்னும் பல பாதுகாப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அந்தவகையில், முன்பக்கத்தில் மோதலை தவிர்க்கும் வசதி, ஒரே லேனில் பயணிக்கும் வசதி, நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணிப்பதற்கான வழிக்காட்டுதல், பின் பக்க மோதலை தவிர்க்கும் வசதி என ஏகப்பட்ட வசதிகளை அடாஸ் அம்சத்தின் வாயிலாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. டாடா நெக்ஸானே இதற்கு சான்றாக இருக்கின்றது. இதுவே இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலாகும். இதேபோல், கியா இவி6 மின்சார காருக்கும் நல்ல டிமாண்ட் சொகுசு கார் காதலர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதேமாதிரியான வரவேற்பே கியா இவி3 விற்பனைக்கு வந்தால் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









